Simmam Rasi Palan: அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. பணவரவு கொட்டும்.. கோபம் மட்டும் வேண்டாம்
பிப்ரவரி மாத ராசி பலன்: 2026 ஆம் ஆண்டில் முதல் மாதமான ஜனவரி மாதம் நிறைவடைந்துள்ளது. நாளை பிப்ரவரி மாதம் பிறக்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். இந்த பிப்ரவரி மாதத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். சந்திரன் தன்னுடைய கடக ராசியில் ஆட்சி வீட்டில் அமர்கிறார். சொந்த வீட்டில் ஆரம்பித்து சொந்த வீட்டிலேயே இந்த மாதத்தை நிறைவு செய்வார்.

கேது பகவான் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கிறார். சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் மகர ராசியில் அமர்ந்திருக்கின்றனர். மகரத்தில் செவ்வாய் உச்சமடைந்துள்ளது. கும்ப ராசியில் புதன் பகவானும், செவ்வாயும் அமர்ந்திருக்கின்றனர். மீனத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். அந்த வகையில், இந்த பிப்ரவரி மாதத்தில் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசிக்காரர்கள் பெற்றோர், பெரியோருடன் இணக்கமாக இருப்பது நல்லது. காதல், துணை, முதலாளிகள், மேலதிகாரிகளிடமும் பொறுமை, நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. 24 வயதைக் கடந்த சிம்ம ராசியினர் கால், பாதம், முதுகு போன்ற விஷயங்களில் ஏற்படும் பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சியைக் கடைப்பிடிப்பது நல்லது.
கோபம் வேண்டாம்
8 ஆம் இடத்தில் சனி இருப்பதால் தேவையில்லாமல் கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. சிறிய கோபமும் பெரிய கஷ்டத்தைக் கொடுக்கக் கூடும். நல்ல நட்பையோ, உறவையோ இழக்கும் சூழல் ஏற்படும் என்பதால் இணக்கமாகச் செல்வது நல்லது. கோபப்பட்டு பேசினால் மீண்டும் சேராத வகையில் உறவுகள் பிரியும் நிலை உள்ளது. அரசுத் துறை, அரசியல்வாதிகள் அற்புதமான முன்னேற்றத்தைப் பெறுவீர்கள்,
பணவரவு
மனம் சார்ந்த பிரச்சனைகள், பணம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். பதவி உயர்வில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் எல்லாம் நடக்கும் காலகட்டமாக இருக்கும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணம் என எல்லாவித பயணங்களும் அற்புதமான அமைப்பையும், சந்தோஷமான சூழ்நிலையையும் பெற்றுத் தரும்.
தொழில்
சிம்ம ராசியினருக்கு தொழில் ரீதியாக நிறைய விஷயங்கள் சாதகத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் அற்புதமான காலகட்டம்.
வழிபாடு
எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் உண்டாகும். விநாயகர் வழிபாடு மிகப்பெரிய ஏற்றத்தையும், மன நிம்மதியையும் கொடுக்கும்.
-
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
Magaram: அடித்தாடும் மகர ராசி.. ஜாக்பாட் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
Thulam Rasi Palan: துலாம் ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. மறந்தும் இந்த விஷயங்களை செய்திடாதீங்க -
கோடீஸ்வர யோகம் பெறும் விருச்சிக ராசி.. வேலை விஷயத்தில் வரப்போகும் ஆபத்து.. கவனம் -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
Kumbam: வெற்றியை குவிக்கும் கும்ப ராசி.. இந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்க..! -
Dhanusu: தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ராஜா வாழ்க்கை வாழ போறீங்க -
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications