விருச்சிக ராசிக்கு கைகொடுக்கும் கிரகங்கள்.. பண வரவு கன்ஃபார்ம்.. தைரியம் கூடும் நேரம்
பிப்ரவரி மாத ராசி பலன்: 2026 ஆம் ஆண்டில் முதல் மாதமான ஜனவரி மாதம் நிறைவடைந்து பிப்ரவரி மாதம் பிறந்துள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். இந்த பிப்ரவரி மாதத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். சந்திரன் தன்னுடைய கடக ராசியில் ஆட்சி வீட்டில் அமர்கிறார். சொந்த வீட்டில் ஆரம்பித்து சொந்த வீட்டிலேயே இந்த மாதத்தை நிறைவு செய்வார்.

கேது பகவான் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கிறார். சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் மகர ராசியில் அமர்ந்திருக்கின்றனர். மகரத்தில் செவ்வாய் உச்சமடைந்துள்ளது. கும்ப ராசியில் புதன் பகவானும், செவ்வாயும் அமர்ந்திருக்கின்றனர். மீனத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். அந்த வகையில், இந்த பிப்ரவரி மாதத்தில் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் ரீதியாக நல்ல அனுகூலங்கள் காணப்படும். புதிய முயற்சிகளில் நல்ல வெற்றி ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், படிப்பு மாற்றம் போன்றவை உண்டாகும்.
கவனம்
எதிரிகள் ஒன்றிணையக் கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். கழுத்து, அடிவயிறு, கழிவுப் பாதை தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தலைசுற்றல், மயக்கம் போன்றவை பெண்களுக்கு வரும் வாய்ப்புள்ளதால் உணவு தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நட்புக்காக தொலைதூரப் பயணங்களை ஏற்றுக் கொண்டு மாட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
பணவரவு
சுப்பிரமணிய புஜங்கத்தை கேட்பதும், படிப்பதும் பல விதத்தில் நன்மைகைளை ஏற்படுத்தும். உத்தியோகம் நன்றாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். படைப்பாளிகளுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும். பண வரவு அற்புதமாக இருக்கும். புதிய முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். வியாபாரிகள் மிகுந்த பதட்டமாக இருப்பீர்கள். அந்த பதட்டமான நிலைமைகள் கட்டாயமாக மாறும்.
சிக்கல் தீரும்
வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும்.பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். உங்களுக்கு இதுவரை இருந்து வந்த பகைமையான நிலைமைகள் மாறும்.
வழிபாடு
குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பண வரவிற்குப் பஞ்சம் இருக்காது. புதிய வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். இதுவரை இருந்து வந்த பயம், பதட்டம், குழப்ப நிலைமைகள் மாறி மனம் தெளிவடையக் கூடிய நல்ல காலகட்டம். திட்டமிட்டுச் செய்யும் காரியங்களில் நல்ல ஏற்றம் ஏற்படும். முருகர் வழிபாடு சகல விதத்தில் நன்மைகளை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications