கடக ராசிக்காரர்களே பிப்ரவரி மாதம் வெச்சு செய்யப் போகுது.. இதுல மட்டும் உஷாரா இருங்க
பிப்ரவரி மாத ராசிபலன்: 2025ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி விரைவில் விடை கொடுக்க போகிறது. பிப்ரவரி மாதம் பிறக்க போகிறது. பிப்ரவரி மாதத்தில் கடக ராசிக்காரர்கள் என்னவிதமான பலன்களைப் பெறப் போகின்றனர். எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
பிப்ரவரி மாதத்தில் புதன் கிரகமும், சூரியன் கிரகமும் பெயர்ச்சி அடைகின்றன, பிப்ரவரி 4 ஆம் தேதி மகரத்தில் இருக்கக்கூடிய புதன் பகவான் கும்ப ராசிக்கும், 26 ஆம் தேதி மீன ராசிக்கும் பிரவேசமாகிறார். மற்றொரு பெயர்ச்சி சூரியர் பெயர்ச்சி. சூரிய பகவான் பிப்ரவரி 13 ஆம் தேதி கும்ப ராசிக்குள் பெயர்ச்சியாகிறார். சந்திரனுடைய பெயர்ச்சி தினந்தோறும் இருக்கும்.

சந்திர பகவான் சதய நட்சத்திரத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்கி மீண்டும் சதய நட்சத்திரத்திற்குள் வந்து பூராட்டாதி நட்சத்திரத்தில் தன்னுடைய பெயர்ச்சியை இந்த மாதத்தில் முடிக்கிறார். இந்த மாதத்தின் கிரக நிலையைப் பார்க்கும்போது ரிஷபத்தில் குரு பகவான், மிதுவான் செவ்வாய் வக்கிர நிலை, கன்னியில் கேது பகவான், மகர ராசியில் புதாதித்ய யோகம், கும்பத்தில் சனி பகவான் மூல திரிகோண ஸ்தானம், மீனத்தில் சுக்கிர பகவான் உச்ச நிலையில் இருக்கிறார்.
அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் கடக ராசிக்காரர்கள் என்னவிதமான பலன்களைப் பெறப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். கடக ராசியினருக்கு பாக்கிய ஸ்தானத்தில் ராகுவுடன் சுக்கிர பகவான் சேர்ந்து அமர்வது நல்ல பலன்களைத் தரும். மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கான நல்ல வாய்ப்புகள் உண்டாகும். திருமண வாழ்க்கையில் பிரச்னைகளைச் சந்தித்து வந்தவர்களுக்கு இரண்டாவது திருமணம் கைகூடி வரும்.
9, 11க்கு உடையவர்கள் பரிவர்த்தனை அடைகின்றனர். 7க்குரியவர் எட்டாம் இடத்தில் அமர்வதால் முதல் திருமணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாவது திருமணம் கைகூடி வரும். இரண்டாவது திருமணத்திற்கு பொருத்தம் பார்த்து, நேரம் பார்த்து திருமணத்தில் இறங்குவது நல்லது. வெளிநாட்டு வாய்ப்புகள் வரும். வேலையில் நெருக்கடியைச் சந்தித்து வருபவர்களுக்கு இந்த பிப்ரவரி மாதம் சமாளித்து கொண்டு போவது நல்லது.
தன ஸ்தானாதிபதி சூரிய பகவான் பிப்ரவரி 13 ஆம் தேதி அஷ்டம ஸ்தானத்தில் செல்வதால் வேலை பார்க்கும் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது. வீண் வாதங்களைத் தவிர்ப்பது, பிறரை விமர்சிப்பது, நிர்வாகத்திற்கு எதிராக பேசாமல் இருப்பது நல்லது. புதன் பகவான் 7 ஆம் இடத்தில் இருப்பதால் திருமண செய்திகள் கூடி வரும். புதன் 8 ஆம் இடத்துக்குச் செல்வதால் செல்போன், நகை போன்றவை காணாமல் போவதற்கு வாய்ப்புள்ளது. கைகளில் அடிபடுவதற்கு வாய்ப்புள்ளது.
பொருளாதார ரீதியாக லாபத்தில் குரு இருப்பது நல்ல நன்மைகளைத் தரும். பொருளாதார உயர்வைக் காண்பீர்கள். வேலையில் இடமாற்றம் உண்டாகும். வேலையில் மனக்கசப்போடு வெளியில் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அக்கம்பக்கத்தினருடன் கருத்து வேறுபாடு உண்டாவதற்கு வாய்ப்புள்ளது.
பாக்கிய ஸ்தானத்தில் உள்ள சுக்கிர பகவான், லாபத்தில் இருக்கும் குரு பகவான் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு, மாநிலத்தில் வேலை பெறும் வாய்ப்புள்ளது. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்கல் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பிப்ரவரி 4 முதல் 26 ஆம் தேதி வரை தொடர்பு கொள்ளுதலில் கவனமாக இருக்க வேண்டும். கம்யூனிகேஷனால் பிரச்சனை வருவதற்காக வாய்ப்புகள் உள்ளது.
பிப்ரவரி மாதத்தில் அதிர்ஷ்டங்கள் பெருக மாணவர்கள் ஹயக்ரீவர் வழிபாடு செய்வது நல்லது. கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளதால் மாணவர்கள் திரும்ப திரும்ப படித்துக் கொண்டிருப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது. கருப்பசாமி வழிபாடு நன்மையைத் தரும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications