பணத்தில் புரளப்போகும் மீன ராசியினர்.. சுக்கிரனின் அருளால் ஜொலிப்பீர்கள்.. அதிர்ஷ்டம் கொட்டும்

Subscribe to Oneindia Tamil

பிப்ரவரி ராசி பலன்: 2025ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி விரைவில் விடை கொடுக்க போகிறது. பிப்ரவரி மாதம் பிறக்க போகிறது. பலரும் இந்த மாதத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பார்கள். எனவே இந்த மாதத்தில் மீன ராசிக்கான பலன்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

பிப்ரவரி மாதத்தில் புதன் மற்றும் சூரியன் கிரகங்களின் பெயர்ச்சிகள் நிகழவுள்ளன. தற்போது மகர ராசியில் உள்ள புதன் கிரகம் பிப்ரவரி 4 ஆம் தேதி கும்ப ராசிக்கும், பிப்ரவரி 26 ஆம் தேதி மீன ராசிக்கும் பெயர்ச்சி ஆகவுள்ளார். சூரிய பகவான் பிப்ரவர் 13 ஆம் தேதி கும்ப ராசியில் பயணத்தை தொடங்கவுள்ளார்.

february month palan

குரு பகவான் ரிஷப ராசியிலும், செவ்வாய் மிதுனத்தில் வக்ர நிலையிலும், கேது கன்னி ராசியிலும், கும்பத்தில் சனி பகவானும், சுக்கிரன் மீன ராசியில் உச்ச நிலையில் உள்ளார். அதேபோல ராகுவும் மீனத்திலும் உள்ளார். இந்த கிரக நிலையில் தான் ராசி பலன்கள் இருக்கப் போகின்றன.

சந்திர பகவான் சதய நட்சத்திரத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்கி மீண்டும் சதய நட்சத்திரத்திற்குள் வந்து பூராட்டாதி நட்சத்திரத்தில் தன்னுடைய பெயர்ச்சியை இந்த மாதத்தில் முடிக்கிறார். இந்த மாதத்தின் கிரக நிலையைப் பார்க்கும்போது ரிஷபத்தில் குரு பகவான், செவ்வாய் வக்கிர நிலை, கன்னியில் கேது பகவான், மகர ராசியில் புதாதித்ய யோகம், கும்பத்தில் சனி பகவான் மூல திரிகோண ஸ்தானம், மீனத்தில் சுக்கிர பகவான் உச்ச நிலையில் இருக்கிறார்.

அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் மீன ராசிக்காரர்கள் என்ன விதமான பலன்களைப் பெறப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். மீன ராசிக்காரர்களின் ராசியில் சுக்கிரன் உச்சமாக அமர்ந்து மாதம் துவங்குகிறது. இது சிறப்பான அம்சம். வாழ்க்கையில் செழிப்பான சூழலை ஏற்படுத்தப் போகிற மாதமாக இருக்கும். பொருளாதார ரீதியாக நல்ல செழிப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஆடம்பரம் அதிகமாக வெளிப்படும். தனிப்பட்ட முறையில் ஆடைகள், அணிகலன்கள், ஜிம்மிற்குச் செல்வது என வசீகர தோற்றமான மாதமாக இருக்கும்.

உங்களுடைய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். செல்வ செழிப்பு மேலோங்கும். பயணங்கள் மிகச் சிறப்பாக இருக்கும். இரவு நேரப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. பல இடங்களில் திருமணத்திற்கு தடை இருந்திருக்கும். தடையைத் தாண்டி திருமணச் செய்திகள் வந்து சேரும். பெண்களால் அவமானம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஒழுக்கம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. உங்களுடைய செயல்பாடுகளில் கவனமாக இருப்பது நல்லது.

பெண்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய மனதுக்குப் பிடிக்காத திருமணங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது. மனதில் உள்ள விஷயங்களை வெளிப்படையாக சொல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மீன ராசியினரின் வீட்டில் வாஸ்து சம்பந்தப்பட்ட தோஷம் இருப்பதற்கான வாய்ப்புள்ளது. அதற்கு உங்களுடைய ஜாதகத்திலேயே பரிகாரம் இருக்கும். அதனை கடைப்பிடித்து தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்வது நல்லது.

வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் வரும். திருமண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. நாக தோஷம், செவ்வாய் தோஷத்தை பார்த்து நிவர்த்தி செய்து கொள்வது நல்லது. கம்யூனிகேஷன் செக்டாரில் இருப்பவர்களுக்கு, கணினி துறை சார்ந்தவர்களுக்கு நல்ல அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். 10, 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும். பாடத்தில் கவனம் செலுத்தி படிப்பது நல்லது.

படிப்பு, வேலை தொடர்பாக வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. பிப்ரவரி மாதம் உங்களுக்கு நல்ல மாதமாக இருக்கும். பெண் தெய்வங்களை வழிபடுவது நல்லது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாளை வழிபடுவது நல்ல அதிர்ஷ்டங்களை உண்டாக்கும். ஆண்டாள் பாசுரத்தை படிப்பது நல்லது. நாச்சியார் திருமொழி படித்தால் திருமண தடைகள் நீங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+