மேஷம், ரிஷபம், மிதுன ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்?.. குரு அதிசாரப் பெயர்ச்சி முழு பலன்கள்
குரு அதிசாரப் பெயர்ச்சி: கடகத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக சிம்மத்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி நிகழ்வால் மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கடகத்தில் இருக்கும் குரு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு சிம்மத்திற்கு வருகிறார். மீண்டும் வக்கிரமாகி பின்னோக்கி கடகத்திற்குச் செல்வார். இந்த நிகழ்வே குரு அதிசாரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. சுமார் 90 நாட்கள் அதிசாரம் நடக்கும். 9 கிரகங்களுக்கும் அதிசாரம் நடைபெறும். இந்த கிரக மாற்றத்தின்போது 12 ராசிகளுக்கும் பல்வேறு பலன்கள் கிடைக்கும்.

அக்டோபர் 31 ஆம் தேதி பகல் 12.05 மணிக்கு குரு அதிசாரமடைகிறார். ஜனவரி 25 ஆம் தேதி இந்த நிகழ்வு நிறைவடைகிறது. அதன்படி, இந்த 3 மாதங்களில் குரு அதிசாரப் பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன்
மேஷ ராசியினருக்கு இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிகிச்சை பெறுவோருக்கும் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக அமையும். குல தெய்வத்தின் அருள் கிடைக்கும் குரு சிம்ம ராசிக்கு வருவதால் மேஷ ராசிக்கு குரு பார்வை கிடைக்கப் போகிறது. உங்களுக்கு நடக்க வேண்டிய கெடுதல்களில் இருந்து குரு பகவான் பாதுகாக்கப் போகிறார்.
பதவி எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான யோகம் உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். அப்பாவுடன் நல்லிணக்கம், ஒற்றுமை ஏற்படும். ஆண்களுக்கு நிகராக வேலைகளைச் செய்யக் கூடியவர்கள் மேஷ ராசி பெண்கள். தற்போது 5 ஆம் இடத்துக்கு குரு வருவதால் ஹார்மோன் பிரச்சனை, மாதவிடாய் பிரச்சனை போன்றவற்றிற்கு உரிய மருத்தும் கிடைக்கும்.
ஆரோக்கியக் குறைபாட்டில் இருந்து மீண்டு வருவீர்கள். ஆரோக்கியம் அற்புதமாக மேம்படும். பெண்களுக்கு குழந்தை இல்லை என்கிற பெயரால் மன சங்கடத்தில் இருந்து வந்த நிலைமைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். நிறைய பெண்கள் இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியில் தொழில் முனைவோராவதற்கான யோகம் பெறுவீர்கள்.
செவ்வாய்க்கிழமை தோறும் வீட்டின் அருகில் உள்ள முருகன் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்வது சகலவித நன்மைகளையும் தரும். சிவப்பு அல்லது வெள்ளை நிற மலர்களை முருகருக்கு சாற்றி வழிபடுவது நல்லது. பித்தளை பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி குடித்து வருவது நல்லது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது மேன்மையைத் தரும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசியினருக்கு குரு பகவான் அதிசாரமாகி 4 ஆம் இடத்துக்குப் போகிறார். ஏற்கனவே அஷ்டமாதிபதி குரு என்பதால் வீடு, மனை, சொத்து வாங்கும் யோகம் ஏற்படும். அதற்கான பேச்சுவார்த்தைகளை செய்வீர்கள். கையில் காசு இல்லை என்றாலும் திடீரென வீடு, இடம் என நல்ல சொத்துக்களை வாங்கும் யோகம் உள்ளது. சிறிய முதலீடுகளையாவது செய்து சொத்து வாங்கும் அமைப்பு உள்ளது.
அம்மா மேல் பாசம் இருந்தாலும் ஏதோ ஒரு ஒத்துவராத தன்மை இருந்து கொண்டே இருந்திருக்கும். அந்த நிலைமைகள் பரிபூரணமாக நீங்கும். 10 ஆம் இடத்தில் குரு பார்வை இருப்பதால் புதிய தொழில் தொடங்க அற்புதமான காலகட்டமாக இருக்கும். பெண்கள் சார்ந்த தொழில்களான மேக்கம் ஆர்டிஸ்ட், சாரி டிராபிஸ்ட் என எந்த தொழில்களைச் செய்தாலும் அதில் வெற்றி பெறும் அமைப்பு உள்ளது. அதன் மூலமாக நல்ல மாற்றங்களும், முன்னேற்றங்களும் உண்டாகும்.
சொத்துக்களில் இருந்து வந்த வில்லங்கள், அதுதொடர்பான வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும். சைனஸ் தொல்லைகள் நீங்கும். 8, 12 ஆம் இடம் வலுவாக இருப்பதால் வெளிமாநிலம், வெளிநாடு தொடர்பு வைத்து தொழில் வைப்பவர்களுக்கு நல்ல விருத்தி ஏற்படும். தொழில் செய்பவர்கள் பணம் கொடுக்கல், வாங்கலில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வேற்று நபர்கள், புதிதாக பழகும் நபர்கள், மற்றவர்களை நம்பி தொழில் செய்வது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசியினருக்கு 7 ஆம் இடத்துக்கு குரு பார்வை இருப்பதால் திருமண யோகம் ஏற்படும். திருமணத் தடைகள் பரிபூரணமாக நீங்கும். குடும்பங்களின் இணைந்து சம்மதத்தோடு மகிழ்ச்சியாக திருமணம் நடக்கும். அப்பாவுடைய ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். 9 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் அப்பாவுடைய ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.
அப்பாவின் உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள், சங்கடங்கள் தீரும். 11 ஆம் இடத்துக்கு குரு பார்வை இருப்பதால் திருமண வாழ்க்கை சரியில்லாத பெண்களுக்கு 2 ஆம் திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். ஆடை, ஆபரண, பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். தனக்கென தனி முதலீடுகள், சேமிப்பைத் தொடங்குவீர்கள்.
புதிய வேலை கிடைப்பதற்கான அமைப்பு உள்ளது.புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. குழந்தை பாக்கியத்திற்கான மருத்துவ சிகிச்சைகளை 3 மாதத்திற்கு தள்ளிப்போடுவது நல்லது. புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை அசைவ உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. பச்சை, நீல நிற ஆடைகள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும். கல்கருடரை வழிபாடு செய்து வருவது வேலை, தொழிலில் நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.


Click it and Unblock the Notifications
