குரு அதிசாரப் பெயர்ச்சி 2026: ரிஷப ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. தொழிலில் ஏற்றம்
குரு அதிசாரப் பெயர்ச்சி: கடகத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக சிம்மத்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி நிகழ்வால் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கடகத்தில் இருக்கும் குரு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு சிம்மத்திற்கு வருகிறார். மீண்டும் வக்கிரமாகி பின்னோக்கி கடகத்திற்குச் செல்வார். இந்த நிகழ்வே குரு அதிசாரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. சுமார் 90 நாட்கள் அதிசாரம் நடக்கும். 9 கிரகங்களுக்கும் அதிசாரம் நடைபெறும். இந்த கிரக மாற்றத்தின்போது 12 ராசிகளுக்கும் பல்வேறு பலன்கள் கிடைக்கும்.

அக்டோபர் 31 ஆம் தேதி பகல் 12.05 மணிக்கு குரு அதிசாரமடைகிறார். ஜனவரி 25 ஆம் தேதி இந்த நிகழ்வு நிறைவடைகிறது. அதன்படி, இந்த 3 மாதங்களில் குரு அதிசாரப் பெயர்ச்சியால் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசியினருக்கு குரு பகவான் அதிசாரமாகி 4 ஆம் இடத்துக்குப் போகிறார். ஏற்கனவே அஷ்டமாதிபதி குரு என்பதால் வீடு, மனை, சொத்து வாங்கும் யோகம் ஏற்படும். அதற்கான பேச்சுவார்த்தைகளை செய்வீர்கள். கையில் காசு இல்லை என்றாலும் திடீரென வீடு, இடம் என நல்ல சொத்துக்களை வாங்கும் யோகம உள்ளது. சிறிய முதலீடுகளையாவது செய்து சொத்து வாங்கும் அமைப்பு உள்ளது.
தொழிலில் வெற்றி
அம்மா மேல் பாசம் இருந்தாலும் ஏதோ ஒரு ஒத்துவராத தன்மை இருந்து கொண்டே இருந்திருக்கும். அந்த நிலைமைகள் பரிபூரணமாக நீங்கும். 10 ஆம் இடத்தில் குரு பார்வை இருப்பதால் புதிய தொழில் தொடங்க அற்புதமான காலகட்டமாக இருக்கும். பெண்கள் சார்ந்த தொழில்களான மேக்கம் ஆர்டிஸ்ட், சாரி டிராபிஸ்ட் என எந்த தொழில்களைச் செய்தாலும் அதில் வெற்றி பெறும் அமைப்பு உள்ளது. அதன் மூலமாக நல்ல மாற்றங்களும், முன்னேற்றங்களும் உண்டாகும்.
முன்னேற்றம்
சொத்துக்களில் இருந்து வந்த வில்லங்கள், அதுதொடர்பான வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும். சைனஸ் தொல்லைகள் நீங்கும். 8, 12 ஆம் இடம் வலுவாக இருப்பதால் வெளிமாநிலம், வெளிநாடு தொடர்பு வைத்து தொழில் வைப்பவர்களுக்கு நல்ல விருத்தி ஏற்படும்.
கவனம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு சிட்டிசன்ஷிப், வெளிநாட்டில் நிறுவனம் தொடங்குவது போன்ற அமைப்பு உள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்தியாவில் இருந்து தொழில் செய்பவர்கள் பணம் கொடுக்கல், வாங்கலில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வேற்று நபர்கள், புதிதாக பழகும் நபர்கள், மற்றவர்களை நம்பி தொழில் செய்வது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
திருமண யோகம்
தொழில் சார்ந்த கடன்கள் கிடைப்பதற்கான அமைப்பு உள்ளது. காதல் திருமணம் கண்டிப்பாக நடக்கும். மன தைரியம் அதிகரிக்கும். காதல் கைகூடும். அம்மா திருமணம் சார்ந்த முடிகளில் அதிகமாக தலையிடுவது, அவர்கள் முடிவெடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. வெளியூர், தூரத்து சொந்தத்தில் இருந்து மாப்பிள்ளை, மணமகள் அமையும் அமைப்பு உள்ளது.
குரு பார்வை
முதலீடுகளுக்கான நேரமாக இருக்கும். குரு பார்வை இருப்பதால் எதில் முதலீடு செய்தாலும் நல்ல லாபங்கள் கிடைக்கும். பங்குச்சந்தை, ஸ்பெகுலேஷன், மியூட்சுவல் ஃபண்டில் நல்ல லாபம் கிடைக்கும். தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய காலகட்டம். தினந்தோறும் வீட்டில் விளக்கேற்றுவது மேன்மையைத் தரும். 2 அல்லது 2க்கும் மேற்பட்ட விளக்குகளை ஏற்றுவது நன்மை பயக்கும். சுத்தத்தைப் பேணுவது நல்லது. விளக்குக்கு குங்குமார்ச்சனை செய்வது ஏற்றத்தைத் தரும்.


Click it and Unblock the Notifications
