8-ல் வரும் குரு.. மகர ராசிக்கு காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்.. திடீர் யோகம் முதல் திருமணம் வரை

Subscribe to Oneindia Tamil

குரு அதிசாரப் பெயர்ச்சி: கடகத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக சிம்மத்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி நிகழ்வால் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

கடகத்தில் இருக்கும் குரு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு சிம்மத்திற்கு வருகிறார். மீண்டும் வக்கிரமாகி பின்னோக்கி கடகத்திற்குச் செல்வார். இந்த நிகழ்வே குரு அதிசாரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. சுமார் 90 நாட்கள் அதிசாரம் நடக்கும். 9 கிரகங்களுக்கும் அதிசாரம் நடைபெறும். இந்த கிரக மாற்றத்தின்போது 12 ராசிகளுக்கும் பல்வேறு பலன்கள் கிடைக்கும்.

guru-adhisara-peyarchi-2026-what-kind-of-benefits-will-magaram-rasi-get-during-this-period

அக்டோபர் 31 ஆம் தேதி பகல் 12.05 மணிக்கு குரு அதிசாரமடைகிறார். ஜனவரி 25 ஆம் தேதி இந்த நிகழ்வு நிறைவடைகிறது. அதன்படி, இந்த 3 மாதங்களில் குரு அதிசாரப் பெயர்ச்சியால் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மகரம் ராசி பலன்

மகர ராசியினருக்கு அஷ்டமத்தில் குரு போகிறார். 8க்கு குரு போகும்போது நிறைய நன்மைகள் கிடைக்கும். நல்ல ஆயுள், ஆரோக்கியம் ஏற்படும். தொலைதூரப் பயணங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாடு சுற்றுலா செல்வதற்கான அமைப்பு உள்ளது. நீண்ட நாள் செல்ல வேண்டும் என்று நினைத்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வரும் அமைப்பு.

திடீர் அதிர்ஷ்டம்

பங்குச்சந்தை, மியூட்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். 8 ஆம் இடம் என்பது லாட்டரியில் பரிசு பெறுவதற்கான வாய்ப்புள்ளது. திடீர் அதிர்ஷ்டம் பெறுவீர்கள். எதிர்பாராத வேலை அமைவது, வரன் அமைவது போன்ற யோகம் உண்டாகும். திடீர் திருப்பங்கள், திடீர் நன்மைகள் நடக்கும். அதிர்ஷ்டம் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

வருமானம் பெருகும்

இரண்டாவது வருமானம் வேண்டும் என்று நினைப்போருக்கு அதற்கான அமைப்பு உள்ளது. துணை வருமானங்கள் உருவாகும் காலகட்டமாக இருக்கும். அதிக லாபம் கிடைக்கும். 8 ஆம் இடத்துக்கான அமைப்பு உள்ளது. தொழில் செய்பவர்களின் தொடர்புகள் கிடைக்கும். நிறைய மக்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். வம்பு, வழக்குகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள்.

பிரச்சனை தீரும்

காவல் துறையில் இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். அரசு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். அப்பா, அப்பா வழி உறவினர்கள், அம்மா, அம்மா வழி உறவினர்கள் வழியாக நன்மைகள் ஏற்படும். நீங்கள் பிறந்த குடும்பத்தின் மூலமாக நன்மைகள் கிடைக்க வேண்டும். 8 ஆம் இடம் வலுத்திருப்பதால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

திருமண யோகம்

திருமண யோகம் உண்டு. குடும்பம் விரிவடையும். கலப்புத் திருமணங்களுக்கான அமைப்பு உள்ளது. காதல் திருமணத்திற்கு கிரீன் சிக்னல் கிடைக்கும். ஏற்கனவே பார்த்த வரன்கள் மீண்டும் அமைவதற்கான பாக்கியம் உண்டு. உயரமான இடங்கள், மலையேறுவது, சாகசப் பயணங்களில் ஈடுபடுவது, வாகனங்களில் வேகமாகச் செல்வது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. கூர்மையான ஆயுதங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

வழிபாடு

உங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. மூன்றாம் நபர்களை நம்பி சொல்லும் விஷயங்களால் சில பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. வீட்டில் தினந்தோறும் விளக்கேற்றி பூஜை செய்வது மேன்மையைத் தரும். வேல்மாறல் படிப்பது, தியானம் செய்வது, சித்தர் வழிபாடு செய்வது, தான தர்மங்கள், அன்னதானம் செய்வது மேன்மையைத் தரும். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சுவாமியை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+