குரு அதிசாரப் பெயர்ச்சி 2026: மீன ராசிக்கு அதிர்ஷ்ட மழை.. பண வரவு கொட்டப் போகுது
குரு அதிசாரப் பெயர்ச்சி: கடகத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக சிம்மத்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி நிகழ்வால் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கடகத்தில் இருக்கும் குரு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு சிம்மத்திற்கு வருகிறார். மீண்டும் வக்கிரமாகி பின்னோக்கி கடகத்திற்குச் செல்வார். இந்த நிகழ்வே குரு அதிசாரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. சுமார் 90 நாட்கள் அதிசாரம் நடக்கும். 9 கிரகங்களுக்கும் அதிசாரம் நடைபெறும். இந்த கிரக மாற்றத்தின்போது 12 ராசிகளுக்கும் பல்வேறு பலன்கள் கிடைக்கும்.

அக்டோபர் 31 ஆம் தேதி பகல் 12.05 மணிக்கு குரு அதிசாரமடைகிறார். ஜனவரி 25 ஆம் தேதி இந்த நிகழ்வு நிறைவடைகிறது. அதன்படி, இந்த 3 மாதங்களில் குரு அதிசாரப் பெயர்ச்சியால் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மீனம் ராசி பலன்
மீன ராசியினருக்கு குரு அதிசாரப் பெயர்ச்சியில் பட்டம், பெயர், புகழ், பணவரவு ஏற்படக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். தன ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் பொருளாதாரத்தில் நல்ல மேன்மை உண்டாகும். கை நிறைய காசு வரக்கூடிய அற்புதமான காலகட்டம். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் புரிதல் ஏற்படும். தான், தன் குடும்பத்தைப் பற்றி புரியக்கூடிய காலகட்டமாக இருக்கும். குடும்பத்தைப் பற்றி சிந்திக்கக்கூடிய அமைப்பு ஏற்படும்.
கடன் தீரும்
கடனால் நிறைய பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். கடன் நெருக்கடி குறையக்கூடிய காலகட்டம். பண விஷயத்தால் இருந்து வந்த மன அழுத்தம் தீரும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் ஏற்படும். வாரா கடன்கள் வசூலாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளிடம் கருத்து மோதல், அவர்களுக்கும் உங்களுக்கும் சிறு சிறு மன உளைச்சலாகும். குழந்தைக்காக சிகிச்சை பெறுவோருக்கு சரியான காலகட்டம் இது கிடையாது. 2, 3 மாதங்களுக்கு தள்ளிப்போடுவது நல்லது.
குழந்தை பாக்கியம்
குரு வக்கிரத்துக்கு பஞ்சம ஸ்தானத்தில் உச்சத்துக்கு வரும்போது குழந்தைக்கான சிகிச்சையைப் பெறுவது நன்மை பயக்கும். 10 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் இழந்த பட்டம், பதவி, பொறுப்பும், புகழும் உங்களைத் தேடி வரும். சோஷியல் மீடியாவில் புகழ்வெறும் அமைப்பு உள்ளது. வெளிநாடு செல்ல முயற்சிப்போருக்கு அதற்கான யோகம் உண்டு.
வெளிநாடு யோகம்
வெளிநாடுகளில் சென்று பிசினஸ் தொடங்குவது, வீடு கட்டுவது, பிஆர் வாங்குவது போன்ற அமைப்பு உள்ளது. திருமணம் உள்ளிட்ட சுப காரியத்துக்கான முயற்சிகள் கைகூடும். இருப்பினும், 2, 3 மாதங்களுக்குப் பிறகு செய்வது ஏற்றத்தைத் தரும். வரன்கள் பார்க்கும் முயற்சிகளை இந்த காலகட்டத்தில் செய்யலாம். 11 ஆம் இடத்தில் ராகு வருவதால் லாபம் பெருகும்.
பணவரவு
பண வரவு உண்டாகும். பணத்தை எதற்காக செலவு செய்கிறோம் என்பதை சிந்தித்துப் பார்த்து செய்வது நன்மை பயக்கும். 5 ஆம் இடத்தில் கேது வருவதால் பூர்வீகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். அப்பா, அப்பா வழி உறவுகளுக்குள் கருத்து மோதல், பங்காளி சண்டை, சொத்துப் பிரச்சனை, பிள்ளைகளிடம் மனஸ்தாபம் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு
6 ஆம் இடத்தில் குரு மறைவதால் உடம்பு, மனம் பாதிக்கும் செயல்களைத் தவிர்ப்பது நல்லது. சனிக்கிழமை தோறும் சனி பகவான் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது, அகல்விளக்கு ஏற்றுவது நன்மையைத் தரும். 9 சனிக்கிழமை தினத்தன்று தானம் கொடுப்பது பல மாற்றங்களும், வளர்ச்சிகளும் நிச்சயமாக ஏற்படும்.


Click it and Unblock the Notifications
