குரு அதிசாரப் பெயர்ச்சி 2026: மிதுன ராசிக்கு புதிய வேலை, பதவி உயர்வு.. அதிர்ஷ்டம் கொட்டப்போகுது

Subscribe to Oneindia Tamil

குரு அதிசாரப் பெயர்ச்சி: கடகத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக சிம்மத்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி நிகழ்வால் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

கடகத்தில் இருக்கும் குரு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு சிம்மத்திற்கு வருகிறார். மீண்டும் வக்கிரமாகி பின்னோக்கி கடகத்திற்குச் செல்வார். இந்த நிகழ்வே குரு அதிசாரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. சுமார் 90 நாட்கள் அதிசாரம் நடக்கும். 9 கிரகங்களுக்கும் அதிசாரம் நடைபெறும். இந்த கிரக மாற்றத்தின்போது 12 ராசிகளுக்கும் பல்வேறு பலன்கள் கிடைக்கும்.

guru-adhisara-peyarchi-2026-what-kind-of-benefits-will-mithunam-rasi-get-during-this-period

அக்டோபர் 31 ஆம் தேதி பகல் 12.05 மணிக்கு குரு அதிசாரமடைகிறார். ஜனவரி 25 ஆம் தேதி இந்த நிகழ்வு நிறைவடைகிறது. அதன்படி, இந்த 3 மாதங்களில் குரு அதிசாரப் பெயர்ச்சியால் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசியினருக்கு 7 ஆம் இடத்துக்கு குரு பார்வை இருப்பதால் திருமண யோகம் ஏற்படும். திருமணத் தடைகள் பரிபூரணமாக நீங்கும். குடும்பங்களின் இணைந்து சம்மதத்தோடு மகிழ்ச்சியாக திருமணம் நடக்கும். அப்பாவுடைய ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். 9 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் அப்பாவுடைய ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

அதிர்ஷ்டம்

அப்பாவின் உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள், சங்கடங்கள் தீரும். 11 ஆம் இடத்துக்கு குரு பார்வை இருப்பதால் திருமண வாழ்க்கை சரியில்லாத பெண்களுக்கு 2 ஆம் திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். ஆடை, ஆபரண, பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். தனக்கென தனி முதலீடுகள், சேமிப்பைத் தொடங்குவீர்கள்.

புதிய வேலை

புதிய வேலை கிடைப்பதற்கான அமைப்பு உள்ளது. உங்கள் கனவு வேலை கிடைக்கும். மிரட்சியாக பார்த்த வேலை, மற்றவர்களின் உதவி மூலமாக வேலை கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான யோகம் உண்டு. புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. குழந்தை பாக்கியத்திற்கான மருத்துவ சிகிச்சைகளை 3 மாதத்திற்கு தள்ளிப்போடுவது நல்லது. பிப்ரவரி மாதத்திற்கு மேல் சிகிச்சை எடுத்துக் கொள்வது சாதகமான பலனைத் தரும்.

குழந்தை பாக்கியம்

நிறைய பேருக்கு பெண் குழந்தைகள் பிறப்பதற்கான யோகம் உண்டாகும். 11 ஆம் இடம் வலுப்பதாலும், 3 ஆம் இடத்திற்கு குரு பார்வை இருப்பதாலும் சிறிய முயற்சிகள் செய்தாலும் அவற்றில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். மெனக்கெடாமல் எளிமையாக ஜெயிப்பீர்கள். வராத பணங்கள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து அதன் மூலமாக ஒரு லாபம், யோகம் ஏற்படும். புதிதாக பொருள்களை வாங்குவீர்கள்.

சொந்த வீடு

ஏற்கனவே கட்டிய வீடுகளை வாங்குவீர்கள். பழைய பொருள்கள் மூலமாக லாபம், யோகம் கிடைக்கும். பங்குச் சந்தை தொடர்பான முதலீடுகளில் நல்ல லாபங்கள் கிடைக்கும். தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். தினந்தோறும் வீட்டில் நெய் தீபமேற்றுவது சகலவித நன்மைகளையும் தரும். வீட்டில் தினந்தோறும் சுந்தரகாண்டத்தை கேட்பது, பாராயணம் செய்வது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

வழிபாடு

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை அசைவ உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. பச்சை, நீல நிற ஆடைகள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும். கல்கருடரை வழிபாடு செய்து வருவது வேலை, தொழிலில் நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+