குரு அதிசாரப் பெயர்ச்சி 2026: சிம்ம ராசிக்கு புதிய வேலை, பதவி உயர்வு.. அதிர்ஷ்டம் கொட்டப்போகுது

Subscribe to Oneindia Tamil

குரு அதிசாரப் பெயர்ச்சி: கடகத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக சிம்மத்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி நிகழ்வால் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

கடகத்தில் இருக்கும் குரு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு சிம்மத்திற்கு வருகிறார். மீண்டும் வக்கிரமாகி பின்னோக்கி கடகத்திற்குச் செல்வார். இந்த நிகழ்வே குரு அதிசாரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. சுமார் 90 நாட்கள் அதிசாரம் நடக்கும். 9 கிரகங்களுக்கும் அதிசாரம் நடைபெறும். இந்த கிரக மாற்றத்தின்போது 12 ராசிகளுக்கும் பல்வேறு பலன்கள் கிடைக்கும்.

guru-adhisara-peyarchi-2026-what-kind-of-benefits-will-simmam-rasi-get-during-this-period

அக்டோபர் 31 ஆம் தேதி பகல் 12.05 மணிக்கு குரு அதிசாரமடைகிறார். ஜனவரி 25 ஆம் தேதி இந்த நிகழ்வு நிறைவடைகிறது. அதன்படி, இந்த 3 மாதங்களில் குரு அதிசாரப் பெயர்ச்சியால் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சிம்ம ராசி பலன்

சிம்ம ராசியினருக்கு குரு அதிசாரமாகி ராசிக்குள் வருவதால் முகம் பொழிவடையும். இதுவரை இருந்து கவலை எல்லாம் நீங்கி முகம் தெளிவடையும். மனதில் தைரியம் ஏற்படும். சின்ன சின்ன விஷயங்களுக்கும் மற்றவர்களை சார்ந்திருந்த தன்மைகல் மாறும். தன் வேலையை தானே பார்க்கக்கூடிய அமைப்பு ஏற்படும். நல்ல பழக்க வழக்கங்களை இனி தொடங்குவீர்கள். வயதுக்கு தகுந்தாற்போல உடலமைப்பை மாற்றுவதற்கான ஆர்வம் ஏற்படும்.

அனுகூலம்

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை இனி தொடங்குவீர்கள். கடவுளை கும்பிடுவதற்காக நேரத்தை ஒதுக்குவீர்கள். அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு மாறக்கூடிய நேரமாக இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி அமையும். வேலை, தொழில் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். அலுவலகத்தில் மானக் குறைபாடு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கும்.

கடனில் கவனம்

வீட்டு சூழ்நிலை, கடன் போன்றவற்றை மனதில் வைத்து வேலை செய்து கொண்டிருந்த நிலைமை எல்லாம் மாறி, சுமூகமான நிலைமைகள் ஏற்படும். மேலதிகாரிகளிடம் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். தொழில் செய்யக்கூடியவர்கள் கடன் அமைப்பில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். புதிய பார்ட்னர்களை இந்த 3 மாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

குடும்பம்

காதல் வாழ்க்கை அவ்வளவு இனிமையாக இருந்திருக்காது. காதலில் விரக்தி என்ற நிலைமை இருந்திருக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேரும் அமைப்பு உள்ளது. கணவன், மனைவிக்குள் இருந்த உறவுநிலை சுமூகமாகும் அமைப்புள்ளது. தன்னுடைய வாழ்க்கையை தானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற உத்வேகம் ஏற்படும். கடந்த 2 வருடங்களாக அனுபவித்து வந்த துன்பங்களில் இருந்து பரிபூரணமாக வெளிவரக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

முன்னேற்றம்

நிதி சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் காணப்படும். வாழ்க்கையின் தரத்தை ஒருபடிக்கு முன்னேற்றுவீர்கள். வேலை, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 3 மாதத்திற்குப் பிறகு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தினந்தோறும் ஓம் நமச்சிவாயா என்று எழுதுவது நன்மையைத் தரும்.

வழிபாடு

தினந்தோறும் கோளார் பதிகம் கேட்பது நல்லது. பிரதோஷத்திற்கு தவறாமல் சிவன் கோயிலுக்குச் செல்வது நல்லது. வில்வம் சாற்றுவது, வில்வ இலையில் திருநீறு வைத்து வழிபாடு செய்வது நல்ல மாற்றங்கள் வரும். ஞாயிற்றுக்கிழமை தோறும் சாம்பார் சாதம் தானமாகக் கொடுப்பது ஏற்றத்தைத் தரும். திருவாணைக்காவல் ஜம்புகேஷ்வரர் அகிலாண்டேஷ்வரி அம்மனை வழிபாடு செய்வது சகலவித முன்னேற்றங்களையும் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+