குரு அதிசாரப் பெயர்ச்சி 2026: விருச்சிக ராசிக்கு இனி வெற்றி.. தொழிலில் மாஸ், பணவரவில் கிளாஸ்

Subscribe to Oneindia Tamil

குரு அதிசாரப் பெயர்ச்சி: கடகத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக சிம்மத்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி நிகழ்வால் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

கடகத்தில் இருக்கும் குரு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு சிம்மத்திற்கு வருகிறார். மீண்டும் வக்கிரமாகி பின்னோக்கி கடகத்திற்குச் செல்வார். இந்த நிகழ்வே குரு அதிசாரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. சுமார் 90 நாட்கள் அதிசாரம் நடக்கும். 9 கிரகங்களுக்கும் அதிசாரம் நடைபெறும். இந்த கிரக மாற்றத்தின்போது 12 ராசிகளுக்கும் பல்வேறு பலன்கள் கிடைக்கும்.

guru-adhisara-peyarchi-2026-what-kind-of-benefits-will-viruchigam-rasi-get-during-this-period

அக்டோபர் 31 ஆம் தேதி பகல் 12.05 மணிக்கு குரு அதிசாரமடைகிறார். ஜனவரி 25 ஆம் தேதி இந்த நிகழ்வு நிறைவடைகிறது. அதன்படி, இந்த 3 மாதங்களில் குரு அதிசாரப் பெயர்ச்சியால் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

விருச்சிக ராசி பலன்

விருச்சிக ராசியினருக்கு குரு 10 ஆம் இடத்துக்குச் செல்கிறார். நிறைய நல்ல பலன்கள் கிடைக்கும். யோகாதிபதி குரு என்பதால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலுக்கான கடன்கள், இடம் கிடைக்கும். திட்டங்களை செயல்படுத்தக்கூடிய காலகட்டமாக இந்த 3 மாதமாக இருக்கும். தொழில் மூலமாக நல்ல தன லாபங்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும்.

முன்னேற்றம்

படிப்படியாக முன்னேற்றம் கிடைக்கும். குலதெய்வத்தின் அனுக்கிரகம் கிடைக்கும். நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவீர்கள். முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பிதுர் தோஷம் எல்லாம் நிவர்த்தியாகும். தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலை செய்ததெல்லாம் போது தொழில் தொடங்கலாம் என்கிற எண்ணம் ஏற்படும். தொழில் தொடங்குபவர்களுக்கு எடுத்த உடனேயே நல்ல வெற்றிகள் கிடைக்கும்.

தொழில்

தொழிலில் நம்பிக்கை ஏற்படும். பாட்னர்ஷிப்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ரியல் எஸ்டேட், ஹோட்டல், டிரான்ஸ்போர்ட், பட்டாசு, சுற்றுலா, மெடிக்கல் தொடர்பான விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். திருமண யோகம் உண்டாகும். 2 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் குடும்ப விருக்தி உண்டாகும். நல்ல கணவன், மனைவி கிடைப்பார்கள். இந்த 3 மாத காலகட்டத்தில் முயற்சி செய்தால் நிச்சயமாக திருமணம் நடக்கும் அமைப்பு உள்ளது.

முன்னேற்றம்

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். காசு புழக்கம் அதிகமாக இருக்கும். கையில் காசு வைத்து செலவு செய்வீர்கள். தொழில், வேலை மூலமாக நல்ல மாற்றம், முன்னேற்றம் காணப்படும். வேலையில் நல்ல சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும் அமைப்பு உள்ளது. அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடன்களை அடைப்பீர்கள். சம்பாதியத்தை அதிகப்படுத்தக்கூடிய நல்ல காலகட்டம்.

கவனம்

10 ஆம் இடத்தில் குரு அமர்ந்து 4 ஆம் இடத்தைப் பார்ப்பது அம்மாவுக்கு உள்ள உடல்நல பாதிப்பு குறித்து முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சொத்துக்கள் வாங்கும்போது ஆவணங்களை சரிபார்த்துக் கொள்வது நல்லது. இளைய சகோதர, சகோதரிகளிடம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் அவர்கள் தலையிடுவது, அவர்களுடைய வாழ்க்கையில் நீங்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

வழிபாடு

பல் சார்ந்த பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. ஆண்கள், பெண்கள் இருவரும் சஷ்டி திதியில் விரதம் இருப்பது நன்மை பயக்கும். பொருளாதார முன்னேற்றம், குழந்தை பாக்கியத்திற்கு வளர்பிறை சஷ்டியிலும், நோய் நொடிகள், கடன் தீர விரும்புவோர் தேய்பிறை சஷ்டியிலும் விரதம் இருப்பது நன்மை பயக்கும். முருகப் பெருமான் வழிபாடு சகலவித நன்மைகளையும் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+