மிதுனம் - கடகத்துக்குச் செல்லும் குரு.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்
குரு அதிசாரப் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு வரும் அக்டோபர் 18 ஆம் குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசார் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த காலகட்டத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
அக்டோபர் 18 ஆம் தேதி மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு குரு அதிசாரப் பெயர்ச்சி ஆகிப் போகிறார். அதே நவம்பர் மாதத்தில் கடகத்தில் இருந்து மீண்டும் மிதுனத்துக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார். இதுவே குரு அதிசாரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. குரு என்பவர் தேவர்களுக்கெல்லாம் தேவர். பிள்ளைப் பேறு, திருமணம், செல்வம், செழிப்பு என அனைத்து நல்ல விஷயங்களுக்கும் காரணகர்த்தாகவாக இருக்கிறார்.

சனியிடமிருந்து தப்பிக்க ஒரே வழி குரு. சனி பகவான் என்றாலே பொதுமக்கள் பலரும் அச்சப்படுவார்கள். ஆனால் உண்மையில் குருவைக் கண்டுதான் அச்சப்பட வேண்டும். குரு என்பவர் ஞானக்காரகர். தர்மத்துடன் நடந்து கொள்பவர்களுக்கு மட்டுமே குரு பகவான் உதவி செய்வார். குரு என்பவர் வளர்ச்சியைக் கொடுப்பார். ஆனால் அதனை நிதானமாகவே கொடுப்பார் அதுவே இந்த அதிசாரப் பெயர்ச்சியில் நிகழும்.
அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிக்காரர்கள், கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிதுனம்
குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியில் இருந்து 2 ஆம் இடத்திற்குச் செல்வதால் பல்வேறு வகையில் நன்மையை கொடுக்கும். முதன்மையாக பொருளாதார சிக்கல்கள் விலகும். பொருளாதாரம் உயரும். கடன் சுமை வெகுவாக குறையும். குரு பகவான் தன ஸ்தானத்திற்கு செல்வதால் பண வரவு பெருகும். மாற்றத்தை கண்கூடாக உணர்வீர்கள். உத்யோகம், தொழிலில் வருமானம் நன்கு உயரும்.
அவமானங்கள் ஏற்பட்ட இடத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை கூடும். குரு பகவான் உங்கள் ராசிக்கு பெயர்ச்சி ஆனப்பிறகு பலருக்கு ஆரோக்கியத்தில் தொந்தரவு, உத்யோகத்தில் பிரச்சனை போன்ற சங்கடங்கள் ஏற்பட்டிருக்கும். அந்தப் பிரச்னைகள் சரியாகும். நல்ல உத்யோகம் கிடைக்கும். தொழிலில் நீண்ட காலமாக திட்டமிட்ட மாற்றங்களை செய்வீர்கள்.
இருப்பினும் இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டிய ராசிகளில் மிதுன ராசியினரும் ஒருவர். உங்கள் வீட்டின் அருகே உள்ள பெருமாள் கோயில் சென்று, உங்களின் எடைக்கு இணையான அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை தானமாக வழங்கி தரிசனம் செய்வதால் நல்ல பலன்கள் கிடைக்கும். எடைக்கு எடை முடியாவிடினும் உங்களால் முடிந்த உதவிகளை தானமாக செய்வதால் சிறப்பான பலன்களை பெறலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு குரு 7 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். அதாவது பாவக ஸ்தானம், கெடுதல் ஸ்தானம். குரு பகவான் அஷ்டமத்தில் அமர்வதால் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும். பண விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பண உதவி செய்தால் திரும்ப பணம் வராது. நண்பர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போட்டால் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புண்டு.
பணம் களவாடப்படும். பெரும்பொருள் பறிபோகும் நிலை உண்டாகும். தாம்பத்ய குறைபாடுகளைப் போக்கும். சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும். வீடு கட்டுவதற்கான வாய்ப்பு, வசதிகள் ஏற்படும். சிலர் சொந்த வாகனம் கார் போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும். படிக்கும் மாணவர்களுக்கு தீய நண்பர்கள் அமைவதற்கான வாய்ப்புள்ளது.
நண்பர்களால் பல தீமைகள் ஏற்படும் காலமாக இருக்கும். கொழுப்பு சம்பந்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இதயம் சார்ந்த, நுரையீரல் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உடல்நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த அதிசாரப் பெயர்ச்சி மிகப்பெரிய மேன்மையைக் கொடுக்கப் போகிறது. 6 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கும் குரு பகவான் 7 ஆவது ஸ்தானத்துக்கு உச்சமாக வருகிறார். திருமணம் நடக்கும். திருமணம் கைகூடும் காலகட்டம். 7 இல் குரு என்பது சாதாரண விஷயமல்ல. யோகமான நேரமாக இருக்கும். உங்களுக்கு உற்ற துணையாக இருக்கும் வகையில் நல்ல துணை அமையும்.
நல்ல நண்பர்கள் அமைவதற்கான யோகம் உண்டு. சில பேருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். வெளிநாட்டில் வேலை, கல்வி போன்றவை உண்டாகும். அதற்கான நல்ல நேரம் கூடி வரும். நீங்கள் நினைத்ததை சாதிப்பதற்கு அற்புதமான நேரமாக இருக்கும். முதலில் நல்ல படிப்பு அமையும். வெளிநாட்டு வேலை அமையும்.
சனி பகவான் 3 ஆம் இடமான உபஜெய ஸ்தானத்தில் அமருகிறார். அபிலாஷைகள், ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். மகரத்தை சேர்ந்தவர்களுக்கு பிரதமை திதியில் பிறந்திருந்தால் பிரச்சனை ஆகும். மகரமும், துலாமும் திதி சூனியமடைவதால் பிரச்சனைகள் ஏற்படும்.
-
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!










Click it and Unblock the Notifications