மிதுன ராசிக்கு எங்கயோ பெரிய மச்சம்.. குரு பகவானால் இனி எல்லாம் உச்சம்
குரு அதிசாரப் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு வரும் அக்டோபர் 18 ஆம் குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசார் பெயர்ச்சியான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
அக்டோபர் 18 ஆம் தேதி மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு குரு அதிசாரப் பெயர்ச்சி ஆகிப் போகிறார். அதே நவம்பர் மாதத்தில் கடகத்தில் இருந்து மீண்டும் மிதுனத்துக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார். இதுவே குரு அதிசாரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. குரு என்பவர் தேவர்களுக்கெல்லாம் தேவர். பிள்ளைப் பேறு, திருமணம், செல்வம், செழிப்பு என அனைத்து நல்ல விஷயங்களுக்கும் காரணகர்த்தாகவாக இருக்கிறார்.

சனியிடமிருந்து தப்பிக்க ஒரே வழி குரு. சனி பகவான் என்றாலே பொதுமக்கள் பலரும் அச்சப்படுவார்கள். ஆனால் உண்மையில் குருவைக் கண்டுதான் அச்சப்பட வேண்டும். குரு என்பவர் ஞானக்காரகர். தர்மத்துடன் நடந்து கொள்பவர்களுக்கு மட்டுமே குரு பகவான் உதவி செய்வார். குரு என்பவர் வளர்ச்சியைக் கொடுப்பார். ஆனால் அதனை நிதானமாகவே கொடுப்பார் அதுவே இந்த அதிசாரப் பெயர்ச்சியில் நிகழும்.
அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் மிதுனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிதுனம்
குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார். தற்போது அவர் அதிசாரப் பெயர்ச்சியாகி இரண்டாம் இடத்திற்கு போகிறார். இதன் மூலம் ஜென்ம குரு தற்காலிகமாக விலகுகிறார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். இது உங்களுக்கு பல்வேறு வகையில் நன்மையை கொடுக்கும். முதன்மையாக பொருளாதார சிக்கல்கள் விலகும். பொருளாதாரம் உயரும். கடன் சுமை வெகுவாக குறையும்.
ஆரோக்கியம்
குரு பகவான் தன ஸ்தானத்திற்கு செல்வதால் பண வரவு பெருகும். மாற்றத்தை கண்கூடாக உணர்வீர்கள். உத்யோகம், தொழிலில் வருமானம் நன்கு உயரும். அவமானங்கள் ஏற்பட்ட இடத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை கூடும். குரு பகவான் உங்கள் ராசிக்கு பெயர்ச்சி ஆனப்பிறகு பலருக்கு ஆரோக்கியத்தில் தொந்தரவு, உத்யோகத்தில் பிரச்சனை போன்ற சங்கடங்கள் ஏற்பட்டிருக்கும். அந்தப் பிரச்னைகள் சரியாகும்.
பலம்
வேலை இல்லாதவர்கள், நல்ல வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த காலத்தில் நல்ல உத்யோகம் கிடைக்கும். தொழிலில் நீண்ட காலமாக திட்டமிட்ட மாற்றங்களை செய்வீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் நிலவி வந்த தொந்தரவுகள் விலகும். உங்களின் பகைவர்களின் பலம் குறையும். நிலம் சார்ந்த பிரச்சனைகள், வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பரிகாரம்
வாழ்க்கை துணையுடன் இருந்த மோதல்கள் சரியாகி அந்யோநியம் அதிகரிக்கும். காதல் உறவில் இனிமைக் கூடும். திடீர் அதிர்ஷ்டத்தால் திக்கு முக்காடுவீர்கள். சமூகத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உங்கள் வீட்டின் அருகே உள்ள பெருமாள் கோயில் சென்று, உங்களின் எடைக்கு இணையான அரிசு, பரிப்பு உள்ளிட்டவற்றை தானமாக வழங்கி தரிசனம் செய்வதால் நல்ல பலன்கள் கிடைக்கும். எடைக்கு எடை முடியாவிடினும் உங்களால் முடிந்த உதவிகளை தானமாக செய்வதால் சிறப்பான பலன்களை பெறலாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications