குரு பெயர்ச்சி 2020: இந்த ஆறு ராசிக்காரர்கள் அவசியம் பரிகாரம் பண்ணுங்க

குரு பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி நிகழ்ந்துள்ளது. இந்த குரு பெயர்ச்சியால் ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மகரம், மீனம், மீதமுள்ள மேஷம்,மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம், கும்பம் ராசிக்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு பகவான் ஆலயங்களில் லட்சார்ச்சனை பரிகாரங்கள் நடைபெற்றன. பரிகார யாகங்களும் நடைபெற்றன. இந்த குரு பெயர்ச்சியால் ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மகரம், மீனம், மீதமுள்ள மேஷம்,மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம், கும்பம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

குரு பகவான் ராசிகளில் கர்ம ஸ்தானமான தொழில் ஸ்தானமான பத்தாம் வீடான மகரம் ராசியில் சஞ்சரிப்பதால் தங்கம், கோதுமை விலை உயரும். அரசியலில் மாற்றங்கள் ஏற்படும்.

குருவின் பார்வை படும் ரிஷபம், கடகம், கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் அற்புத பலன்கள் கிடைக்கப் போகிறது. இந்த குரு பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் எந்த கோவிலிலுக்கு செல்ல வேண்டும் என்றும் பார்க்கலாம்.

பத்தாம் வீட்டு கர்ம குரு

பத்தாம் வீட்டு கர்ம குரு

குரு பகவான் உங்க ராசி அதிபதி தொழில் ஸ்தான அதிபதி பத்தாம் வீட்டில் அமர்கிறார். பத்தில் குரு பதவி பறிபோகும் என்பார்கள். தொழில் அல்லது வேலையில் மாற்றங்கள் நிகழும். குருவின் பார்வை உங்க ராசிக்கு குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானம், ருண ரோக சத்ரு ஸ்தானத்தின் மீது விழுகிறது. பணம் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். வியாழக்கிழமைகளில் திருச்செந்தூர் முருகனை சென்று வழிபட பாதிப்புகள் குறையும்.

அஷ்டம குரு

அஷ்டம குரு

மிதுனம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம ஸ்தானத்தில் குரு அமர்வதால் அஷ்டம சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். உங்கள் பிரச்சினைகள் குறையும் உதவிகள் தேடி வரும். மிதுனம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டிய கோவில் தென் திட்டை ராஜகுருவை வணங்க நன்மைகள் நடக்கும். இந்த குரு பெயர்ச்சியால் ஏற்பட்ட பாதிப்பு விரைவில் நீங்கும்.

ருண ரோக சத்ரு ஸ்தான குரு

ருண ரோக சத்ரு ஸ்தான குரு

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு குரு நன்மைதான் செய்வார். குரு ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்ற சனியோடு இணைந்து அமர்கிறார். எதிரிகள் தொந்தரவு நீங்கும் என்றாலும் கடன் நோய் பிரச்சினை மன அழுத்தத்தை தரும்.
புதிய முயற்சிகள் எதையும் செய்யாதீர்கள். பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். கடன் வாங்குவதை தவிர்க்கவும் உங்களுடைய பணத்தை யாருக்கும் கடனாகக் கொடுக்காதீங்க. தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் குரு பெயர்ச்சி யாகத்தில் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளுங்கள். மேதா தட்சிணா மூர்த்தியை வணங்க பாதிப்புகள் குறையும்.

சுக ஸ்தான குரு

சுக ஸ்தான குரு

சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு குரு சாதகம் செய்ய மாட்டார். துலாம் ராசிக்கு குரு சுக ஸ்தானத்தில் அமர்வதால் அம்மாவின் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். வீடு, வண்டி வாகனம் வாங்கும் போது எச்சரிக்கை தேவை. நான்காம் வீட்டில் சனி சஞ்சரிக்கிறார். அம்மா, மனைவி உடல் நலனில் கவனமாக இருங்க. நீங்க செல்ல வேண்டிய கோவில் பாடி திருவலிதாயம் சென்று குருபகவானை வணங்கவும்.

தைரிய குரு கவனம்

தைரிய குரு கவனம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே. மூன்றாம் அதிபதி குரு பகவான் மறைகிறார். இது உங்களுக்கு நன்மை தருவதில்லை. சிறு தூர பயணங்கள் நன்மை செய்யும். குரு உங்க ராசிக்கு ஏழாம் வீட்டினை பார்க்கிறார். ஒன்பதாம் வீட்டினையும் லாப ஸ்தானத்தையும் பார்ப்பதால் திருமணம் கைகூடும், பாக்கியங்கள் கிடைக்கும், செய் தொழிலில் லாபம் வரும். சகோதர சகோதரி வகையில் மனஸ்தாபம் நடக்கும். பாதிப்புகள் குறைய நீங்கள் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் அருள்பாலிக்கும் குருபகவான், சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்ய நன்மைகள் நடக்கும்.

விரைய குரு விபரீத ராஜயோகம்

விரைய குரு விபரீத ராஜயோகம்

கும்பம் ராசிக்கு அதிபதி சனி. கும்பம் ராசிக்கு குரு லாப ஸ்தான அதிபதி, இரண்டாம் வீட்டிற்கு அதிபதி. நிறைய பணவரவு வந்தாலும் செலவுகள் வரும். குரு பார்வை உங்க ராசிக்கு நான்காம் வீடு, ஆறாம் வீடு, மற்றும் எட்டாம் வீடுகளை குரு பார்வையிடுகிறார். சோதனைகளை சாதனைகளாக்குவீர்கள். நடுத்தர வயதுடையவர்களுக்கு யோகம் வரும். வேலை தொழிலில் முன்னேற்றம் நடக்கும். வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்யலாம். நன்மைகள் நடக்கும். பரிகாரத்திற்காக நீங்க தாமிரபரணிக் கரையில் உள்ள நவ கைலாயங்களுள் ஒன்றான முறப்பநாடு கைலாயநாதர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய தோஷங்கள் நீங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+