குருப்பெயர்ச்சி: லக்கி பாஸ்கராக மாறும் கும்ப ராசி.. அடிச்சது ஜாக்பாட்.. வாழ்க்கையே மாறப்போகுது
குருப்பெயர்ச்சி: குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். 2025 மே மாதம் 14 ஆம் தேதி குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். இந்த குருப்பெயர்ச்சியில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி குரு பகவான் என்பவர் தனக்காரகன். குரு பகவான் பணத்துக்கு முக்கியமான கிரகம். தனம், பணம் ஒருவருக்கு நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஜாதகத்தில் குரு நன்றாக இருக்க வேண்டும். சுக்கிரன் சுகபோகத்துக்கு காரணமானவர். சுக்கிரன் கொடுக்கும் பணம் கையில் இருக்கும். ஆனால், குரு பகவான் கொடுக்கக் கூடிய பணம் என்பது பெரிய அளவில் இருக்கும்.

ஓராண்டுக்கு ஒரு முறை குருப்பெயர்ச்சி நடைபெறும். அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டு குரு பகவான் ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருந்தார். இந்நிலையில் வருகிற 14.5.2025 இரவு 11 மணியளவில் குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக குரு பகவான் நன்மைகளின் அதிபதி என்று அழைக்கப்படுவார். தான் இருக்கும் இடங்களில் அதிகளவு நற்பலன்களை கொடுப்பார். செல்வம், மகிழ்ச்சி, குடும்பம், ஆரோக்கியம் ஆகிய எல்லாவற்றிலும் குரு பகவானின் தாக்கம் இருக்கும். அதனால் தான் குரு பார்த்தால் கோடி நன்மை என்று சொல்வார்கள். அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் கும்ப ராசிக்காரர்கள் பெறக்கூடிய பலன்கள், கிடைக்க கூடிய அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனியில் இருந்து விலகுகிறார்கள். மன நிம்மதி, அமைதி, கடன் தொல்லையில் இருந்து விலக்கு ஏற்படும். குருவின் பார்வை பலம் காரணமாக அதீத பலம் கிடைக்கும். எந்தவிதமான புதிய முயற்சிகளையும் மேற்கொள்வது, இருக்கும் வேலையை விடுவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஆன்மிக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். குறைந்தபட்சம் ஒருமுறையாவது குருமார்களை நினைத்து விரதம் இருப்பது நல்லது நடக்கும். குலதெய்வ வழிபாடு அற்புதத்தை தரும்.
5 ஆம் இடத்தில் குரு பகவான் வருவதால் இழந்ததை மீண்டும் பெறக்கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில், வேலையில் அங்கீகாரம் கிடைக்கும். நின்றுபோன திருமணங்கள் நடக்கும். உங்களுடைய ராசிக்கு ராகு வரும்போது சிந்தித்து செயல்படக்கூடிய காலகட்டமாக இருக்கும். மற்றவர்கள் சொல்லும் ஆலோசனையைக் கேட்டு நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
பதவி உயர்வு கிடைக்கும். எடுத்த காரியங்களை அன்றன்றைக்கே முடிப்பது நல்லது. தள்ளிப் போடுவதை தவிர்ப்பது நல்லது. மருத்துவச் செலவுகள் செய்து வந்தவர்களுக்கு அந்த நிலை மாறும். குழந்தைகளுக்கு சுப காரியங்கள் செய்து மகிழ்வீர்கள். 6 ஆம் இடத்தில் குரு போகும்போது சத்ருக்களால் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். நவக்கிரகத்தில் இருக்கும் குரு பகவானுக்கு தீபமேற்றுவது நற்பலன்களைத் தரும்.
ஜென்மத்தில் ராகு இருப்பதால் மற்றவர்கள் பேசும்போது உங்களுக்கு எரிச்சல் உண்டாகும். கணவன், மனைவி ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. குரு பகவான் திரிகோண ஸ்தானத்தில் இருப்பது நல்ல காலகட்டம். பதவி, பெயர், புகழ் அந்தஸ்து உண்டாகும். குடும்ப ஸ்தானத்தில் முன்னேற்றதை தரும். குழந்தை வரவு நல்ல பலன்கள் தரும். இடமாற்றம் மனமகிழ்ச்சியை உண்டாக்கி கொடுக்கும்.
குழந்தைகள் மூலமாக பெரியவர்களுக்கு, பெரியவர்களால் குழந்தைக்கும் பெருமைகள் கிடைக்கும். நினைத்தது நடக்கும். மூத்த சகோதர, சகோதரிகளுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் திருமணம், கிரகப்பிரவேஷம் நடக்கக்கூடிய காலகட்டம். பிறரை நம்பி ஏமாறுவதற்கான வாய்ப்புள்ளது. கும்ப ராசிக்காரர்களுக்கு பலவித யோசனைகள் தோன்றும்.
ராகு பின்னோக்கி செல்வதால் பழைய விஷயங்களுக்கு செல்வீர்கள். அதை யோசிக்காமல் செல்வது நல்லது. ராகு கேதுவுக்கு அபிஷேகங்கள் செய்வது, துர்கை, விநாயகர் வழிபாடு நல்ல பலன்களைத் தரும்.
5 ஆம் இடத்தில் குரு வருவது அற்புத பலன்களைத் தரும். இதனைப் பயன்படுத்திக் கொள்வதும், பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதும் உங்கள் கையில் உள்ளது. ராசியில் ராகு வரும்போது நிறைய முன்னேறுவது, வெற்றி பெறுவது குறித்த எண்ணங்கள் தோன்றும். அதற்கான சரியான பாதையை குரு பகவான் பார்த்து வழி கொடுப்பார். வாய்ப்புகள் வரும்போது பயன்படுத்தி, அதில் முன்னேறுவது நல்லது.
குடும்பத்தினரின் துணை தேவைப்படும். குருமார்கள், அறிவு, அனுபவங்கள், நிபுணத்துவம் உங்களுக்கு கைகொடுக்கும். ஆன்மீக தொடர்பை அதிகப்படுத்திக் கொடுப்பது நல்லது. கடவுளைப் பற்றிய எண்ணமே உங்களுக்கு சாதக பலன்களைத் தரும்.












Click it and Unblock the Notifications