குருப்பெயர்ச்சி: மகரத்துக்கு இனி தொட்டதெல்லாம் பொன், அதிர்ஷ்டம்.. வெச்சு செய்யப்போகுது ஒரு விஷயம்

Subscribe to Oneindia Tamil

குருப்பெயர்ச்சி: குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். 2025 மே மாதம் 14 ஆம் தேதி குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். இந்த குருப்பெயர்ச்சியில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி குரு பகவான் என்பவர் தனக்காரகன். குரு பகவான் பணத்துக்கு முக்கியமான கிரகம். தனம், பணம் ஒருவருக்கு நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஜாதகத்தில் குரு நன்றாக இருக்க வேண்டும். சுக்கிரன் சுகபோகத்துக்கு காரணமானவர். சுக்கிரன் கொடுக்கும் பணம் கையில் இருக்கும். ஆனால், குரு பகவான் கொடுக்கக் கூடிய பணம் என்பது பெரிய அளவில் இருக்கும்.

Guru Peyarchi lucky zodiac signs

ஓராண்டுக்கு ஒரு முறை குருப்பெயர்ச்சி நடைபெறும். அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டு குரு பகவான் ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருந்தார். இந்நிலையில் வருகிற 14.5.2025 இரவு 11 மணியளவில் குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

பொதுவாக குரு பகவான் நன்மைகளின் அதிபதி என்று அழைக்கப்படுவார். தான் இருக்கும் இடங்களில் அதிகளவு நற்பலன்களை கொடுப்பார். செல்வம், மகிழ்ச்சி, குடும்பம், ஆரோக்கியம் ஆகிய எல்லாவற்றிலும் குரு பகவானின் தாக்கம் இருக்கும். அதனால் தான் குரு பார்த்தால் கோடி நன்மை என்று சொல்வார்கள். அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் மகர ராசிக்காரர்கள் பெறக்கூடிய பலன்கள், கிடைக்க கூடிய அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு 5 ஆம் இடத்தில் இருந்து 6 ஆம் இடத்துக்கு குரு பகவான் வருகிறார். ருண, ரோக, சத்ரு ஸ்தானம் என்பதால் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குரு பகவான் ராசியில் நீச்சமாகிறார். செவ்வாயில் உச்சமாகிறார். 6 இல் குரு வரும்போது தலை, மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

வயிறு உபாதைகளில் கவனமாக இருப்பது நல்லது. தொடைகளில் பிரச்சனை, கொழுப்பு சார்ந்த பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. அதிக கடன்களை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. செவ்வாய் ராசியில் உச்சமாவதால் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பெரிய பிரச்சனைகள் எதுவும் வராது. பெருமாளை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.

ஏழரை ஆண்டுகளாக பல்வேறு பிரச்சனைகள், இழப்புகளைச் சந்தித்திருப்பீர்கள். 3, 12 க்கும் உரிய கிரகம் 6 இல் மறைவது நல்லது. ஏழரை சனி விடுபட்டு, 2 இல் ராகு, 8 இல் கேது வரும் நிலையில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலை, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணம், பொருளாதார விஷயங்களில் ஏற்றத்தைக் காண்பீர்கள்.

தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். இறக்குமதி, ஏற்றுமதி, தொழிலை விரிவுபடுத்துவது, கிளைகள் ஆரம்பிப்பது, புதிய தொழில் ஆரம்பிப்பது போன்ற காரியங்கள் அருமையான வெற்றியைத் தரும். விநாயகர் வழிபாடு அற்புதப் பலன்கள் கிடைக்கும்.

எடுக்கும் காரியங்களில் சமயோஜித புத்தியுடன் செயல்பட வேண்டும். பொறுமை, நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. ஐப்பசி, கார்த்திகை மாதத்தில் அற்புதமான பலன்கள் கிடைக்கும். மருத்துவம் சார்ந்த விஷயங்களை செய்து கொள்ள நல்ல காலகட்டம். குடும்பத்தில் எந்த விஷயத்தில் உங்களுடைய தலையீடு இருக்க வேண்டும் என்று யோசித்து அதில் தலையிடுவது நல்லது.

வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு விளக்கேற்றுவது நல்லது. காலை 6 முதல் 7 மணிக்குள் 3 நெய் விளக்குகள் ஏற்றுவது நல்லது. படிக்கக்கூடிய குழந்தைகள் ஹயக்ரீவர் வழிபாடு செய்வது நல்லது. ஏழை மாணவர்களுக்கு பொருளாதார உதவி செய்வது நல்லது.

மற்றவர்கள் உங்களை காயப்படுத்தும் சூழல் உள்ளது. எந்த காரியத்தை தொட்டாலும் அதை நாசுக்காக பேசி சாதிப்பீர்கள். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனையை பெரிதுபடுத்தாமல் தீர்ப்பது நல்லது. வேலையில் வேகமாக செயல்படுவது நல்லது. ஒரு வருடத்துக்குள் புதிய வேலை, வேலை மாற்றம், வேலையில் முன்னேற்றம், சொந்த தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டு.

உடல் பருமன், வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஏழரை சனி உங்களுக்கு ஒரு பெரிய விடுதலையைத் தரும். வேலை, கடன் என அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். கோ பூஜை வழிபாடு செய்வது சிறப்பான பலன்களைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+