குருப்பெயர்ச்சி: விருச்சிக ராசிக்கு பண வரவு கொட்டும்... ஆனா வெச்சு செய்யப் போகுது கிரகங்கள்
குருப்பெயர்ச்சி: குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். 2025 மே மாதம் 14 ஆம் தேதி குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். இந்த குருப்பெயர்ச்சியில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி குரு பகவான் என்பவர் தனக்காரகன். குரு பகவான் பணத்துக்கு முக்கியமான கிரகம். தனம், பணம் ஒருவருக்கு நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஜாதகத்தில் குரு நன்றாக இருக்க வேண்டும். சுக்கிரன் சுகபோகத்துக்கு காரணமானவர். சுக்கிரன் கொடுக்கும் பணம் கையில் இருக்கும். ஆனால், குரு பகவான் கொடுக்கக் கூடிய பணம் என்பது பெரிய அளவில் இருக்கும்.

ஓராண்டுக்கு ஒரு முறை குருப்பெயர்ச்சி நடைபெறும். அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டு குரு பகவான் ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருந்தார். இந்நிலையில் வருகிற 14.5.2025 இரவு 11 மணியளவில் குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக குரு பகவான் நன்மைகளின் அதிபதி என்று அழைக்கப்படுவார். தான் இருக்கும் இடங்களில் அதிகளவு நற்பலன்களை கொடுப்பார். செல்வம், மகிழ்ச்சி, குடும்பம், ஆரோக்கியம் ஆகிய எல்லாவற்றிலும் குரு பகவானின் தாக்கம் இருக்கும். அதனால் தான் குரு பார்த்தால் கோடி நன்மை என்று சொல்வார்கள். அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் விருச்சிகம் ராசிக்காரர்கள் பெறக்கூடிய பலன்கள், கிடைக்க கூடிய அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு குரு பகவான் 8 ஆம் இடத்துக்குப் போகிறார். ஆனால் மற்ற கிரகங்கள் எதுவுமே பெரிய அளவில் சாதகமாக இல்லை என்பதால் எல்லா விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது. பெண்கள் காதல் வாழ்க்கையில் இருந்தால் திருமணம் தொடர்பான விஷயங்களில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. நட்புகளால் கேடு வருவதற்கான வாய்ப்புள்ளது.
உடல் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. செயற்கை முறையில் கருத்தரிப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பப்பை பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இளம்பருவத்தில் வயதுக்கு வரக்கூடிய குழந்தைகளுக்கு ரத்தப் போக்கு தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புள்ளது.
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, நல்ல உணவுகளை சாப்பிடுவது நல்லது. வீட்டில் நவக்கிரக ஹோமம் செய்வது நல்ல பலன்களைத் தரும். சிவாலயங்களுக்குச் சென்று வருவது, வியாழக்கிழமை தோறும் கருடனுக்கு விளக்கேற்றி வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். சத்ருக்களுடைய பயம் விலகும்.
குரு 8 இல் மறைகிறார். 4 ஆம் இடத்தில் ராகு பகவான், 5 ஆம் இடத்தி சனி பகவான், 10 ஆம் இடத்தில் கேது பகவான் இருக்கிறார். விருச்சிக ராசியினர் பல விதமான பிரச்சனைகளை சந்தித்துவிட்டதால் எந்தவொரு விஷயங்களையும் சந்திக்கக்கூடிய திறமைகள் அதிகம் இருக்கும். யாரையும் அதிக அளவில் நம்பாமல் இருப்பது நல்லது. எல்லோரிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீடு வாடகைக்கு இருப்பவர்களுக்கு சிறு சிறு பிரச்சனைகள் வரும். வாகனத்தால் சிறு சிறு பிரச்சனைகள் வந்து பெரிதாகக்கூடிய வாய்ப்புண்டு.
வேலையில் இடமாற்றம் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பண வரவுகள் வரும். உதவிகள் செய்துவிட்டு அதை நிறைய பேரிடம் மற்றவர்கள் சொல்வதால் உங்களுக்கு மனக் கஷ்டங்களை ஏற்படுத்தும். மற்றவர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அரசியலுக்கு போகிறவர்களுக்கு நல்ல யோகம் உண்டாகும். எந்தவொரு விஷயத்தையும் குடும்பத்தில் கேட்டு செய்வது நல்லது. மலைக் கோயில் முருகனை வழிபாடு செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும்.
அஷ்டமத்தில் குரு வருவதால் முக்கியமான நபர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவையை நிறைவேற்ற நீங்கள் தியாகம் செய்ய வேண்டியதிருக்கும். படிக்கும் மாணவிகள் படிப்பதற்கு மிகவும் கஷ்டப்படுவீர்கள். ஆனாலும் குருவின் பார்வை இருப்பதால் கஷ்டப்பட்டாலும் அதில் வெற்றி பெறுவீர்கள்.
பூர்வ ஜென்மத்தில் செய்த பலன்களைப் பெறுவீர்கள். இந்த காலகட்டங்களில் புண்ணிய காரியங்களில் ஈடுபடுவது நல்லது. வயோதிகர்களை நன்றாகப் பார்த்துக் கொள்வது நல்லது. ஆகாரம், தூக்கத்தில் கவனமாக இருக்க வேண்டும். அஷ்டமி திதியன்று பைரவர் வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும்.
மனதளவில் ஆழமாக ஒரு அழுத்தத்திலேயே இருப்பீர்கள். சிறியவிதமான தோல்விகளையோ, எதிர்ப்புகளையோ தாங்கக்கூடிய மனப்பக்குவம் இருக்காது. குரு பார்வை தன ஸ்தானத்தில் விழுவதால் பண வரவு நன்றாக இருக்கும். விரைய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் நல்ல லாபகரமான பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண்களுக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். பொற்காலமாக இருக்கும்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
ஜூன் முதல் 20 நாட்கள் கவனம்.. கோபம் கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம்..குரு சுக்கிரன் அருளால் பணமழை -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள்












Click it and Unblock the Notifications