2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்!

Subscribe to Oneindia Tamil

Guru Peyarchi 2026: எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் குருப்பெயர்ச்சி திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெறும் இந்த காலகட்டத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். 2026 ஆம் ஆண்டின் குருப்பெயர்ச்சி திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி அதிகாலை 1.50 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். கடகம் என்பது சந்திரனின் வீடு. சந்திரனின் வீட்டில் குரு உச்சம் பெறுகிறார்.

guru-peyarchi-2026-for-magaram-rasi-big-changes-career-growth-financial-luck-ahead

குருவுக்கு ஸ்தான பலத்தைவிட பார்வை பலம் மிகுந்த விசேஷமானது. விருச்சிகம், மகரம், மீன ராசியை பார்க்கும் குரு பகவானால் மகர ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கப் போகிறது, வழிபாடுகள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

மகர ராசி பலன்

மகர ராசியினருக்கு 6 ஆம் இடத்தில் இருக்கும் குரு 7 ஆம் இடத்திற்கு வருகிறார். 7 ஆம் இடத்தில் உச்சம் பெற்று சமசப்தம பார்வையாக மகர ராசியைப் பார்க்கிறார். ஏழரை சனியில் இருந்து விடுதலை பெற்றுள்ள உங்களுக்கு சனிக்கு குரு பார்வை கிடைப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் காலகட்டம். தைரியம் ஏற்படும். எல்லா காரியங்களிலும் முன்னேற்றம் ஏற்படும்.

தொட்டது துலங்கக்கூடிய அற்புதமான காலகட்டம். அடுத்தடுத்து சுபகாரியங்கள் நடக்கும். டிசம்பர் மாதத்தில் ராகு ஜென்மத்தில், கேது 7 ஆம் இடத்திலும் வருவதால் கோளார் பதிகத்தை கேட்பது, படிப்பது நல்லது. சர்ப்ப தோஷ பாதிப்புகள் காணப்படுவதால் மன சஞ்சலம், மன அழுத்தம், குடும்பத்தில் சண்டைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கணவன், மனைவி உடல்நிலையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

வீடு வாங்கும் யோகம்

உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதையும் தவிர்ப்பது நன்மை பயக்கும். வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, சம்பள உயர்வு பெறுவது, வண்டி வாகனம் வாங்குவது போன்ற யோகங்கள் உண்டாகும். அரசாங்க கெளரவம் ஏற்படும்.

அரசு சார்ந்த விஷயங்களில் அற்புதமான யோகம் உண்டாகும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். பதவி உயர்வு அல்லது பொறுப்புகள் அதிகரிக்கலாம்.
வியாபாரத்தில் புதிய கூட்டாளர்கள் மூலம் லாபம் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த முன்னேற்றம் கைகூடும். வருமானம் படிப்படியாக உயரும்.
பழைய கடன்களை அடைக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கவனம்

முதலீடுகளில் கவனமாக செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும். குடும்ப செலவுகள் அதிகரித்தாலும் வருமானமும் கூடும். திருமணம், குடும்பம், திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது. கணவன், மனைவி உறவில் இருந்த பிரச்சனைகள் குறையலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறலாம்.

உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். ஆரோக்கியம், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மன அழுத்தம் குறையும். உணவு மற்றும் தூக்கத்தில் கவனம் செலுத்துவது நல்லது. 2026 குருப்பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு உறவுகள், திருமணம், தொழில் மற்றும் சமூக அந்தஸ்தில் முன்னேற்றம் தரக்கூடிய காலமாக அமையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+