2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்!
Guru Peyarchi 2026: எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் குருப்பெயர்ச்சி திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெறும் இந்த காலகட்டத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். 2026 ஆம் ஆண்டின் குருப்பெயர்ச்சி திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி அதிகாலை 1.50 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். கடகம் என்பது சந்திரனின் வீடு. சந்திரனின் வீட்டில் குரு உச்சம் பெறுகிறார்.

குருவுக்கு ஸ்தான பலத்தைவிட பார்வை பலம் மிகுந்த விசேஷமானது. விருச்சிகம், மகரம், மீன ராசியை பார்க்கும் குரு பகவானால் மிதுன ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கப் போகிறது, வழிபாடுகள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசியினருக்கு ஜென்மத்தில் இருந்த குரு 2 ஆம் இடத்திற்குச் செல்கிறார். கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் இல்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனி அற்புதத்தை கொடுக்கக் கூடிய காலகட்டமகா இருக்கும். ஆத்ம ரீதியான அனுகூலம் காணப்படும். பழைய கடன்களை அடைத்து முடிப்பதற்கான அமைப்பு உண்டாகும்.
யோகம்
ஆரோக்கியத்தில் ஓரிரு நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரண நலம் பெறுவீர்கள். எப்போதும் பதட்டமாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறும். மன அழுத்தம் தீரும். தொட்டது துலங்கக்கூடிய காலகட்டம். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். அதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
வார்த்தையில் கவனம்
பேசும் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். யாருடனும் வாக்குவாதம் செய்யாமல் இருக்க வேண்டும். தொழில் அபிவிருத்தி அற்புதத்தை ஏற்படுத்தும். யாருக்காகவும் ஜாமீனம் கொடுக்காமல் இருக்க வேண்டும். இதுவரை தடைபட்டுக் கொண்டிருந்த விஷயங்கள் இனி நடக்க ஆரம்பிக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் மாறும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம்.
பணவரவு
குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெறுவதால் பணவரவு, குடும்ப முன்னேற்றம், தொழிலில் புதிய வாய்ப்புகள் போன்ற பல நன்மைகள் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வேலை வாய்ப்பு, பதவி உயர்வு அல்லது தொழில் வளர்ச்சி போன்ற விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும் காலம் இது.
கவலை தீரும்
மேலும், குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். மனக்கவலைகள் குறைந்து தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கக்கூடும். ஆன்மீக ஆர்வம் அதிகரித்து கோவில் தரிசனம், தெய்வ வழிபாடு போன்றவற்றில் ஈடுபாடு உருவாகும். இருப்பினும் செலவுகளை கட்டுப்படுத்தி, தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
வழிபாடு
இந்த குருப்பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்தையும் புதிய நம்பிக்கையையும் தரக்கூடியதாக அமையும். திருவெண்காடு புதன் ஸ்தலத்திற்குச் சென்று வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். காது, மூக்கு, தொண்டை, கழுத்துப் பகுதி, தலைசுற்றல் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இதயப் பகுதி, முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications