Guru Peyarchi: மீனம் ராசிக்கு அதிர்ஷ்டம் உச்சத்தில்! குருப்பெயர்ச்சி தரும் அசத்தல் பலன்கள்
Guru Peyarchi 2026: 2026 குருப்பெயர்ச்சி ஜூன் 2 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி மே 26 ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் படி ஜூன் 2 ஆம் தேதியும் குருப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது.

குருவின் இந்த பெயர்ச்சியால் மீனம் ராசியினருக்கு தொழில், பணவரவு, சமூக மதிப்பு, குடும்ப நலன் மற்றும் புதிய வாய்ப்புகளில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில காரியங்கள் நிறைவேறக்கூடும். என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை விரிவாக இந்த வீடியோவில் பார்க்கலாம்.
மீனம்
மீனம் ராசியினருக்கு குரு பகவான் 9 ஆம் பார்வையாக பார்க்கிறார். ஜென்மத்தில் சனி இருந்தாலும் குரு பார்வை உள்ளது. அடிவயிறு, பாதம், முட்டி தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வலுக்கலான இடங்களில் மிகுந்த கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது அதீத கவனமாக இருக்க வேண்டும். மற்ற அனைத்து விஷயங்களிலும் நன்மைகள் ஏற்படும். மீன ராசியினர் இருக்கக்கூடிய வீடுகளில் விசேஷங்களுக்கு குறைவிருக்காது.
பணவரவு
பணவரவு அற்புதமாக இருக்கும். முதலீடுகளை செய்து மகிழ்வீர்கள். வண்டி,வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பில் ஏற்றம் ஏற்படும். தனித்தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள், பாதிப்புகள் நிவர்த்தியாகும். நிறைய சுபநிகழ்ச்சிகள் நடக்கும். திருமண யோகம் உண்டாகும்.
முதலீடுகள்
பெரிய முதலீடுகளை செய்வீர்கள். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். அப்பா, அம்மாவின் 70, 80 ஆம் கல்யாணம் செய்து வைக்கக்கூடிய யோகம் உண்டாகும். அப்பா, அம்மாவின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். அவர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்த விஷயங்களையும் செய்து தருவீர்கள்.
வழிபாடு
அவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வது போன்ற அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி வைப்பீர்கள். திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
முன்னேற்றம்
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பிள்ளைகளின் பழக்க வழக்கங்கள், நட்புகள், ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய விஷயங்களில் தகராறு செய்வது பெரிய சங்கடத்தை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மீன ராசியினர் ஆரோக்கியம், பழக்கவழக்கத்தில் கவனமாக இருப்பது நல்லது.
-
குரு 12-இல்.. சிம்ம ராசிக்கு வெளிநாட்டு யோகம், புதிய வாய்ப்புகள்.. வாழ்க்கையில் பெரிய திருப்பம்! -
Guru Peyarchi: மேஷ ராசிக்கு அதிர்ஷ்டத்தை தரும் குருப்பெயர்ச்சி.. வாழ்க்கையை மாற்றும் 3 விஷயங்கள் -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. வேலையில் முன்னேற்றம் -
Guru Peyarchi: கும்ப ராசிக்கு காத்திருக்கும் ஆபத்து.. இந்த விஷயங்களில் மிகுந்த கவனம் அவசியம் -
Guru Peyarchi: மகர ராசிக்கு காத்திருக்கும் ராஜவாழ்க்கை.. இந்த விஷயங்களில் மட்டும் கூடுதல் கவனம் -
Guru Peyarchi: தனுசு ராசியினரே தயாராகுங்கள்! குரு தரப்போகும் அபார யோகங்கள் -
Guru Peyarchi: கிங்காக மாறப்போகும் துலாம் ராசி.. 10 இல் வரும் குரு அள்ளித் தரும் அதிர்ஷ்ட யோகங்கள் -
பத்ர ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. இந்த 5 விஷயம் உங்களுக்கு கண்டிப்பா நடக்கும் -
விருச்சிகத்துக்கு பொற்காலம் ஆரம்பம்.. குருவின் அருளால் வரப்போகும் ராஜயோகம் -
ஆனி மாத பலன்கள்: கடக ராசிக்கு வச்ச குறி தப்பாது.. ஜூலை 1க்கு பிறகு ராஜயோகம்.. பேச்சு தான் பிரச்சனையே -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி











Click it and Unblock the Notifications