மேஷ ராசிக்காரர்களே ரெடி ஆகுங்க.. குரு பகவான் திறக்கப்போகும் அதிர்ஷ்ட வாசல்!

Subscribe to Oneindia Tamil

Guru Peyarchi 2026: 2026 ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெறுகிறது. இந்த உச்ச குருப்பெயர்ச்சியால் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, அதிர்ஷ்டம் ஏற்படுமா என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

ஜோதிடத்தில் மிகவும் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். அறிவு, பணம், திருமணம், குழந்தை பாக்கியம், ஆன்மீகம், அதிர்ஷ்டம் ஆகியவற்றிற்கு காரணமான கிரகமே குரு. ஒருவரின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் முக்கிய கிரகமாகவும் குரு பார்க்கப்படுகிறார்.

guru-peyarchi-2026-mehsam-aries-natives-rasi-set-for-massive-career-money-growth

குரு பகவான் ஒரு ராசியில் சுமார் ஒரு வருடம் தங்கி, பின்னர் அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இப்படியாக 12 ராசிகளையும் சுற்றி வர அவருக்கு 12 ஆண்டுகள் ஆகும். இதுவே "குருப்பெயர்ச்சி" என்று அழைக்கப்படுகிறது.

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குருப்பெயர்ச்சியில், குரு பகவான் மீன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். கடகம் என்பது சந்திரன் ஆட்சி செய்யும் வீடு. அதிலும் குரு உச்சம் பெறுவதால் இந்த பெயர்ச்சி மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த குருப்பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு ராஜயோகம், பணவரவு, திருமண யோகம், தொழில் முன்னேற்றம் கிடைக்கலாம். அதேசமயம் சில ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய சூழலும் உருவாகலாம்.

குருவின் பார்வை படும் ராசிகளுக்கு பெரிய மாற்றங்கள், அதிர்ஷ்ட வாய்ப்புகள் மற்றும் ஆன்மீக முன்னேற்றங்கள் ஏற்படும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் மேஷ ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.

மேஷம் ராசி பலன்

குருப்பெயர்ச்சி மேஷ ராசியினருக்கு மிகப்பெரிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரக்கூடியதாக அமைகிறது. குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெறுவதால், மேஷ ராசியினரின் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுவரை 3 ஆம் இடத்தில் இருந்து வந்த குரு பகவான் உச்ச குருப்பெயர்ச்சியாகி 4 ஆம் இடத்திற்கு வந்திருக்கிறார். 8, 10, 12 ஆம் இடங்களைப் பார்ப்பது மிகப்பெரிய யோக அமைப்பாகும்.

அதிர்ஷ்டங்கள்

இதுவரை தொழில், வியாபாரம், படிப்பு நன்றாக இல்லை என்பவர்களுக்கு ஜூன் மாதம் முதல் நல்ல மாறுதல்கள் வரும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்படும் காலகட்டம். 8 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் வியாபார பெருமக்களுக்கு தொழில் ரீதியாக பெரிய அளவில் லாபங்கள் காணப்படும். ஏழரைச் சனியாக 12 ஆம் இடத்தில் இருக்கும் சனி பகவானை குரு பகவான் பார்ப்பதால் இதுவரைக்கும் இருந்து வந்த அசுப செலவுகள் அனைத்தும் தீரும்.

பதவி உயர்வு

தொடர்ந்து மருத்துவ செலவுகள், பெற்றோருக்கு, உங்களுக்கு மருத்துவ செலவு, கடன் தொல்லை போன்ற நிலைமைகள் அனைத்தும் நீங்கி, நல்ல செலவுகள் ஏற்படும். வேலை தேடி வந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நல்ல செய்திகள் கிடைக்கலாம். தொழிலில் இருந்த தடைகள் நீங்கி வளர்ச்சி அதிகரிக்கும்.

பண வரவு

பணவரவு அதிகரிக்கும் காலம் இது. கடன் சுமைகள் குறையும். புதிய வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சேமிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மகன், மகளுக்கு நற்செலவுகள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள், அறிமுகங்கள் ஏற்படும். சோஷியல் மீடியா, பங்குச் சந்தையில் பண வரவு ஏற்படும் காலகட்டமாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்படும். மன அழுத்தமான நிலைகளில் இருந்து வெளியில் வருவீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+