விருச்சிகத்துக்கு பொற்காலம் ஆரம்பம்.. குருவின் அருளால் வரப்போகும் ராஜயோகம்
Guru Peyarchi 2026: 2026 குருப்பெயர்ச்சி ஜூன் 2 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி மே 26 ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் படி ஜூன் 2 ஆம் தேதியும் குருப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது.

குருவின் இந்த பெயர்ச்சியால் விருச்சிகம் ராசியினருக்கு தொழில், பணவரவு, சமூக மதிப்பு, குடும்ப நலன் மற்றும் புதிய வாய்ப்புகளில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில காரியங்கள் நிறைவேறக்கூடும். என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை விரிவாக இந்த வீடியோவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசியினர் சந்திரன் நீச்சமான ராசி. 8 ஆம் இடத்தில் இருந்த குரு 9 ஆம் இடத்தில் வந்து உச்சம் பெற்று ராசியைப் பார்க்கிறார். அதனால், அற்புதமான காலகட்டமாக இருக்கும். விருச்சிக ராசியினருக்கு 2, 5க்கும் உரிய குரு பகவான் 9 ஆம் இடத்திற்கு வருவது மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை தரும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
புதியவரவு
பாரம்பரிய தொழில் செய்யக்கூடியவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வாரிசு, வம்சம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் நிறைய நன்மைகள் நடக்கும் காலகட்டம். புதிய வரவுகள் உண்டாகும். வயிறும், ஜீரணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குறை ரத்த அழுத்தம், அதீத ரத்த அழுத்தம், ஹார்மோன் குறைபாடுகளில் கவனம் தேவை.
அனுகூலம்
குலதெய்வ கோயிலுக்குச் சென்று வருவது ஏற்றத்தைத் தரும். தைரியம் ஏற்படும். வாகனங்களில் அனுகூலம் காணப்படும். புத்திர சந்தான பாக்கியம் கிடைக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பிறந்த இடங்களில் நிறைய நன்மைகள் ஏற்படும். பிறந்த இடத்தில் வீடு வாங்குவது, விவசாய நிலங்கள் பார்ப்பது, நீண்ட நாட்களாக பார்க்க முடியாமல் இருந்த உறவுமுறைகளைப் பார்க்கக்கூடிய அமைப்பு ஏற்படும்.
செல்வாக்கு
கோர்ட், கேஸ் போன்ற நிலைமைகள் எல்லாம் மாறி சந்தோஷமான அமைப்பு ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு ஏற்படும். உத்தியோகத்தில், தொழிலில், வியாபாரத்தில், படிப்பில் ஏற்றம் உண்டாகும். விடுபட்ட திருமணம், தடைபட்ட திருமணங்கள் உண்டாகும். இதுவரை குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு இனி குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
முன்னேற்றம்
வேலையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். வேலையில் ப்ரோமோஷன், இன்கிரீமென்ட் இல்லாமல் இருந்தவர்களுக்கு எல்லாம் இனி நிறைய நன்மைகளைப் பெறுவீர்கள். விருச்சிகத்துக்கு 5 ஆம் பார்வை இருப்பதால் கடந்த 10 ஆண்டுகளாக மிகப்பெரிய பிரச்சனைகளைச் சந்தித்து வந்திருப்பார்கள். இப்போது நல்ல நேரம் ஆரம்பித்துள்ளது. கோபத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும்.
வழிபாடு
எல்லா காரியங்களையும் கவனமாகச் செய்தால் மிகப்பெரிய நன்மைகள் ஏற்படும். திருநள்ளாறு சென்று வழிபாடு செய்து வருவது சனியின் பாதிப்பிலிருந்து காத்து சகலவித முன்னேற்றங்களையும் ஏற்படுத்தும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
-
குருப்பெயர்ச்சி: கடக ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம்.. வேலை, வருமானத்தில் முன்னேற்றம்! -
குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்கு பேச்சில் தான் கண்டமே.. இந்த விஷயங்களை செய்திடவே செய்திடாதீங்க -
ஆனி மாத பலன்கள்: கடக ராசிக்கு வச்ச குறி தப்பாது.. ஜூலை 1க்கு பிறகு ராஜயோகம்.. பேச்சு தான் பிரச்சனையே -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. வேலையில் முன்னேற்றம் -
Guru Peyarchi: மேஷ ராசிக்கு அதிர்ஷ்டத்தை தரும் குருப்பெயர்ச்சி.. வாழ்க்கையை மாற்றும் 3 விஷயங்கள் -
பத்ர ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. இந்த 5 விஷயம் உங்களுக்கு கண்டிப்பா நடக்கும் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications