குருப்பெயர்ச்சி பலன் 2026: தனுசு ராசிக்கு அள்ளி கொடுக்கும் குரு.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்

Subscribe to Oneindia Tamil

Guru Peyarchi 2026: ஞானக்காரகன் என்று அழைக்கப்படும் குரு பகவானின் பெயர்ச்சியானது இந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2026 ஜூன் மாதம் 2 ஆம் தேதி இந்த வருடத்திற்கான குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனிப்பெயர்ச்சி இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறையும், ராகு கேது பெயர்ச்சி 18 மாதங்களுக்கு ஒருமுறையும், குருப்பெயர்ச்சி 12 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. வருடாந்திர கிரகங்களான சனி, ராகுகேது, குரு ஆகிய 3 கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

guru-peyarchi-2026-what-kind-of-benefits-will-get-dhanusu-rasi-people-during-this-guru-peyarchi

ஜூன் மாதம் 2 ஆம் தேதி தனுசு வீட்டில் உச்ச குருவாக அமரும் குரு பகவான் மூன்று மாதம் கழித்து தனுசு வீட்டிற்குச் செல்கிறார். அங்கு மூன்று மாதம் இருந்துவிட்டு மீண்டும் தனுசுக்கு வருகிறார். அதிசார குருப்பெயர்ச்சியாக இருந்தாலும் முதலில் உச்சம், பிறகு நட்பான நிலை என்கிற வகையில் இந்த குரு பகவான் பெரும்பாலும் நன்மைகளைத் தருவார்.

இந்த குருப்பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப்போகும் நன்மைகள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசியினருக்கு 7 ஆம் இடத்தில் இருந்து வந்த குரு பகவான் இப்போது 8 ஆம் இடத்திற்கு மாறுகிறார். உங்கள் ராசிநாதன் குரு 8 ஆம் இடத்தில் உச்சத்தை அடைவது மிகப்பெரிய மேன்மைகளைக் கொடுக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள், நல்ல சம்பவங்கள் நடக்கும். எந்த விஷயத்தையோ செய்யப்போய் நல்ல பலன்களை அனுபவிக்கும் யோகம் உண்டு.

வெளிநாடு யோகம்

8, 10 இடங்கள் சுபத்துவமாக இருப்பதால் வெளிநாடு, வெளிமாநிலம் செல்லக்கூடிய யோகம் உண்டாகும். பாஸ்போர்ட், விசா, சிட்டிசன்ஷிப் கிடைக்கும் யோகம் உண்டு. வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருப்பவர்களுக்கு நல்ல வேலை, இருக்கும் இடத்திலேயே வீடு, தொழில் அமையும் யோகமான அமைப்பு உள்ளது. நிம்மதியான சூழல்கள் ஏற்படும். வாகன மாற்றங்கள் ஏற்படக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

பணவரவு கொட்டும்

தன லாபங்கள் அபரிமிதமானதாக கிடைக்கும் யோகம் உண்டு. குரு 2, 4, 12 ஆம் இடத்தைப் பாரக்கிறார். கொஞ்சம் அலைச்சலான சூழல்கள் இருக்கும். இருப்பினும் நல்ல காசு பணங்கள் வந்து சேரும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. இழந்த இடத்திலேயே பணம் பெறும் யோகம் உண்டாகும். பங்குச் சந்தை, யூக வணிகம் போன்ற இடத்தில் அபரிமிதமான பணங்களை சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

அனுகூலம்

இப்போது உள்ளது வருமானத்தை விட பத்து மடங்கு வருமானம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். சிலருக்கு அமானுஷ்யமான அமைப்புகளில் ஆர்வம் அதிகரிக்கும். அதன் மூலமாக சில நல்ல விஷயங்கள் நடக்கும் அமைப்பு உள்ளது. எதிர்பாராத சந்திப்புகள் நடக்கும் யோகம் உண்டு. தொடர்புகள் விட்டுப்போன நண்பர்கள் மூலமாக மீண்டும் ஒருவகையில் வாழ்க்கை நன்றாக செல்லும் அமைப்பு ஏற்படும்.

குடும்பம்

காதலன், காதலி அமைப்பு ஏற்படும். குடும்ப அமைப்பு அற்புதமாக இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். உத்தியோகம், தொழில், படிப்பு, வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெற்றிகளோடு ஆரம்பிக்கும் காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+