Guru Peyarchi 2026: "காசு பணம் துட்டு மணி மணி"..தனுசு ராசிக்கு அஷ்டலட்சுமி யோகம்.. இனி ஏறுமுகம் தான்
Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டின் முக்கியமான கிரக மாற்றங்களில் ஒன்றாக கருதப்படும் குருப்பெயர்ச்சி, பல ராசிகளின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது. மீன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவானால் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
குருப்பெயர்ச்சியான வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மே 25 ஆம் தேதியன்றும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. குரு பகவான் மீனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். கடகம் என்பது சந்திரன் ஆட்சி பெற்ற வீடு. குரு அங்கு உச்சம் பெறுகிறார். உச்சம் பெறக்கூடிய குருவின் ஸ்தான பலத்தை விட பார்வை பலம் என்பது மிகவும் முக்கியம்.

குரு விஷேச பார்வையாக 5 ஆம் இடமான விருச்சிகத்தைப் பார்க்கிறார். சமசப்த பார்வையாக மகரத்தைப் பார்க்கிறார். 9 ஆம் பார்வையாக மீனத்தைப் பார்க்கிறார். விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கு குரு பார்வை படுவதால் மிகுந்த பலம் பெறும். ஜனன காலத்தில் இந்த 3 ராசிகளுக்கும் நன்றாக இருந்தால் பலம் அதிகமாகும். கடகத்தில் இருக்கும் குரு தனுசு ராசியினருக்கு என்னவிதமான பலன்களை கொடுக்கப் போகிறார், தெய்வ வழிபாடு முறைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியினருக்கு ஜென்மத்திற்கும், 4க்கும் உரிய குருவானவர 8 ஆம் இடத்திற்கு அஷ்டமத்திற்கு குரு வருகிறார். எல்லா சுப காரியங்களையும் குரு பகவான் செய்து கொடுக்கக்கூடிய சூழல் ஏற்படும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். ஆனால், அந்த செலவுகள் எல்லாம் சந்தோஷ செலவுகளாக இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும்.
பணவரவு
உறவுகள் தொடர்பான விஷயங்களில் அனுகூலங்கள் காணப்படும். ரத்த பந்த உறவுகளுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும், நன்மைகளுக்காக செலவு செய்ய வேண்டும் என கனவு கண்டு கொண்டிருப்பீர்கள். எல்லா இடத்தில் இருந்து பணம் வரக்கூடிய யோகம் உண்டு. அதனால், நிறைய ஏற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் ஏற்றம் ஏற்படும். பெரிய அளவுக்கு அனுகூலம் காணப்படும்.
அனுகூலம்
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட நல்லவை நடக்கும். குடும்பத்தில் நிறைய நன்மைகள் நடைபெறும். வீடு மாறுவது, சமையலறை மாற்றுவது, இன்டீரியர் டெக்கரேட் செய்வது, புதிய வீட்டுக்குச் செல்வது என அனைத்து விஷயங்களும் உங்களுக்கு கிடைக்கும். யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய அமைப்பு உள்ளது.
திருமண யோகம்
தனுசு ராசிக்கு அஷ்டமத்தில் குரு இருக்கும்போது திருமண யோகம் உண்டாகும். நீண்ட நாட்களாக மணமகன், மணமகள் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது நல்ல வரன்கள் கிடைக்கும். 2 ஆம் இடத்தையும், 12 ஆம் இடத்தையும் குரு பாரக்கும்போது நிறைய அதிர்ஷ்டங்கள் நடக்கும். ஆரோக்கியத்தை மட்டும் நன்றாகப் பார்த்துக் கொள்வது நல்லது.
ஆரோக்கியம்
ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. உணவுக் கட்டுப்பாடு வைத்துக் கொள்ள வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நன்மையைத் தரும். தனிப்பட்ட செல்வாக்கு, கெளரவம், ஏற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் எல்லாம் தீரும். தொழில் அமைப்பில் அற்புதமான மாற்றங்கள் ஏற்படும்.
வழிபாடு
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். எல்லா விஷயங்களிலும் ஏற்றம் பெறும் காலகட்டம். தூக்கத்தை மட்டும் கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றை தினந்தோறும் செய்வது நன்மை பயக்கும். பழனி முருகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications