குருப்பெயர்ச்சி பலன் 2026: கன்னி ராசிக்கு கோடியில் புரளும் யோகம்.. குருப்பெயர்ச்சியில் கொட்டும் பணம்
Guru Peyarchi 2026: ஞானக்காரகன் என்று அழைக்கப்படும் குரு பகவானின் பெயர்ச்சியானது இந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஜூன் மாதம் 2 ஆம் தேதி இந்த வருடத்திற்கான குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனிப்பெயர்ச்சி இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறையும், ராகு கேது பெயர்ச்சி 18 மாதங்களுக்கு ஒருமுறையும், குருப்பெயர்ச்சி 12 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. வருடாந்திர கிரகங்களான சனி, ராகுகேது, குரு ஆகிய 3 கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஜூன் மாதம் 2 ஆம் தேதி கன்னி வீட்டில் உச்ச குருவாக அமரும் குரு பகவான் மூன்று மாதம் கழித்து கன்னி வீட்டிற்குச் செல்கிறார். அங்கு மூன்று மாதம் இருந்துவிட்டு மீண்டும் கன்னிக்கு வருகிறார். அதிசார குருப்பெயர்ச்சியாக இருந்தாலும் முதலில் உச்சம், பிறகு நட்பான நிலை என்கிற வகையில் இந்த குரு பகவான் பெரும்பாலும் நன்மைகளைத் தருவார்.
இந்த குருப்பெயர்ச்சியில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப்போகும் நன்மைகள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியினருக்கு இதுவரை 10 ஆம் இடத்தில் இருந்து வந்த குரு பகவான் இப்போது 11 ஆம் இடத்திற்கு லாபத்தில் வருகிறார். 12 ராசியில் கன்னி ராசியினருக்கு குரு பகவான் பலன்களை அள்ளித் தருவார். தனகாரகனாகிய குரு பகவான் லாப ஸ்தானத்தில் உச்சம் என்பது மிக நல்ல பலன்களை கொடுக்கும். டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து கேள யோகம் கிடைக்கும் பாக்கியம் ஏற்படும்.
கோடீஸ்வர யோகம்
பெரிய அளவில் நன்மைகள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். வருமானம் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். கோடீஸ்வரர்களாக மாறும் யோகம் உண்டு. உங்களுடைய அடுத்தகட்ட வளர்ச்சி அற்புதமாக இருக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். சம்பாதிப்பதில் சாதனை செய்யும் காலகட்டமாக இருக்கும்.
பணவரவு
குருப்பெயர்ச்சி நடக்கும் முதல் 6 மாதங்கள் கலவையான பலன்கள் இருந்தாலும், பிற்பகுதி 6 மாதங்கள் சுறுசுறுப்பாக வேலை செய்யக்கூடிய காலகட்டமாக இருக்கும். பண வரவு அற்புதமாக இருக்கும். 3, 5, 7 ஆம் இடம் வலுத்திருக்கிறது. 3 ஆம் இடம் முயற்சிகளையும், அறிமுகங்களையும் குறிக்கக்கூடியதாகும். காதலன், காதலி உறவுகள் சிறப்பாக இருக்கும். ஆணுக்கு பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் அறிமுகப்படுத்தக் கூடிய குருப்பெயர்ச்சியாக இருக்கும்.
முன்னேற்றம்
சிலருக்கு உங்களை விட உயர்ந்த அந்தஸ்தில் இருக்கக்கூடிய பணக்காரர்கள், அதிகாரிகளுடன் அறிமுகம், நட்பு உண்டாகும். அதன் மூலமாக நல்ல பலன்கள் கிடைக்கும் பாக்கியம் உண்டு. புதிய அறிமுகங்கள் மூலமாக அதிர்ஷ்டம் ஏற்படும். தம்பி, தங்கைகளைப் பற்றி இருந்த கவலைகள் நீங்கும். அவர்களுக்கு நல்ல மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்படும்.
திருமண யோகம்
இளைய பருவத்தினருக்கு திருமணமாகும் யோகம் உண்டு. ஏற்கனவே திருமணம் செய்து பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு அந்தப் பிரச்சனைகள் தீரக்கூடிய தன்மைகள் உண்டு. சேர்ந்து வாழக்கூடிய அமைப்பு உள்ளது. விவாகரத்து ஆனவர்களுக்கு மீண்டும் திருமணமாகும் அமைப்பு உள்ளது. குடும்பம் இணையக்கூடிய அமைப்பு, ஆண் பெண் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் அமைப்பு உண்டாகும்.
குழந்தை பாக்கியம்
நல்ல குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தை பிறந்து சில குறைகள் இருப்பவர்களுக்கு அந்தப் பிரச்சனைகள் தீரக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல அமைப்பு உள்ளது. பொருளாதார ஏற்றம், தொழிலில் முன்னேற்றம், புதிய அறிமுகங்களால் ஆதாயம் என உங்களுக்கு இந்த மே மாதம் அதிர்ஷ்டத்தை தரக்கூடியதாக இருக்கும்.
-
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications