கும்ப ராசிக்கு சொந்த வீடு, திருமண யோகம்.. குருப்பெயர்ச்சியில் அடிக்கும் லக்கி ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

Guru Peyarchi 2026: குருப்பெயர்ச்சி இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. குரு பகவானின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் நிலையில், கும்ப ராசியினருக்கு இது எந்த அளவில் அதிர்ஷ்டத்தையும், சவால்களையும் தரப் போகிறது என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றங்களானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி, குரு, ராகு கேது ஆகிய கிரகங்களே ஒருவரின் வாழ்க்கையில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு வருடத்திற்கு ஒருமுறை குருப்பெயர்ச்சியும், இரண்டரை வருடத்திற்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி, ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை ராகு கேது பெயர்ச்சியும் நடைபெறுகிறது.

guru-peyarchi-2026-what-kind-of-benefits-will-get-kumbam-rasi-during-this-guru-peyarchi

குரு பகவானுக்கு இயற்கை சுபர் என்று பெயர். ஒருவரின் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்க குரு பகவானே காரணமாக இருப்பார். குருப்பெயர்ச்சி என்பது ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றாகும். குரு (வியாழன்) ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்வதால், 12 ராசிகளுக்கும் பல்வேறு நல்ல மற்றும் சவாலான பலன்களை ஏற்படுத்தும். கல்வி, வேலை, திருமணம், பணவரவு போன்ற முக்கிய வாழ்க்கை அம்சங்களில் குருவின் இடமாற்றம் பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.

அந்த வகையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் குருப்பெயர்ச்சியானது கும்ப ராசியினருக்கு என்ன பலன்களை கொடுக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கும்பம் (Kumbam Rasi Palan)

கும்ப ராசியினருக்கு மிகச்சிறந்த யோக பலன்கள் காத்திருக்கின்றன. ஏழரை சனி நடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த குருப்பெயர்ச்சியில் அற்புதமான பலன்கள் கிடைக்கும். வாழ்க்கையில் உச்சத்திற்கு கொண்டு செல்லக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிதித் துறை, கணினி துறையில் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

பேச்சில் இனிமை

உங்களுக்கு 2 ஆம் இடத்தில் சனி இருப்பதால் எது பேசினாலும் தப்பாகப் போவது, குடும்பத்தில் நல்லதை செய்தாலும் கெட்ட பெயர் வாங்கக்கூடிய அமைப்பு இருந்திருக்கும். இனி அதுபோன்ற நிலைமைகள் மாறும். பேச்சினால் ஏற்பட்டு வந்த கெட்ட பெயர்கள் விலகி, நல்ல பெயர் கிடைக்கும். வாக்கு ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் வாக்கில் இனிமை ஏற்படும். பேச்சில் இனிமை ஏற்படும்.

வருமானம் பெருகும்

குடும்பத்தில் நிம்மதி பெருகும். வருமானம் பெருகக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். நல்ல வருமானம் வரும். தன ஸ்தானாதிபதி தன ஸ்தானத்தைப் பார்ப்பதால் அபரிமிதமான பண வரவு உண்டாகும். கடந்த பல ஆண்டுகளாக வருமானத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். பண வரவு நன்றாக இருக்கும்.

பொறுப்புகள் தேடி வரும்

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள், பாதிப்புகள் எல்லாமே பரிபூரணமாக நீங்கும். குடும்பத்தில் சந்தோஷமான காலகட்டமாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்த கடன்கள் தீரும். கடனை அடைப்பதற்கான முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். வேலை சார்ந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். பெரிய பொறுப்புகள் வந்து சேரும். அதில் நல்ல பெயர் கிடைக்கும். உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும்.

திருமண யோகம்

திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். நல்ல வரன்கள் அமையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலே வேண்டாம் என்று நினைத்திருந்த தொழிலில் கூட லாபம் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். புதிதாக தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். புதிதாக தொழில் தொடங்கும் யோகம் உண்டு. வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு ஏற்படும். வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வது, ஏற்றுமதி இறக்குமதியில் ஈடுபடும் யோகம் உண்டாகும்.

சொந்த வீடு

நல்ல தூக்கத்தைப் பெறுவீர்கள். முதலீடுகள் தொடர்பான விஷயத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். முதலீடுகளில் ஆதாயம் ஏற்படும். ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை செலுத்துவது ஏற்றத்தை ஏற்படுத்தும். கொழுப்புகளால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டாகும். மனதிற்குப் பிடித்த கார் வாங்குவீர்கள்.

வழிபாடு

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். குடும்பத்தில் நல்ல செய்திகள் தேடி வரும். அதிர்ஷ்டத்தை அளளிக் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும். நல்ல செய்திகள் குடும்பத்தில் வந்து சேரும். நாமக்கல் ஆஞ்சநேயர் வழிபாடு உங்களுக்கு அற்புதமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+