குருப்பெயர்ச்சி: மீன ராசிக்கு அதிர்ஷ்டம் ஏற்படுமா?.. குருப்பெயர்ச்சியில் வரும் மாற்றங்கள் இதுதான்!

Subscribe to Oneindia Tamil

Guru Peyarchi 2026: குருப்பெயர்ச்சி இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. குரு பகவானின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் நிலையில், மீன ராசியினருக்கு இது எந்த அளவில் அதிர்ஷ்டத்தையும், சவால்களையும் தரப் போகிறது என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றங்களானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி, குரு, ராகு கேது ஆகிய கிரகங்களே ஒருவரின் வாழ்க்கையில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு வருடத்திற்கு ஒருமுறை குருப்பெயர்ச்சியும், இரண்டரை வருடத்திற்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி, ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை ராகு கேது பெயர்ச்சியும் நடைபெறுகிறது.

Tamil Nadu Elections 2026

குரு பகவானுக்கு இயற்கை சுபர் என்று பெயர். ஒருவரின் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்க குரு பகவானே காரணமாக இருப்பார். குருப்பெயர்ச்சி என்பது ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றாகும். குரு (வியாழன்) ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்வதால், 12 ராசிகளுக்கும் பல்வேறு நல்ல மற்றும் சவாலான பலன்களை ஏற்படுத்தும். கல்வி, வேலை, திருமணம், பணவரவு போன்ற முக்கிய வாழ்க்கை அம்சங்களில் குருவின் இடமாற்றம் பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.

அந்த வகையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் குருப்பெயர்ச்சியானது மீன ராசியினருக்கு என்ன பலன்களை கொடுக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மீனம் (Meenam Rasi Palan)

மீன ராசியினருக்கு இந்த குருப்பெயர்ச்சியில் குரு பகவான் அள்ளிக் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும். வாழ்க்கையில் உச்சத்திற்கு செல்லக்கூடிய அமைப்பு உள்ளது. ஜென்ம சனி உங்களுக்கு நடந்து கொண்டிருந்தாலும், இந்த குருப்பெயர்ச்சியில் நல்ல பலன்கள் கிடைக்கும். ராசிநாதன் குரு பகவான் 4 ஆம் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்துக்குப் பெயர்ச்சியாகிறார்.

புண்ணியம்

கடந்த 2 நாட்களாக நிலைமை சரியில்லாமல் இருந்த உங்களுக்கு நல்ல காலம் பிறக்கும். குரு பகவான் உங்கள் பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்குச் செல்வதால் நீங்கள் பூர்வஜென்மத்தில் செய்த எல்லா புண்ணியங்களுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை இல்லாமல் தவிக்கக் கூடியவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

வீடு கட்டும் யோகம்

வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வீடு கட்டும் யோகம் உண்டாகும். பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட வீடு முழுமையடையும். நீண்ட நாட்களாக அப்பார்ட்மெண்டில் குடியிருப்பவர்களுக்கு பெரிய அப்பார்ட்மெண்டுகள் கட்டும் யோகம் உண்டாகும். வெளிநாட்டு வாய்ப்புகள் கைகூடி வரும்.

வேலைவாய்ப்பு

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். குரு பலம் இருப்பதால் உயர்கல்வி படிப்பதற்கான யோகம் உண்டாகும். அலுவலகத்தில் முக்கியப் பதவிகள் தேடி வரும். பதவியால் நன்மை அடையும் யோகம் உண்டாகும். நல்ல பணப் புழக்கம் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

திருமண யோகம்

திருமண யோகம் கைகூடி வரும். தரமான, நல்ல வரன் அமையும். புத்திர பாக்கியம் கிடைக்கும். அப்பாவின் உடல்நிலையில் இருந்து வநத பிரச்சனைகள் நிவர்த்தியாகும். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகக் கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். நிறைய நல்ல விஷயங்கள் கைகூடி வரும். கல்வி, குடும்பம், வெளிநாடு யோகம், வேலைவாய்ப்பு, குடும்பத்தில் நிம்மதி என ஏற்றம் மிகுந்த காலகட்டமாக இருக்கும். மதுரை மீனாட்சி அம்மன், ராகவேந்திரரை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+