குருப்பெயர்ச்சி பலன் 2026: மேஷ ராசிக்கு அற்புதங்களை கொடுக்கும் மே மாதம்.. முழு பலன்கள் விவரம்

Subscribe to Oneindia Tamil

Guru Peyarchi 2026: ஞானக்காரகன் என்று அழைக்கப்படும் குரு பகவானின் பெயர்ச்சியானது இந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2026 ஜூன் மாதம் 2 ஆம் தேதி இந்த வருடத்திற்கான குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனிப்பெயர்ச்சி இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறையும், ராகு கேது பெயர்ச்சி 18 மாதங்களுக்கு ஒருமுறையும், குருப்பெயர்ச்சி 12 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. வருடாந்திர கிரகங்களான சனி, ராகுகேது, குரு ஆகிய 3 கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

Guru Peyarchi 2026

ஜூன் மாதம் 2 ஆம் தேதி கடக வீட்டில் உச்ச குருவாக அமரும் குரு பகவான் மூன்று மாதம் கழித்து சிம்ம வீட்டிற்குச் செல்கிறார். அங்கு மூன்று மாதம் இருந்துவிட்டு மீண்டும் கடகத்துக்கு வருகிறார். அதிசார குருப்பெயர்ச்சியாக இருந்தாலும் முதலில் உச்சம், பிறகு நட்பான நிலை என்கிற வகையில் இந்த குரு பகவான் பெரும்பாலும் நன்மைகளைத் தருவார்.

இந்த குருப்பெயர்ச்சியில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப்போகும் நன்மைகள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மேஷ ராசி பலன்

மேஷ ராசியினருக்கு இந்த ஆண்டில் நடைபெறும் குருப்பெயர்ச்சி பெரிய நன்மைகளைத் தரப் போகிறது. வெளிநாடு, வெளிமாநிலம், அலைந்து திரிந்து செய்யக்கூடிய வேலை அமைப்புகள், ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான தொழில்களில் கடுமையான வருமானங்கள் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். ஏழரை சனி ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. விரயச் செலவுகளைத் தரக்கூடிய விரய சனி உங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது.

தொழில்

செலவுகள், வருமானத்தில் சுருக்கங்கள், கடன் வாங்கக்கூடிய சூழல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. 4 ஆம் இடத்திற்கு மாறக்கூடிய குரு பகவான் 10, 12 ஆம் இடத்தைப் பார்ப்பதால் அற்புதமான நல்ல பலன்கள் கிடைக்கும். நல்ல தொழில்கள் கிடைக்கும். வேலை, வியாபாரம்,விவசாயத்தில் சாதிக்க முடியவில்லை, கடன் வாங்கி சமாளிக்கிறேன் என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த நிலைமைகள் மாறும்.

வருமானம் பெருகும்

ஓரளவுக்கு செலவுகள் இருந்தாலும் அதற்கேற்ற வருமானங்கள் வந்து சேரக்கூடிய அமைப்பு ஏற்படும். வேலை, தொழில், வியாபாரம் அற்புதமாக இருக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். சிரமங்களை குறைக்கும் வகையில் இந்த குருப்பெயர்ச்சி அமையும். சிலருக்கு வேலையை விட்டுவிட்டு தொழில் ஆரம்பிக்கக்கூடிய யோகம் உண்டு. ஏற்கனவே ஆரம்பித்த தொழில் சிறப்பாக இருக்கும் அமைப்பு உள்ளது.

வெளிநாடு யோகம்

கூட்டுத்தொழில் அமைவதற்கான வாய்ப்புள்ளது. எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உண்டாகும் அமைப்பு உள்ளது. 8, 12 ஆம் இடங்களில் ஜூன் மாதம் 2 ஆம் தேதிக்குப் பிறகு குரு பகவான் பார்க்கவுள்ளதால் வெளிநாடு வெளிமாநிலம் சென்று கல்வி படிக்க வேண்டும், வேலை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு மிகப்பெரிய ஏற்றம் உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான அனுமதி, பாஸ்போர்ட் போன்றவை கிடைக்கும்.

படிப்பு

இளைய பருவத்தினருக்கு நல்ல பலன்கள் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். நீட் எழுதும் மாணவர்களுக்கு நீங்கள் நினைத்தது நடக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். உங்களுக்கு விருப்பமான கல்லூரி, பல்கலைக்கழகம், விரும்பிய துறைக்குச் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். வேலையில் இருப்பவர்களுக்கு இந்த ஒரு வருடத்திற்குள் பட்டம், பதவிகள் கிடைக்கும் அமைப்பு உண்டு.

சொந்த வீடு

மேற்படிப்பு படிப்பதில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். பெரிய மாறுதல்களை கொடுக்கக்கூடிய நல்ல குருப்பெயர்ச்சியாக இருக்கும். மற்ற கிரகங்களும் சாதகமாக உள்ளது. வீடு சொந்தமாக வாங்கும் அமைப்பு உண்டாகும். வீடு கட்டும் அமைப்பு உள்ளது. குழந்தை பாக்கியம் உண்டாகும். ஜூன் 2 ஆம் தேதிக்குப் பிறகு பெரிய மாறுதல்களைக் கொடுக்கக்கூடிய காலமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+