குருப்பெயர்ச்சி பலன் 2026: சிகரம் தொடும் சிம்ம ராசி.. குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் பலன்கள்
Guru Peyarchi 2026: ஞானக்காரகன் என்று அழைக்கப்படும் குரு பகவானின் பெயர்ச்சியானது இந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஜூன் மாதம் 2 ஆம் தேதி இந்த வருடத்திற்கான குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனிப்பெயர்ச்சி இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறையும், ராகு கேது பெயர்ச்சி 18 மாதங்களுக்கு ஒருமுறையும், குருப்பெயர்ச்சி 12 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. வருடாந்திர கிரகங்களான சனி, ராகுகேது, குரு ஆகிய 3 கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஜூன் மாதம் 2 ஆம் தேதி சிம்ம வீட்டில் உச்ச குருவாக அமரும் குரு பகவான் மூன்று மாதம் கழித்து சிம்ம வீட்டிற்குச் செல்கிறார். அங்கு மூன்று மாதம் இருந்துவிட்டு மீண்டும் சிம்மத்துக்கு வருகிறார். அதிசார குருப்பெயர்ச்சியாக இருந்தாலும் முதலில் உச்சம், பிறகு நட்பான நிலை என்கிற வகையில் இந்த குரு பகவான் பெரும்பாலும் நன்மைகளைத் தருவார்.
இந்த குருப்பெயர்ச்சியில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப்போகும் நன்மைகள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன்
சிம்மம் ராசியினருக்கு இதுவரை 11 ஆம் இடத்தில் இருந்து வந்த குரு பகவான் இப்போது 12 ஆம் இடத்துக்குப் போகிறார். 6, 8 அமைப்புகளை குரு பகவான் பார்க்கப் போகிறார். குரு 12 ஆம் இடத்தில் உச்சம் எனும் நல்ல நிலையில் இருக்கிறார். எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். எதிரியை நீங்கள் ஜெயிக்கக்கூடிய அமைப்பு உண்டாகும்.
குரு அருள்
ஜூன் 2 ஆம் தேதி நடக்கும் குருப்பெயர்ச்சியின் மூலமாக மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும். 8 ஆம் இடத்தை குரு பகவான் பார்க்கிறார். ஏற்றுமதி, இறக்குமதி தொழில், வெளிமாநிலம், வெளிநாட்டில் சாதிக்கக்கூடிய அமைப்பு உள்ளது. 4, 6 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் வீடு கட்டும் யோகம் உண்டாகும். இதுவரை வீடு கட்டுவதற்கு பணமில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல கடன் கிடைக்கும்.
கடன் தீரும்
கடன் வாங்கினாலும் கடனை திருப்பிச்செலுத்தக்கூடிய யோகம் உண்டாகும். இளைஞர்களுக்கு வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் கார் வாங்குவதற்கான அமைப்பு உள்ளது. வண்டி வாகனம் வாங்குவதற்கு பெற்றோரின் அனுமதி கிடைக்கும். வெளிநாடு, வெளிமாநிலம் செல்லும் யோகம் உண்டாகும்.
வெளிநாடு யோகம்
கிழக்கு தேசங்களான சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா செல்லும் யோகம், விசா கிடைப்பது, வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல வேலை, தொழில் அமையும் யோகம் உண்டாகும். நிம்மதியான குருப்பெயர்ச்சியாக இருக்கும். 6 ஆம் இடமும், 8 ஆம் இடமும் எதிர்பாராத அதிர்ஷ்டத்தைக் குறிக்கும். நீண்ட நாட்களாக முயற்சி செய்து கொண்டிருக்கும் விஷயத்தில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
பண வரவு
புதிய பொறுப்புகள், பதவி உயர்வு வாய்ப்புகள் ஏற்படும். வேலை மாற்றம் யோசித்தால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணம், வருமானம் மெதுவாக அதிகரிக்கும். செலவுகள் கூடும். சேமிப்பு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பங்குச் சந்தையில் பணத்தை இழந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இழந்த பணம் மீண்டும் வரக்கூடிய யோகமான காலகட்டமாக இருக்கும்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications