குருப்பெயர்ச்சி: ஆட்டத்தை ஆரம்பிக்கும் விருச்சிகம்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு
Guru Peyarchi 2026: குருப்பெயர்ச்சி இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. குரு பகவானின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் நிலையில், விருச்சிக ராசியினருக்கு இது எந்த அளவில் அதிர்ஷ்டத்தையும், சவால்களையும் தரப் போகிறது என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றங்களானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி, குரு, ராகு கேது ஆகிய கிரகங்களே ஒருவரின் வாழ்க்கையில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு வருடத்திற்கு ஒருமுறை குருப்பெயர்ச்சியும், இரண்டரை வருடத்திற்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி, ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை ராகு கேது பெயர்ச்சியும் நடைபெறுகிறது.

குரு பகவானுக்கு இயற்கை சுபர் என்று பெயர். ஒருவரின் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்க குரு பகவானே காரணமாக இருப்பார். குருப்பெயர்ச்சி என்பது ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றாகும். குரு (வியாழன்) ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்வதால், 12 ராசிகளுக்கும் பல்வேறு நல்ல மற்றும் சவாலான பலன்களை ஏற்படுத்தும். கல்வி, வேலை, திருமணம், பணவரவு போன்ற முக்கிய வாழ்க்கை அம்சங்களில் குருவின் இடமாற்றம் பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.
அந்த வகையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் குருப்பெயர்ச்சியானது விருச்சிக ராசியினருக்கு என்ன பலன்களை கொடுக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம் (Viruchigam Rasi Palan)
விருச்சிக ராசியினருக்கு அற்புதமான குருப்பெயர்ச்சியாக இருக்கும். எதிர்பார்த்த நல்ல காலகட்டமாக இருக்கும். கடந்த சில வருடங்களாக நீங்கள் பட்ட கஷ்டங்கள் நிவர்த்தியாகும். அர்த்தாஷ்டம சனி, அஷ்டம குரு என கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். இனி எல்லா பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை பெறும் காலகட்டமாக இருக்கும்.
பாக்கியத்தில் குரு
குரு பாக்கிய ஸ்தானத்திற்கு வருவது உங்களுக்கு அற்புதமான ஏற்றத்தைத் தரும். ஜூன் மாதம் 2 ஆம் தேதி அஷ்டமத்தில் இருக்கும் குரு பகவான் 9 ஆம் இடத்துக்குச் செல்கிறார். சந்தோஷமே இல்லை என்று கூறிக் கொண்டிருந்த விருச்சிக ராசியினருக்கு இனி மகிழ்ச்சியுடன் இருக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். தேக ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.
முக வசீகரமாகும்
முக அழகில்லாமல் போய்விட்டது என நிறைய பேர் சொல்லியிருப்பார்கள். இனி அந்த நிலைமை மாறி வசீகரம் பெறுவீர்கள். உங்களை மற்றவர்கள் மதிக்கும் காலகட்டமாக இருக்கும். எல்லோரும் உங்களை விரும்புவார்கள், பாராட்டுவார்கள். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். வெளிநாட்டில் வாழக்கூடிய யோகம் உண்டாகும்.
வெளிநாட்டு யோகம்
வெளிநாட்டு வாய்ப்புகள் கூடி வரும். வெளிநாட்டுக்குச் சென்று உயர்கல்வி படிக்கும் யோகம் ஏற்படும். வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் யோகம் உண்டாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுவீர்கள். தேங்கிக் கிடந்த பொருள்கள் வேகமாக விற்பனையாகும். உங்களுளை எதிர்த்தவர்கள் தொழில் கூட்டாளிகளாக மாறுவார்கள். இதுவரை உங்களுக்கு எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாகும் வாய்ப்பு உண்டு.
திருமண யோகம்
திருமணத்துக்காக காத்திருந்தவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் பெறும் யோகம் உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் சரியாகும். உங்கள் துணை சொல் பேச்சு கேட்கும் நிலை ஏற்படும். கம்யூனிகேஷன் அற்புதமாக இருக்கும். ஆர்டீபிசியல் இன்டெலிஜன்ஸ் தொடர்பான படிப்புகளை படிக்கும் யோகம் உண்டாகும்.
யோகமான காலகட்டம்
நீங்கள் செய்த புண்ணியங்களுக்கான பலன்களைப் பெறுவீர்கள். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். நிரந்தரமான வேலைவாய்ப்பு உண்டாகும். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு யோகம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். தொழிலில் லாபங்கள் கூடி வரும். எல்லா விஷயங்களிலும் இருந்து வந்த தடைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் மேல் சொந்தங்கள் இனி அன்பாக இருப்பார்கள். கோயில் திருப்பணிகளில் ஈடுபடும் யோகம் உண்டு. குருவித்துறை குரு பகவான் வழிபாடு மேன்மையைத் தரும்.












Click it and Unblock the Notifications