Guru Peyarchi: குருப்பெயர்ச்சியில் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசியினர்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
Guru Peyarchi 2026: குருப்பெயர்ச்சி இந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. குரு பகவானின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் நிலையில், பண வரவை அள்ளும் 3 ராசியினர் யார், என்ன அதிர்ஷ்டம் எல்லாம் கிடைக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றங்களானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி, குரு, ராகு கேது ஆகிய கிரகங்களே ஒருவரின் வாழ்க்கையில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு வருடத்திற்கு ஒருமுறை குருப்பெயர்ச்சியும், இரண்டரை வருடத்திற்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி, ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை ராகு கேது பெயர்ச்சியும் நடைபெறுகிறது.

குரு பகவானுக்கு இயற்கை சுபர் என்று பெயர். ஒருவரின் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்க குரு பகவானே காரணமாக இருப்பார். குருப்பெயர்ச்சி என்பது ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றாகும். ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. குரு (வியாழன்) ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்வதால், 12 ராசிகளுக்கும் பல்வேறு நல்ல மற்றும் சவாலான பலன்களை ஏற்படுத்தும். கல்வி, வேலை, திருமணம், பணவரவு போன்ற முக்கிய வாழ்க்கை அம்சங்களில் குருவின் இடமாற்றம் பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.
அந்த வகையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் குருப்பெயர்ச்சியானது பண வரவை எந்த 3 ராசியினருக்கு அள்ளிக் கொடுக்கப் போகிறது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி பலன்
மேஷ ராசியினருக்கு இந்த ஆண்டில் நடைபெறும் குருப்பெயர்ச்சி பெரிய நன்மைகளைத் தரப் போகிறது. வெளிநாடு, வெளிமாநிலம், அலைந்து திரிந்து செய்யக்கூடிய வேலை அமைப்புகள், ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான தொழில்களில் கடுமையான வருமானங்கள் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். ஏழரை சனி ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. விரயச் செலவுகளைத் தரக்கூடிய விரய சனி உங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது.
ஓரளவுக்கு செலவுகள் இருந்தாலும் அதற்கேற்ற வருமானங்கள் வந்து சேரக்கூடிய அமைப்பு ஏற்படும். வேலை, தொழில், வியாபாரம் அற்புதமாக இருக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். சிரமங்களை குறைக்கும் வகையில் இந்த குருப்பெயர்ச்சி அமையும். சிலருக்கு வேலையை விட்டுவிட்டு தொழில் ஆரம்பிக்கக்கூடிய யோகம் உண்டு. ஏற்கனவே ஆரம்பித்த தொழில் சிறப்பாக இருக்கும் அமைப்பு உள்ளது.
கூட்டுத்தொழில் அமைவதற்கான வாய்ப்புள்ளது. எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உண்டாகும் அமைப்பு உள்ளது. 8, 12 ஆம் இடங்களில் ஜூன் மாதம் 2 ஆம் தேதிக்குப் பிறகு குரு பகவான் பார்க்கவுள்ளதால் வெளிநாடு வெளிமாநிலம் சென்று கல்வி படிக்க வேண்டும், வேலை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு மிகப்பெரிய ஏற்றம் உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான அனுமதி, பாஸ்போர்ட் போன்றவை கிடைக்கும்.
கடகம் (Kadagam Rasi Palan)
கடகம் ராசியினருக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு அற்புதமான காலகட்டமாக இருக்கும். குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெறுவதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். இதுநாள் வரை இருந்து வந்த கஷ்டங்கள், பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பணம் சார்ந்த பிரச்சனைகள் சரியாகும்.
பிள்ளைகள் சொல்படி கேட்கும் நிலை ஏற்படும். வேலைவாய்ப்பு நன்றாக இருக்கும். தொழிலில் ஏற்றம் ஏற்படும். நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். இதுநாள் இருந்து வந்த பணத் தட்டுப்பாடு நீங்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். உங்களை அவமானப்படுத்தியவர்கள் இனி உயர்த்திப் பேசுவார்கள். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். திருமண யோகம் ஏற்படும். திருமணத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். மனதிற்குப் பிடித்த மாதிரி இரண்டாம் கல்யாணம் கூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். மனதிற்குப் பிடித்த மாதிரி குழந்தை பிறக்கக்கூடிய யோகம் உண்டாகும்.
சொந்த தொழில் செய்பவர்கள் பிரகாசிக்கும் காலகட்டமாக இருக்கும். வேலையில் நல்ல பதவி உயர்வு கிடைக்கும். உயர்கல்வி யோகம் உண்டு. வெளிநாட்டு வாய்ப்புகள், வெளிநாட்டில் கல்வி பயிலும் தன்மை உண்டாகும். பிரிந்த நண்பர்கள் மீண்டும் வந்து சேரும் யோகம் உண்டாகும். தொழில் செய்யும் இடத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். எதிர்பார்த்த அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். திருச்செந்தூர் முருகனை வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியினருக்கு 7 ஆம் இடத்தில் இருந்து வந்த குரு பகவான் இப்போது 8 ஆம் இடத்திற்கு மாறுகிறார். உங்கள் ராசிநாதன் குரு 8 ஆம் இடத்தில் உச்சத்தை அடைவது மிகப்பெரிய மேன்மைகளைக் கொடுக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள், நல்ல சம்பவங்கள் நடக்கும். எந்த விஷயத்தையோ செய்யப்போய் நல்ல பலன்களை அனுபவிக்கும் யோகம் உண்டு.
8, 10 இடங்கள் சுபத்துவமாக இருப்பதால் வெளிநாடு, வெளிமாநிலம் செல்லக்கூடிய யோகம் உண்டாகும். பாஸ்போர்ட், விசா, சிட்டிசன்ஷிப் கிடைக்கும் யோகம் உண்டு. வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருப்பவர்களுக்கு நல்ல வேலை, இருக்கும் இடத்திலேயே வீடு, தொழில் அமையும் யோகமான அமைப்பு உள்ளது. நிம்மதியான சூழல்கள் ஏற்படும். வாகன மாற்றங்கள் ஏற்படக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
தன லாபங்கள் அபரிமிதமானதாக கிடைக்கும் யோகம் உண்டு. குரு 2, 4, 12 ஆம் இடத்தைப் பாரக்கிறார். கொஞ்சம் அலைச்சலான சூழல்கள் இருக்கும். இருப்பினும் நல்ல காசு பணங்கள் வந்து சேரும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. இழந்த இடத்திலேயே பணம் பெறும் யோகம் உண்டாகும். பங்குச் சந்தை, யூக வணிகம் போன்ற இடத்தில் அபரிமிதமான பணங்களை சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.












Click it and Unblock the Notifications