தனுசு ராசிக்கு தொட்டதெல்லாம் தங்கமாகும் காலம்.. குருவின் அருளால் அதிர்ஷ்டம், கோடீஸ்வர யோகம்

Subscribe to Oneindia Tamil

குருப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் தனுசு ராசிக்காரர்களுக்கான பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

குரு சுபத்துவம் முழுமையான பொருந்திய கிரகம். 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்பம் ராசியின் மேல் விழுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள். அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் தனுசு ராசிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

Guru peyarchi Dhanusu

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு வரும் ஓராண்டில் ஐந்து விஷயங்கள் கட்டாயமாக நடக்கும். திருமணம், குழந்தை, இரண்டாவது குழந்தை, சுயதொழில், கூட்டாளியுடன் சேர்ந்து தொழில் செய்யும் யோகம் உண்டு. குடும்பத்தில் பெரிய புரிதல், நம்பிக்கை இல்லாதவர்கள் இனி முழுமையான நம்பிக்கையுடன் செயல்படும் காலமாக இருக்கும். 7 ஆம் இடத்துக்கு குரு வருவதால் மற்றவர்களின் உதவி தேவைப்படும் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

உதவிகள் கிடைக்கும்

மற்றவர்கள் மூலம் உதவிகள் வந்து சேரும். இளைய சகோதரன், சகோதரிகள் மூலம் சந்தோஷம் ஏற்படும். பார்னர்ஷிப் போட்டு தொழில் ஆரம்பிக்கும் யோகம் உண்டாகும். பண உதவிகள் கேட்டால் உடனடியாக கிடைக்கும். லக்னம் அல்லது ராசி மீது குரு பார்வை உள்ளதால் ஆரோக்கியத்தோடு, ஐஸ்வர்யத்தோடு இருக்கப் போகிறீர்கள்.

ஆதாயம், லாபம்

குருவின் பார்வை பலம் உங்களுக்கு கட்டாயமாக முன்னேற்றத்தைக் கொடுக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகள் அனைத்தும் நீங்கும். உடல் கட்டுக்கோப்பாக மாறி மனதில் இருந்த கஷ்டங்கள், பாரங்கள் அனைத்தும் தீரும். லாப ஸ்தானத்தில் குரு பார்வை விழுவதால் நண்பர்களால் முழும் ஆதாயம் உண்டாகும். பெரியவர்கள் மூலமாக லாபம் உண்டாகும்.

தொழில் ஆரம்பிக்கும் யோகம்

புதிய தொழில் ஆரம்பித்தால் அதில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எல்லா விஷயத்திலும் மேன்மை அடைவீர்கள். 3 ஆம் இடத்தில் ராகு அமர்வதால் அதில் குரு பார்வை வருவதால் கம்யூனிகேஷனில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தில் பெரிய வெற்றியைக் காணும் நேரம் இது. எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் நேரம் இது.

திருமண யோகம்

அனைத்து விஷயங்களையும் சரியாகத் திட்டமிடுவீர்கள். அதை செயல்படுத்துவதற்கான உதவிகள் மற்றவர்களிடம் இருந்து கிடைக்கும். குடும்பத்தின் மூலமாக உதவிகள் கட்டாயம் கிடைக்கும். குடும்பத்தின் ஒற்றுமை உங்களுக்கு மிகப்பெரிய ஏற்றத்தை தரும். தனுசு ராசியைப் பொருத்தவரை ஸ்தான பிராப்தம் குரு என்பதால் அதில் பார்வை படுவதால் வீட்டில் நின்று போன திருமணங்கள் நடக்கும். காதல் திருமணம் கைகூடும்.

ஆரோக்கியம்

இந்த நேரத்தை விட்டுவிடாமல் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. குழந்தைகள், மாணவ, மாணவிகள், வியாபாரத்தில் இருப்பவர்கள், பெண்களுக்கு ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். தேவையான பணம், தேவையான விஷயங்கள் கிடைக்கும். லாபத்தின் மேல் குரு பார்வை விழுவதால் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

கவனம்

வயிறு, மலக்குடல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றபடி எந்தவிதமான பாதிப்பு உண்டாகும்.

மாணவர்கள்

மாணவர்கள் சட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் படிப்பது நல்லது. ஏர்பிட்ரேஷன் துறையும் நல்ல பலன்களைத் தரும். தனிப்பட்ட ஜாதகத்தைப் பார்க்கும்போது தான் குறிப்பிட்ட துறை குறித்து சொல்ல முடியும். குரு நல்ல நிலையில் இருப்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.

பெண்கள்

பெண்களுக்கு குருப்பெயர்ச்சியில் அருமையான காலகட்டமாக இருக்கும். தொந்தரவு தரும் கணவர்கள் கூட அப்படியே மாறுவார்கள். கோயிலுக்குப் போகாதவர்கள் கூட கோயிலுக்குச் செல்லும் யோகம் உண்டாகும். நல்ல குருமார்களின் உபதேசம் கிடைக்கும், குருமார்கள் அமைவார்கள். மனது சந்தோஷமாக இருப்பதால் நிறைய செலவுகளைச் செய்வீர்கள்.

வழிபாடு

கணவன், மனைவி வீட்டின் குலதெய்வ கோயிலுக்குச் சென்று தேன் அபிஷேகத்துக்கு கொடுத்து வருவது நல்லது.

மதிப்பெண்கள்

இந்த குருப்பெயர்ச்சியில் 100 சதவீத நன்மைகள் கிடைக்கும். பொருளாதாரத்தைப் பொருத்தவரை 75 சதவீதம் முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+