குருப்பெயர்ச்சி: மீனத்துக்கு சொந்த வீடு கட்டும் யோகம்.. ராகவேந்திரரின் அருளால் அதிர்ஷ்டம் கொட்டும்
குருப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் மீன ராசிக்காரர்களுக்கான பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி ஆரம்பமாகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்ப ராசியின் மேல் விழுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள். அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் மீன ராசிக்காரர்கள் என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பித்து இரண்டரை வருடம் ஆகிவிட்டது. நிறைய பேருக்கு அதிக அளவிலான பணம் செலவாகியிருக்கும். நண்பர்களுக்குப் பணம் கொடுத்து ஏமாந்திருப்பார்கள். கூட இருந்தவர்களே உங்களுக்கு குழி பறித்திருப்பர்கள். இதுபோன்ற நிறைய பிரச்சனைகளை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். தற்போது ஜென்மத்துக்கு சனி வருவது மட்டுமல்லாமல் குரு மூன்றாம் இடத்துக்கு வந்து அமர்ந்து நல்ல எண்ணங்களை கொடுப்பார். ஆனால், மனதை தொந்தரவு செய்து கொண்டே இருந்திருப்பார்.
தற்போது குரு பகவான் 4 ஆம் இடத்துக்கு செல்வதால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகிறார். புதன் வீட்டில் குரு என்பது வீடு வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். டியூப்ளெக்ஸ் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். உற்பத்தியை தொடங்குவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். விரைய ஸ்தானத்தில் குரு பார்வை இருப்பதால் நோய்களால் வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
மார்ச் முதல் மே வரைக்கும் பயங்கரமாக நோய் தொடர்பான பயமுறுத்தலை ஏற்படுத்தும். 5 கிரக சேர்க்கை மீனத்தில் நடைபெறுவதால் சில வெரிய நோய்களுக்கான பிரச்சனைகள், அறுவை சிகிச்சைக்கான பிரச்சனைகள் இருப்பது தெரியவரும். திடீரென அவை அனைத்தும் மாத்திரை போட்டாலே உங்களுடைய பிரச்சனை சரியாகிவிடும் என்று சொல்லக்கூடிய சூழல் ஏற்படும். மெடிக்கல் மிராக்கிள் நடக்கும் யோகம் உண்டாகும்.
குரு ராகவேந்திரர் சுவாமியின் அருளால் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆச்சரியம் நடக்கும். தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். குரு பார்வையால் கடன், நோய்கள் அனைத்தும் நீங்கும். அஷ்டம ஸ்தானத்துக்கு குரு பார்வை இருப்பதால் நூலிழையில் தப்பித்தது போன்ற நிலைமை ஏற்படும். 10 ஆம் இடத்திலும் குரு பார்வை இருப்பதால் தொழில் நன்றாக அபிவிருத்தி அடையும்.
மீனத்திற்கு யோகம் கொட்டும்:
ஜென்மத்தில் சனி வருவதால் திருமண யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு கட்டும் யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பண வரவு படிப்படியாக உயரும். அமோகமான காலகட்டமாக இருக்கும்.
இந்த விஷயத்தில் கவனம் தேவை:
மார்பு, நெஞ்சு தொடர்பான பிரச்சனைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மீன ராசிக்காரர்களுக்கான மதிப்பெண்கள்:
சந்தோஷத்தின் அடிப்படையில் 85 சதவீதம் நன்றாக இருக்கிறது. பொருளாதாரத்தின் அடிப்படையில் 90 சதவீதம் நன்றாக இருக்கிறது. மீன ராசிக்காரர்கள் திருப்தியாக வாழக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன? :
ராகவேந்திரர் மடத்துக்குச் சென்று அவரை மனதார வழிபடுவது, உங்களை அவரிடம் ஒப்புக் கொடுப்பது அருமையான பலன்களைக் கொடுக்கும்












Click it and Unblock the Notifications