குருப்பெயர்ச்சி: மகரம், கும்பம், மீனம் ராசிக்கு அடிக்குமா ஜாக்பாட்?.. குருவின் அருள் கிடைக்குமா?
Guru Peyarchi: ஆண்டுக்கு ஒருமுறை ராசி மாற்றம் செய்யும் குரு பகவான், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது உச்ச ராசியான கடகத்தில் பிரவேசிப்பது மிகவும் முக்கியமான ஜோதிட நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் பெரும்பாலான ராசிக்காரர்களுக்கும் நன்மைகள் அதிகரிக்கும். அதே நேரத்தில், பிற கிரகங்களின் அமைப்பு மற்றும் குருவின் விசேஷ பார்வைகள் காரணமாக பலன்களின் அளவு ராசிக்கு ராசி மாறுபடும்.
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 2026 ஜூன் 2 ஆம் தேதி குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சி அடைந்துள்ளார். குருவின் 5, 7, 9 ஆம் பார்வைகள் முறையே விருச்சிகம், மகரம் மற்றும் மீன ராசிகளில் பதிவதால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு யோகங்கள் உருவாகின்றன. அந்த வகையில், மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மகரம்
இந்த குருப்பெயர்ச்சி மகர ராசியினருக்கு முன்னேற்றம் மற்றும் மதிப்பு அதிகரிக்கும் காலமாக அமைகிறது. பணியிடத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் நல்ல மாற்றங்கள் கிடைக்கலாம். அனுபவம் மிக்கவர்களின் ஆதரவு உங்களை மேலும் உயர்த்தும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுப்பெறும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் சிலருக்கு கைகூடும். இருப்பினும் வாகனப் பயணங்களில் கவனம் அவசியம். உடல்நலத்தில் முதுகு மற்றும் வயிற்றுப் பகுதிகளை கவனித்துக் கொள்ளுங்கள்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு பொறுப்புடன் செயல்பட்டால் வெற்றியும் கௌரவமும் கிடைக்கும் காலம் இது. தொழில் மற்றும் பணியிடத்தில் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். பதவி அல்லது இடமாற்ற விஷயங்களில் பொறுமை தேவை. குடும்பத்தில் விட்டுக்கொடுத்து நடப்பது நல்ல பலனைத் தரும். சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. ஆடை, ஆபரண சேர்க்கையும் உண்டாகும். பூர்வீக சொத்து விவகாரங்களில் பிடிவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் கழுத்து, முதுகு மற்றும் தோல் தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள்.
மீனம்
மீன ராசியினருக்கு முயற்சிகள் வெற்றியாக மாறும் காலகட்டம் இது. பணியிடத்தில் திட்டமிடல் மற்றும் நேர்த்தி பெரிய முன்னேற்றத்தைத் தரும். கோபம் மற்றும் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். பணவரவை சேமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். தொழிலில் தொடர்ச்சியான வளர்ச்சி காணப்படும். தேவையற்ற கடன்களைத் தவிர்ப்பது நன்மை தரும். வாகன பராமரிப்பில் அலட்சியம் காட்டாதீர்கள். காது, மூக்கு, தொண்டை தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளில் கவனம் தேவை.












Click it and Unblock the Notifications