மீனம் ராசிக்கு சொந்த வீடு கனவு நனவாகப் போகுது.. தங்கம், நிலம், பணத்துக்குப் பஞ்சமே இருக்காது

Subscribe to Oneindia Tamil

குருப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் மீன ராசிக்காரர்களுக்கான பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் மாற்றம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கத்தை மாற்றும். அந்த வகையில் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசியினருக்கு அசுப பலன்களையும் தரக்கூடும்.

Guru peyarchi Meenam

குரு சுபத்துவம் முழுமையான பொருந்திய கிரகம். 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்பம் ராசியின் மேல் விழுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள்.

அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் மீனம் ராசிக்காரர்கள் என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு குருப்பெயர்ச்சிக்குப் பிறகு தான் வாழ்க்கையே ஆரம்பிக்கப் போகிறது என்று சொல்லலாம். ராசி, லக்கினத்தில் 4 கிரகங்களின் சேர்க்கை உண்டாகியுள்ளதால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை, பாதம், தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை உண்டாகும். குருப்பெயர்ச்சியால் இந்த பிரச்சனைகள் சரியாகும்.

நிலம், சொந்த வீடு யோகம்

குருப்பெயர்ச்சியில் மீன ராசிக்காரர்களுக்கு வீடு கட்டக்கூடிய அதிர்ஷ்டம் உண்டாகும். உயர்கல்வியில் அற்புதம் உண்டாகும். சுக ஸ்தானத்தில் குரு அமர்ந்துள்ளதால் வீடு, மனை, வாகனம், கட்டடங்கள், நிலம், வங்கி தொடர்பான விஷயங்களில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். கரவை மாடு வாங்குவது, நிலத்தில் முதலீடு செய்வது, விவசாயம் நிலம் வாங்குவது போன்ற யோகம் உண்டாகும்.

நிலம் வாங்கும் இடத்தில் டிரான்ஸ்ஃபார்மர், டவர் போன்றவை இருக்கும். கோயில், பள்ளிக்கூடம், கல்வி நிறுவனங்கள் அருகிலேயே இருக்கும். நல்ல தண்ணீர் நிறைய கிடைக்கும். நீங்கள் வாங்கும் அனைத்து சொத்துகளிலும் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் உண்டாகும். நிலம் மேலும் மேலம் வளரும். குழந்தை இல்லாதவர்களுக்கு சிகிச்சை மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் யோகம் உண்டாகும்.

குழந்தைகள், மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். குழந்தைகளிடம் ஒழுக்கத்தை ரொம்ப கடைப்பிடிப்பீர்கள். அதனை மட்டும் குறைத்து தட்டிக்கொடுத்துச் செல்வது நல்லது. மாணவர்கள் சிறப்பாக படிப்பார்கள். விரும்பிய கோர்ஸ் கிடைக்கும். நெஞ்சு, மார்புப் பகுதியில் வரும் பிரச்சனைகளில் கவனமாக இருப்பது நல்லது.

சேமிப்பு அதிகரிக்கும்

வெளிநாடு செல்வது, பிஆர் கிடைப்பது போன்றவை உண்டாகும். சேமிப்பே இல்லை என்று புலம்புபவர்கள் வேறு மாநில வங்கியில் பணத்தை சேமிக்கத் தொடங்குவீர்கள். தொழிலில் அபரிமிதமான முன்னேற்றம் உண்டாகும். அஷ்டம ஸ்தானத்தில் குரு பார்வை விழுவதால் மறைமுக பிரச்சனைகள், மறைமுக எதிரிகளால் வரும் தொல்லைகள் இல்லாமல் இருக்கும். மகிழ்ச்சியாக இருக்கும் காலகட்டமாக இருக்கும்.

கவனம்

குடும்பத்தைப் புரிந்துகொள்வது, குடும்பத்தினருக்கு மதிப்பு கொடுப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் யாரோ ஒருவருக்காக நீங்கள் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். சனி உங்களுக்கு அடுத்த ஆண்டு பிரம்மாண்ட யோகம் உண்டாகும். இப்போது போடும் முயற்சிகள் அடுத்த ஆண்டில் பலன் கொடுக்கும். திருமண யோகம், குழந்தை பிறப்பு உண்டாகும்.

அதிர்ஷ்டம்

உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகள் மகான்களாக பிறப்பார்கள். வெற்றியைக் கொடுக்கக்கூடிய ஸ்தானமாக இருக்கும். மீனத்தைப் பொருத்தவரை இந்த குருப்பெயர்ச்சி ஏற்றத்தைக் கொடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். பணம்,பொருளாதாரத்தல் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும்.

பெண்கள்

பெண்கள் ஆரோக்கித்தில் கவனம் தேவை. நிறைய பணம், நகை சேர்க்கும் யோகம் உண்டாகும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் பருமனைக் குறைப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. காலை, மாலை, நடைப்பயிற்சி செய்வது நல்லது.

மாணவர்கள்

4 ஆம் இடத்தில் குரு, பார்வை பலம் இருப்பதால் மாணவர்களின் மனதுக்கு ஏற்றவாறு கோர்ஸ்கள் கிடைக்கும். திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தும் காலகட்டமாக இருக்கும்.

பரிகாரம், வழிபாடு

சொந்த ஊரில் இருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது. பெருமாளுக்கு மஞ்சள் வாழைப்பழம் தானமாகக் கொடுப்பது, மாலை சாற்றுவது அருமையான பலன்களைக் கொடுக்கும்.

மதிப்பெண்

மகிழ்ச்சி ரீதியாக 75 சதவீதமும், பொருளாதார ரீதியாக 90 சதவீதமும் நன்மையைப் பெறக்கூடிய ஆண்டாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+