குரு பெயர்ச்சி பலன் 2021: புதிய தொழில் யார் தொடங்கலாம், நல்ல வேலை யாருக்கு கிடைக்கும்
குரு பகவான் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாவதால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு நல்ல வேலையையும், தொழிலில் லாபத்தையும் வருமானத்தையும் கொடுக்கக் போகிறார் குரு பகவான்.
சென்னை: குரு பகவான் பொன்னையும் பொருளையும் அள்ளித்தருவார். நல்ல வேலையையும், தொழிலில் லாபத்தையும் வருமானத்தையும் கொடுப்பார். குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். நிகழப்போகும் குரு பெயர்ச்சியாலும் குரு பகவான் பார்வையாலும் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்குமா? சொந்தத் தொழில் தொடங்கலாமா என்று பார்க்கலாம்.
குரு பார்க்க கோடி புண்ணியம் என்பார்கள். காலச்சக்கரத்திற்கு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் குரு அமரப்போகிறார். குருவின் பார்வை மிதுனம், சிம்மம், துலாம் ராசிகளின் மீது விழப்போகிறது. வாக்கிய பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சி மங்களகரமான பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 27ஆம் தேதி நவம்பர் 13ஆம் நாள் சனிக்கிழமை இரவு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பகவான் மங்களகரமான பிலவ ஆண்டு கார்த்திகை மாதம் 4ஆம் தேதி நவம்பர் 20ஆம் தேதியன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார்.
குரு பலம் இருந்தாலே எதையும் சாதிக்கலாம் என்றும் வெற்றி மீது வெற்றி வந்து சேரும் என்றும் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. கோச்சார ரீதியான குரு பெயர்ச்சி பலன்கள் மட்டுமே ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிப்பது கிடையாது. காரணம் ஜாதகத்தில் உள்ளது தசா புத்திகளும் ,கிரகங்களும் தான் 70% வரை பலன்களைத் தீர்மானிக்கும். குரு பெயர்ச்சி,சனிப் பெயர்ச்சி ,ராகு பெயர்ச்சி இதெல்லாம் 30% வரை பலனை தீர்மானிக்கும். ஜாதகத்தில் தசா புத்திகளில் இருக்கும் நன்மை தீமைகளை கூட்டி,குறைத்து வழங்குவதுதான் இந்தப் பெயர்ச்சிகளின் தன்மையாகும். ராசிக்கு மட்டும் பலன்களை எடுக்காமல் லக்கினத்திற்கும் இதை பொருத்தி பாருங்கள். தங்கள் சுய ஜாதகத்தை ஆராய்ந்து மற்ற முடிவுகளை எடுங்கள்.

துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இது யோக காலம் என்றே சொல்லலாம்.காரணம் முயற்சி ஸ்தான அதிபதி, ஆறாம் வீட்டு அதிபதி குரு பகவான் 5ஆம் வீட்டிற்கு வரப் போகிறார். எந்த புது முயற்சிகளுக்கும் ஆதாயம் உண்டு. சுப காரியத் தடைகள் விலகும். பிரச்சினையில் இருந்து மீள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். இந்த குரு பெயர்ச்சியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் அதிகம் நடைபெறும். குருவின் பார்வையால் வேலையில் இருந்த பிரச்சினைகள் விலகும். சிலருக்கு வேலையில் புரமோசன் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கலாம். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு 2 மற்றும் ஐந்தாம் வீட்டிற்கு உடைய குரு 4ஆம் வீட்டில் அமரப் போகிறார். தாயின் உடல் நிலையில் ஏற்பட்ட பிரச்சினை நீங்கும். வீடு அல்லது வேலையில் இட மாற்றம் நிகழும். புது முயற்சிகளில் கவனம் தேவை.
குருவின் பார்வை தொழில், கர்ம ஸ்தானத்தின் மீது விழுகிறது. தொழில் வியபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கலாம். சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். கைநிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்கு ராசி அதிபதியும் நான்காம் வீட்டு அதிபதியுமான குரு பகவான் 3ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். கடந்த ஆண்டுகளில் குருப்பெயர்ச்சியின் பிற்பகுதியில் வாக்கு காப்பாற்றத் தவறுதல்,வம்பு, வழக்கு பிரச்சினைகளை சந்தித்த நீங்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.வேலை சார்ந்த விசயங்களில் வெற்றி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம் நல்ல வேலை கிடைக்கும். கடன் கட்டுக்கள் இருக்கும் அல்லது உதவி புரிவதற்கு ஆட்கள் வருவார்கள். புதிய தொழில் தொடங்கலாம் நல்ல லாபம் கிடைக்கும்.

மகரம்
மகர ராசிக்கு ராசியில் இருந்த குரு 2ஆம் வீட்டிற்கு வரப் போகிறார். வாக்கில் கவனம் தேவை. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். மனதில் நினைத்த தன விசயங்கள் தங்களுக்கு சாதகமாக முடியும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம்.

கும்பம்
ஜென்ம ராசியில் குரு பகவான் வரப்போகிறார். சோதனை மிகுந்த காலம். மனச்சஞ்சலங்களும் டென்ஷனும் அதிகமாக இருக்கும். எதிலும் நிதானித்து பயனிப்பது நல்லது. வேலையில் கவனம் நிதானம் தேவை. உயரதிகாரிகளிடம் பிரச்சினை வேண்டாம் அனுசரித்து செல்வது நல்லது. சொந்த தொழிலில் பெரிய அளவில் முதலீடுகள் தவிர்க்கவும். 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் தொழில் வேலை ரீதியான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

மீனம்
மீன ராசிக்கு ராசி அதிபதியான குரு 12ஆம் வீட்டில் வருகிறார். கடந்த குரு பெயர்ச்சியில் தொழில் வியாபாரத்தில் நிறைய லாபத்தை பார்த்திருப்பீர்கள். 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு யோகம் அதிகம்.ஆரம்ப காலமும் முடிவு காலமும் சோதனையாக இருந்தாலும் இடைபட்ட காலங்களில் வேலை தொழில் ரீதியாக முன்னேற்றங்களும் நன்மைகளும் ஏற்படும். வெளி மாநிலம் அல்லது வெளிநாடு வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலங்களில் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகமாக இருந்தாலும் விரையச் செலவு வரும். 2022ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் புதிய வாய்ப்புகளும் தொழில் வியாபாரத்தில் லாபமும் அதிகரிக்கம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications