குரு பெயர்ச்சி பலன் 2023: யோக காலம்..தனுசு ராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கும்..என்ஜாய்!
சென்னை: நம்பியவர்களுக்கு நன்மை செய்யக்கூடிய தனுசு ராசிக்காரர்களே..உங்கள் ராசி அதிபதி குரு 5 ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து ஜென்ம ராசியை லக்னத்தை பார்ப்பது நல்லதொரு அமைப்பாகும். சந்திரன் நிற்கும் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9 மற்றும் 11 ஆகிய ஸ்தானங்களில் குரு பகவான் அமரும் காலம் நல்ல பலன்களை அளிகிறார். குரு அமரும் இடம் மட்டுமல்லாது குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 11ஆமிடம், 9ஆம் இடம், ஜென்ம ராசியின் மீது விழுவதும் சிறப்பான அம்சமாகும்.
இந்த குரு பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு அளவில்லாத நன்மை தரும். பூர்வ புண்ணிய ஸ்தான குரு நல்ல பலன்களை தரப்போகிறார். உங்கள் ராசி அதிபதி குரு 5ஆமிடத்திற்கு வருவதால் பதவிகள் தேடி வரும். பணி செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும். ராகு உடன் குரு இணைவதால் நோய்கள் தீரும். சுப காரியங்கள் அதிகம் நடக்கும் நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும்.

5ஆமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு அமர்வதால் பூர்வீக சொத்துக்கள் வந்து சேரக்கூடிய கால கட்டம். பித்ரு கடனை நிறைவேற்றுவீர்கள். நெருக்கடிகள் குறைந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தூர பயணங்களினால் நன்மை நடக்கும். பட்டங்கள் பதவிகள் தேடி வரும்.
3வது வீட்டில் சனி சஞ்சரிப்பது தைரியம் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். பிள்ளைகளினால் நன்மைகள் ஏற்படும். பூர்வீக சொத்து ரீதியாக நீண்ட நாட்களாக இருந்த தடங்கள் நீங்கும். பங்காளிகள் பிரச்சினை தீரும். கணவன், மனைவியினால் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்சினைகள் நீங்கும். நீண்ட நாள் கண்ட கனவுகள் நனவாகும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் ராசியை குரு பார்ப்பதால் நன்மைகள் நடந்தேறும்.மேலும் நன்மைகள் நடக்க பெருமாளை வணங்கலாம். தற்போது ராகு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு செய்யலாம்.
குருவின் பார்வை லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானம், உங்கள் ராசியின் மீது விழுவதால் பிரச்சினைகள் நீங்கப்போகிறது. கடன் பிரச்சினைகள் விலகி சேமிப்பு அதிகரிக்கும். தொழில் ரீதியாக நல்ல லாபம் கிடைக்கும். குரு பகவான் 9ஆம் இடத்தை பார்ப்பதால் பதவி, புகழ், வெளிநாடு செல்லும் யோகத்தை தருவார்.
தந்தையின் உடல் நலனில் இருந்த பிரச்சினைகள் தீரும்.












Click it and Unblock the Notifications