குரு பெயர்ச்சி பலன் 2023: கோடீஸ்வர யோகம் தரும் குரு பார்வை யாருக்கு?..மின்னல் வேக பலன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவ கிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் மேஷ ராசியில் அமர்கிறார். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலம் அதிகம். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். மேஷ ராசியில் இருக்கும் குரு தனது பொன்னான பார்வையால் சிம்மம், துலாம், தனுசு ராசிகளைப் பார்க்கிறார். குரு பார்வையால் கோடீஸ்வர யோகம் யாருக்கு தேடி வரப்போகிறது என மின்னல் வேகத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்: ஜென்ம குரு உங்களுக்கு அற்புதமான பலனை தருவார். மன நிம்மதி அதிகரிக்கும். திருமணம் இல்லாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும். புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும் உற்சாகம் சந்தோஷம் ஏற்படும். ஆரோக்கியம் அதிகரிக்கும்.

Guru peyarchi Palan 2023: Guru Parvai Palan Who get Kodeeswara Yogam

ரிஷபம்: குரு பகவான் விரையம் மோட்ச ஸ்தானமான 12ஆம் வீட்டிற்கு வருகிறார் சுப விரைய செலவுகள் ஏற்படும். ஆனந்தமான பயணங்களை தருகிறார் குருபகவான். தர்ம சிந்தனைகள் அதிகம் கிடைக்கும். வாழ்க்கையில் மிகப்பெரிய பெரிய திருப்பங்கள் ஏற்படும். புதிய வண்டி வாகனங்கள் வாங்கலாம். கடன்கள் தீரும் நோய்கள் விலகி ஆரோக்யம் அதிகரிக்கும். ஆயுள் கூடும் நிம்மதி ஏற்படும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

மிதுனம்: குரு பெயர்ச்சியாலும் குருவின் பார்வையாலும் தொழிலில் லாபம் வரும் வராத பணமும் தேடி வரும். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தைரியம் கூடும், முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மைகள் நடக்கும். திருமணம் தட்டிப்போனவர்களுக்கு நல்ல முறையில் திருமணம் நடக்கும். சமூகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். திருப்புமுனையை ஏற்படுத்தும் குரு பெயர்ச்சி அற்புதங்களை அனுபவிக்க தயாராகுங்கள்.

கடகம்: பத்தாம் வீட்டிற்கு குரு பகவான் வருவதால் உயர்ந்த பதவி கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். இரண்டு,நான்கு ஆறாம் வீடுகளை குரு பார்க்கிறார் முன்னேற்றமான மாற்றங்களை குரு தருகிறார். உங்களின் வளர்ச்சிக்கு குருப்பெயர்ச்சி உதவும். குருவின் பார்வை உங்க ராசிக்கு இரண்டாம் வீடு, நான்காம் வீடு, ஆறாம் வீடுகளின் மீது விழுகிறது. நிறைய பணவரவு இருக்கும், குடும்பத்தில் குதூகலமும் உற்சாகமும் இருக்கும் வீடு சொத்துக்களை வாங்குவீர்கள். வண்டி வாகனம் வாங்கும் யோகம் வருகிறது. நிறைய பணவரவு இருக்கும். கடன்கள் அடைபடும். நோய் நொடிகள் தீரும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

சிம்மம்: அதிர்ஷ்டமான குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. ஒன்பதில் குரு அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுவதால் உங்களின் முயற்சிக்கு சுபமான பலன் கிடைக்கும். சமூகத்தில் பெயரும் புகழும் கிடைக்கும். குடும்பம் குதூகலமாக இருக்கும். பிள்ளைகளால் அதிக நன்மைகள் நடக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி தெளிவான சிந்தனை பிறக்கும்.

கன்னி: குருபகவான் உங்க ராசிக்கு எட்டாம் வீடான மறைவு ஸ்தானத்தில் இருந்து உங்க ராசிக்கு இரண்டு, நான்கு, 12ஆம் வீடுகளைப் பார்க்கிறார். நன்மையை தரக்கூடிய பார்வை. கையில் பணம் அபரிமிதமாக புரளும். சொந்தமாக வீடு வாங்குவதற்கான காலகட்டம் கை கூடி வந்து விட்டது. வண்டி வாகனம் வாங்கலாம். மன அழுத்தங்கள் நீங்கி மனதில் நிம்மதி ஏற்படும். குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் உற்சாகமும் நிம்மதியும் ஏற்படும்.

Guru peyarchi Palan 2023: Guru Parvai Palan Who get Kodeeswara Yogam

துலாம்: குரு பகவான் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து நேரடியாக உங்கள் ராசியை பார்க்கிறார். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும் பதவி உயர்வு கிடைக்கும். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். சிலருக்கு காதல் திருமணங்கள் நடக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். தன்னம்பிக்கை தைரியம் கூடும். எதையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு முடிப்பீர்கள்.

விருச்சிகம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து பத்தாம் வீட்டை குரு பார்ப்பதால் தொழிலில் இருந்த நெருக்கடி தீரும். பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். பணவரவு அதிகமாக இருக்கும். லாட்டரி, பங்குச்சந்தை போட்டி பந்தையங்களில் வெற்றியை தருகிறார். சுப செலவுகள் ஏற்படும். வெளிநாடு யோகம் வரும். வீடு வாங்கலாம்.

தனுசு: ஐந்தாம் வீட்டில் குரு அமர்வது அற்புத பலன்களை தரும். சுகம், முன்னேற்றம் சந்தோஷங்களை தரும். ஆனந்தமான குரு பெயர்ச்சி. குருவின் பார்வை உங்க ராசி லக்னத்தின் மீது விழுகிறது. தைரியம் அதிகரிக்கும் ஆரோக்கியம் கூடும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். ஒன்பதாம் வீட்டை பார்ப்பது அதிர்ஷ்டம். தெய்வ கடாட்சம் கிடைக்கும். வெளிநாட்டு யோகம் வரப்போகுது. தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். மன நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்த குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது.

மகரம்: குரு நான்காம் வீட்டில் அமர்வதால் வீடு மாற்றம் வண்டி வாகன மாற்றம் ஏற்படும். நான்காம் வீட்டில் இருந்து குரு பார்வை 12ஆம் வீடு, எட்டாம் வீடு,பத்தாம் வீடுகளை குரு பார்க்கிறார். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பணவரவும் அதிகம் இருக்கும். செலவுகள் கட்டுப்படும். செய்யும் தொழிலில் சாதனை படைப்பீர்கள். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். சுப விரையங்கள் ஏற்படும். இதுநாள்வரை பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும். சந்தோசத்தையும், நிறைவையும் இந்த குரு தரப்போகிறார்.

கும்பம்: முயற்சி ஸ்தானமான 3ஆவது வீட்டில் அமரும் குரு பகவானின் பார்வை ஏழாம் வீட்டின் மீது விழுகிறது. மனதிற்குப் பிடித்த வரன் கிடைக்கும் கெட்டி மேளச்சத்தம் கேட்கும். உடலில் ஆரோக்கியமும் குடும்பத்திர் சுபிட்சமும் அதிகரிக்கும். ஆன்மீக தலங்களுக்கு புனித பயணங்கள் செல்வீர்கள். அதிர்ஷ்டம் வீட்டு கதவைத் தட்டப்போகிறது. லாப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பண வருமானம் அதிகரிக்கும்.

மீனம்: அதிர்ஷ்டகரமான குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. பணவருமானம் அதிகரிக்கும். குரு பகவான் நல்ல வேலையை கொடுப்பார். அதிர்ஷ்டத்தை தருவார். குரு பலமாக அமர்கிறார். குரு பார்வை உங்க ராசிக்கு ஆறாம் வீட்டினை பார்க்கிறார். நோயற்ற வாழ்க்கையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். கடன் தொந்தரவு, எதிரிகள் தொந்தரவுகள் நீங்கும். மன நிறைவாக இருப்பீர்கள். தடைகள் விலகி அதிர்ஷ்டம் கூடும். வியாபாரம் தொழிலில் வருமானம் கூடும். நிரந்தர தொழிலை ஏற்படுத்தி தருவார் குரு பகவான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+