குரு பெயர்ச்சி பலன்.. பிரிந்த கூட்டணி.. பாவ கிரகத்தை விட்டு விலகிய குரு பார்வையால் பலன் யாருக்கு?
சென்னை: மேஷ ராசியில் இருந்த குரு ராகு கூட்டணி விலகிவிட்டது. பாவ கிரகத்திடம் இருந்து குரு விலகியதால் முழு பலன்களையும் இனி பெறப்போகிறார்கள். சுப கிரகமான குரு அமரும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலன் பெரும். குரு சண்டாள தோஷம் முடிவுக்கு வந்த நிலையில் குரு பார்வையால் கிடைக்கப் போகும் சந்தோஷத்தையும் அதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.
துலாம்: உங்களுடைய ராசிக்கு ஏழாவது வீட்டில் மேஷ ராசியில் அமர்ந்துள்ள குரு பகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. குரு பகவானின் நேரடி பார்வையை இனிதான் முழுமையாக அனுபவிக்கப்போகிறீர்கள். உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மதிப்பு மரியாதை கூடும். புகழ் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். பணம் பொருள் செல்வம் தேடி வரும். சுகமும் சந்தோஷமும் கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். மேலும் நல்லது நடக்க வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு விரதம் இருந்து வெற்றிகளை தேடித்தரும்.

விருச்சிகம்: ஆறாம் வீட்டில் பயணம் செய்யும் குரு பகவான் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் வலிமையுடன் அமர்ந்துள்ளார். எதிரிகள் பிரச்சினைகளில் இருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். மறைமுக எதிரிகள் தொந்தரவுகள் நீங்கும். தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். அதிக கடன் வாங்கி அகலக்கால் வைக்க வேண்டாம். குரு பார்வையால் பணவரவு வரும். புதிய வேலை கிடைக்கும். வேலையில் இருந்த சங்கடங்கள் தீரும்.
தனுசு: பூர்வ புண்ணியத்தில் பயணம் செய்யும் குரு பகவானால் பிள்ளைகளால் நல்லது நடைபெறும். உங்கள் மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும். குருவின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். குரு பகவான் பார்வை வலிமையோடு இருப்பதால் திருமணம் கைகூடி வரும். புகழும் கீர்த்தியும் செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து குல கோவிலுக்கு சென்று வர நல்லது நடைபெறும்.
மகரம்: நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவானால் வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். இதுநாள் வரைக்கும் வீடு, நிலம் வாங்குவதில் இருந்த பிரச்சினைகள் தீரும். குருவின் பார்வை உங்க ராசிக்கு 12,10, 8 ஆம் வீடுகளின் மீது விழுவதால் நல்ல வேலை கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படும். சந்தோஷமும் சௌபாக்கியமும் பெருகும். வியாழக்கிழமைகளில் மகான்களின் ஜீவ சமாதிக்கு சென்று வணங்கி வர நல்லது அதிகரிக்கும்.
கும்பம்: மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவினால் உங்கள் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்றாலும் பண விசயத்தில் கவனம் தேவை. குருவின் பார்வை உங்க ராசிக்கு லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானம், களத்திர ஸ்தானத்தின் மீது விழுகிறது. உங்களுக்கு செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பாராத சந்தோஷங்களும் சௌபாக்கியங்களும் தேடி வரும். யாரையும் நம்பி பணத்தை தர வேண்டாம். ஜாமின் கையெழுத்து போட்டு பணம் கடனாக வாங்கித்தர வேண்டாம். வியாழக்கிழமை குருவிற்கு நெய் விளக்கேற்றி வழிபடுங்கள்.
மீனம்: குரு பகவான் குடும்ப ஸ்தானத்தில் வலிமையுடன் பயணம் செய்கிறார். குருவினால் உங்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீரப்போகிறது. நீண்ட நாள் கனவுகள் நனவாகும். பணம் வீடு தேடி வரும். வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரப்போகிறது. ஏழரை சனியால் கஷ்டப்பட்டு வரும் உங்களுக்கு பிரச்சினைகள் அத்தனையும் தீரும் காலம் வந்து விட்டது. நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்க வியாழக்கிழமை குரு பகவானுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள் நல்லது நடைபெறும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications