Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2023: வீடு தேடி வரும் வேலை..புரமோசன்..4 ராசிக்காரர்களுக்கு பிசினஸ் டாப்!

குரு பகவான் நல்ல வேலையையும், தொழிலில் லாபத்தையும் வருமானத்தையும் கொடுப்பார். குரு பகவானின் பார்வையால் யாருக்கு நல்ல வேலை கிடைக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பார்க்க கோடி புண்ணியம் என்பார்கள். காலச்சக்கரத்திற்கு முதல் வீடான மேஷ ராசியில் குரு அமரப்போகிறார். குருவின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ராசிகளின் மீது விழப்போகிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பகவான் ஏப்ரல் 21ஆம் தேதியன்று மீனம் ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். குரு பலம் இருந்தாலே எதையும் சாதிக்கலாம் என்றும் வெற்றி மீது வெற்றி வந்து சேரும் என்றும் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. இன்றைய கால கட்டத்தில் நிறைய பேருக்கு வேலை போய்க்கொண்டிருக்கிறது. பிசினஸ் நஷ்டமடைந்து வருகிறது. குரு பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் நல்ல வேலை கிடைக்கும்.பிசினசில் லாபம் கிடைக்கும் திடீர் ஜாக்பாட் மூலம் பண வருமானம் யாருக்கு கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Guru peyarchi palan 2023: Guru transit who will get new job and business

குரு பகவான் பொன்னையும் பொருளையும் அள்ளித்தருவார். நல்ல வேலையையும், தொழிலில் லாபத்தையும் வருமானத்தையும் கொடுப்பார். நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை பிறந்த ராசிக்காரர்களுக்கு யாருக்கு நல்ல வேலை கிடைக்கும் தொழில் வருமானம் அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.

கோச்சார ரீதியான குரு பெயர்ச்சி பலன்கள் மட்டுமே ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிப்பது கிடையாது. ஜாதகத்தில் தசா புத்திகளில் இருக்கும் நன்மை தீமைகளை கூட்டி,குறைத்து வழங்குவதுதான் இந்தப் பெயர்ச்சிகளின் தன்மையாகும். ராசிக்கு மட்டும் பலன்களை எடுக்காமல் லக்கினத்திற்கும் இதை பொருத்தி பாருங்கள். தங்கள் சுய ஜாதகத்தை ஆராய்ந்து மற்ற முடிவுகளை எடுங்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே..ஜென்ம ராசியில் குரு பகவான் பயணம் செய்யப்போகிறார். வேலையில் கவனம் நிதானம் தேவை. உயரதிகாரிகளிடம் பிரச்சினை வேண்டாம் அனுசரித்து செல்வது நல்லது. சொந்த தொழிலில் பெரிய அளவில் முதலீடுகள் தவிர்க்கவும். சோதனை மிகுந்த காலம். மனச்சஞ்சலங்களும் டென்ஷனும் அதிகமாக இருக்கும். எதிலும் நிதானித்து பயணம் செய்வது நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே.. குரு 12ஆம் வீட்டில் வருகிறார். கடந்த குரு பெயர்ச்சியில் தொழில் வியாபாரத்தில் நிறைய லாபத்தை பார்த்திருப்பீர்கள். 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு யோகம் அதிகரிக்கும். வேலை தொழில் ரீதியாக முன்னேற்றங்களும் நன்மைகளும் ஏற்படும். வெளி மாநிலம் அல்லது வெளிநாடு வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலங்களில் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகமாக இருந்தாலும் விரையச் செலவு வரும். வரும் ஏப்ரல் முதல் புதிய வாய்ப்புகளும் தொழில் வியாபாரத்தில் லாபமும் அதிகரிக்கம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே.. குரு பகவான் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். கடந்த வருடத்தில் வேலை தொழில் ரீதியாக சிரமமான சூழ்நிலைகளை சந்தித்தவர்களுக்கு இந்த வருடம் சாதகமாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். புதிய வேலை கிடைக்கும். வேலையில் இட மாற்றங்கள் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் ரீதியான லாபம் பெருகும். வெளிநாட்டு முயற்சிகள் கைகூடும். வெளிநாட்டில் வசிப்பவருக்கு முன்னேற்றம் ஏற்படும். சொந்த ஊரில் வசிப்பவர்களுக்கு முன்னேற்றம் இருந்தாலும் சுப விரையச் செலவுகள் ஏற்படும். குரு பெயர்ச்சியினாலும் குருவின் பார்வையாலும் திருமணம், புத்திரபாக்கியம் உள்ளிட்ட சுப காரியங்கள் நிகழ அதிக வாய்ப்புகள் உள்ளன.

கடகம்

கடக ராசிக்காரர்களே... குரு உங்கள் ராசிக்கு 10ஆம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். தொழில் அல்லது வேலையில் மாற்றம் நிகழும். சிலருக்கு தொழில், வியாபாரம், வேலையில் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கும். வேலை செய்யும் இடத்தில் கவனமும் நிதானமும் தேவை. உயரதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளை சேர்க்க வேண்டாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே குரு பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். ஏப்ரல் மாதம் முதல் பாக்ய ஸ்தானத்திற்கு இடத்திற்கு செல்லப் போகிறார். 9ஆம் இடம் என்பது தெய்வ வழிபாடுகளையும், ஆலயங்களையும் குறிக்கும். குரு உங்கள் ராசிக்கு களத்திர ஸ்தான அதிபதி, தொழில் ஸ்தான அதிபதி. குருவின் பார்வையால் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இந்த கால கட்டத்தில் வெளிநாட்டு வேலைகளுக்கு முயற்சி செய்தால் நல்ல வேலை அமையும். பெண்களுக்கு பொன் நகைகள் சேர்க்கை ஏற்படும்.

கன்னி

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு குரு பகவான் வரப்போகிறார். அஷ்டம குரு என்று அச்சப்பட வேண்டாம். வேலை, தொழில் விசயங்களில் அகலக்கால் வைக்க வேண்டாம். அவசரப்பட்டு இருக்கிற வேலையை விட்டு விட வேண்டாம். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். சங்கடங்கள் நீங்கும். நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

துலாம்

குரு பகவான் களத்திர ஸ்தானமான 7ஆம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். தொட்டது பொன்னாகும் காலம். இருக்கிற தொழிலை விரிவு செய்யுங்கள் அதே நேரத்தில் புதிய தொழில் முயற்சிகளை தவிர்க்கவும். வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல புரமோசன் கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். குருவின் பார்வை உங்கள் தொழில் வியாபாரத்தில் அதிக லாபத்தையும் நன்மைகளையும் தரும். புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். இதுநாள் வரைக்கும் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கும் காலகட்டமாகும்.

விருச்சிகம்

குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வேலை செய்யும் இடத்தில் பிரச்சினைகளை தவிர்க்கவும். தொழிலில் புது முதலீடுகள் செய்யக்கூடாது. வேலை முயற்சிகளிலும் பலவீனம் ஏற்படும். பங்குச் சந்தை முதலீடுகள் பலன் தராது. கடன் கொடுத்தால் திரும்பி வருவது கடினம். கடன் கிடைக்கிறது என்பதற்காக அதிக கடன் அகலக்கால் வைக்க வேண்டாம் ஆபத்தாகிவிடும்.

தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இது யோக காலம் என்றே சொல்லலாம்.காரணம் முயற்சி ஸ்தான அதிபதி, ஆறாம் வீட்டு அதிபதி குரு பகவான் 5ஆம் வீட்டிற்கு வரப் போகிறார். எந்த புது முயற்சிகளுக்கும் ஆதாயம் உண்டு. சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் விலகும். பிரச்சினையில் இருந்து மீள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். குருவின் பார்வையால் வேலையில் இருந்த பிரச்சினைகள் விலகும். சிலருக்கு வேலையில் புரமோசன் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கலாம். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இந்த குரு பெயர்ச்சியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் அதிகம் நடைபெறும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே..நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட பிரச்சினை நீங்கும். வீடு அல்லது வேலையில் இட மாற்றம் உண்டாகும். புது முயற்சிகளில் கவனம் தேவை. குருவின் பார்வை தொழில், கர்ம ஸ்தானத்தின் மீது விழுவதால் தொழில் வியபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கலாம். சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். கைநிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களே..குரு பகவான் இரண்டாம் வீட்டில் இருந்து 3ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.வேலை சார்ந்த விசயங்களில் வெற்றி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம் நல்ல வேலை கிடைக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்கள் இருக்கும். நல்ல பண வருமானம் வரும். புதிய தொழில் தொடங்கலாம் நல்ல லாபம் கிடைக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே..உங்கள் ராசியில் இருந்த குரு 2ஆம் வீட்டிற்கு வரப் போகிறார். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். மனதில் நினைத்த தன விசயங்கள் தங்களுக்கு சாதகமாக முடியும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+