குரு பெயர்ச்சி பலன் 2023: அஷ்டமத்து குரு வக்ரமடைந்தால் ஆபத்தா? யாரெல்லாம் கவனம்
சென்னை: நவகிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் செப்டம்பர் 4ஆம் தேதி முதல் மேஷ ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்யப்போகிறார். கன்னி ராசிக்காரர்களுக்கு அஷ்டம குரு வக்ரமடைந்தால் கஷ்டங்கள் வருமா? குரு பகவானின் பார்வையாலும் வக்ர பயணத்தாலும் கன்னி ராசிக்காரர்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நிகழப்போகிறது என்று பார்க்கலாம்.
குரு பகவான்: நவ கிரகங்களில் சுபகிரகமான குரு பகவானின் பார்வை பலவித தோஷங்களை நீக்கும். குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள். குரு பகவான் வக்ர நிலையில் அஸ்வினி, பரணி நட்சத்திரங்களில் பயணம் செய்யப்போகிறார். குருவின் பார்வை கன்னி ராசிக்காரர்களுக்கு இரண்டாவது வீடு, நான்காவது வீடு, 12வது வீடுகளின் மீது விழுவதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும், வீடு, நிலம் வாங்குவீர்கள்.

கன்னி: குரு பகவான் கன்னி ராசிக்கு நான்கு மற்றும் ஏழாம் வீட்டு அதிபதி. இப்போது மேஷ ராசியில் ராகு உடன் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பொன்னவன் என வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் கஷ்டம் வராது. குடும்பமும் நல்ல முறையில் இருக்கும். ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை வராது. எனவேதான் திருமணம், குழந்தை பாக்கியம், வேலையில் உயர்வு, வருமானத்தில் உயர்வு, நோய் நொடியற்ற வாழ்க்கை வேண்டும் என்று விரும்புபவர்கள் குரு பகவானின் அனுக்கிரகம் அவசியம் என்று எதிர்பார்க்கின்றனர். கன்னி ராசிக்காரர்களுக்கு சுக ஸ்தான, களத்திர ஸ்தான அதிபதி குரு அஷ்டமத்தில் மறைவது சாதகமான விசயமில்லை.
பதவி உயர்வு வரும்: குருபகவான் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் அலுவலகத்தில் சிக்கல்கள் வந்து போகும். குடும்பத்தில் உறவினர்களிடையே நிமிர்ந்து சண்டை போடுவதை விட கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. கணவன் மனைவிக்குள் தேவையற்ற சச்சரவுகள் வந்து நீங்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரி இனி உங்கள் திறமையை அங்கீகரிப்பர். எதிர்பார்த்த பதவியுயர்வு தேடி வரும். அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டாம். டிசம்பர், ஜனவரி மாதங்களில் புது வாய்ப்புகள் அமையும். திறமைக்கேற்றபடி பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்கும்.
குரு பார்வை: குரு பகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் வீட்டினை பார்ப்பதால் இது வரை தடைப்பட்ட காரியங்கள் விரைந்து நடக்கும். அதே போல இரண்டாம் வீடான தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பொருளாதார நிலை உயரும் வரவுகள் கூடும். பண சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியம் கை கூடி வரும். பணம் கொடுக்கல் வாங்கலில் உள்ள சிக்கல்கள் மறையும். கடனாக கொடுத்து விட்டு வரவே வராது என்று நினைத்த பணம் வீடு தேடி கைக்கு வரும்.
புது வீடு வாங்கலாம்: பூர்விக சொத்துகள் விற்பதன் முலமாக அல்லது வாங்கிய சொத்துகள் நல்ல விலைக்கு விற்பதால் லாபம் வரும். பண பிரச்சினையால் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மனகசப்புகள் அகலும். கணவன் மனைவி இடையே உறவு பலப்படும்.4 ஆம் பாவத்தை குரு பார்வையிடுவதால் சிலர் அசையா சொத்து வாங்குவார்கள். புது வீடு கட்டி குடிபோவார்கள்.சிலருக்கு மனைவி வகையிலும் சொத்து வசதி வாய்ப்புகள் சேரும்.
உடல் நலனில் கவனம்: சிலருக்கு கடந்த காலங்களில் கடனால் அவதிப்பட்டவர்கள் ஏதாவது சொத்தை விற்று முழு கடனையும் அடைப்பார்கள் புது முயற்சிகள் கை கூடும்.தொழில் லாபம் கூடும் தற்சமயம் வேலையில் முன்னேற்றம் வரும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு உடன் உள்ள குரு உத்தியோகத்தில் அலைச்சல் காரணமாக சற்று உடல்நிலை பாதிப்பை தருவார் கவனம் தேவை. நவம்பர் மாதத்திற்குப் பிறகு குரு பகவானின் பார்வை சுபத்துவம் நிறைந்ததாக இருக்கும். குரு பகவானால் மேலும் நன்மைகள் நடைபெற வியாழக்கிழமை முருகப்பெருமானையும் கூடிய குருபகவானயும் வணங்கலாம்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications