குரு பெயர்ச்சி பலன் 2023: வக்ர குரு.. மேஷத்தில் பிரியும் கூட்டணி.. வேலையில் புரமோசன் யாருக்கு?
சென்னை: நவ கிரகங்களில் பொன்னவன் என்று போற்றப்படும் குரு பகவான் மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்கிறார். செப்டம்பர் 04ஆம் தேதி முதல் வக்ரகதியில் பயணம் செய்வார் குரு பகவான். அக்டோபர் இறுதிக்குப் பின் இந்த கூட்டணி பிரிகிறது. குருவின் வக்ர சஞ்சாரத்தினால் தனுசு, மகரம்,கும்பம், மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் யாருக்கு பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.
குரு வக்ர பெயர்ச்சி: நவகிரகங்கள் அனைத்தும் தங்கள் சுற்றுப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவை சில நேரங்களில் பின்னோக்கியும் செல்லும். ஜோதிட ரீதியாக கிரகங்கள் பின்னோக்கி செல்லும் காலங்களை வக்ர காலங்கள் என்கிறோம். நவகிரகங்களில் செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி போன்ற ஐந்து கிரகங்களும் சில நேரங்களில் வக்ரம் பெறுவார்கள். குரு பகவான் மேஷ ராசியில் பரணி, அஸ்வினி நட்சத்திரங்களில் வக்ரமடைவார். டிசம்பர் 31ஆம் தேதி வரைக்கும் வக்ர நிலையில் பயணம் செய்யும் குருவின் இந்த பயணத்தினால் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் ஏற்படும் என்று பார்க்கலாம்.

தனுசு: குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. உங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். சொந்தபந்தங்களுடன் கூடி மகிழ்வீர்கள். தடைபட்டு தள்ளிப்போன சுப காரியங்களை நடத்துவீர்கள். விஐபிக்களுடன் நட்பு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். உங்களின் அழகு ஆரோக்கியமும் கூடும். உங்களுக்கு பண வருமானம் அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூல் செய்வீர்கள்.
மகரம்: தடைபட்டிருந்த திருமணம் கைகூடி வரும். வீட்டிற்குள் திடீர் பயணங்களினால் உற்சாகமடைவீர்கள். எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் பேசாதீர்கள் வளைந்து கொடுத்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. அலுவலகத்தில் உங்களுக்கு திடீர் புரமோசன் தேடி வரும். பண மழையில் நனைவீர்கள்.
கும்பம்: குரு பகவான் வக்ரமடையும் செப்டம்பர் 4 முதல் டிசம்பர் 31 வரைக்கும் உங்களுக்கு அற்புதமான காலகட்டம். உங்களுக்கு வருமானம் வரும். உங்களின் எண்ணங்கள் நிறைவேறும் உங்களின் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் எனவே இந்த ஒருமாதம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இந்த குரு பெயர்ச்சியால் உங்களுக்கு திடீர் செலவுகள் வரும். தாய்வழி உறவினர்களால் செலவுகளால் வரும். அரசு வழி விவகாரங்களில் பிரச்சினை வரலாம் அலட்சியமாக இருக்காதீர்கள்.
மீனம்: மீனம் ராசிக்காரர்களுக்கு இரண்டாம் வீட்டில் குரு பகவான் ராகு உடன் வக்ர கதியில் பயணம் செய்வதால் புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு அதிகாரமுள்ள பதவிகள் கிடைக்கும். புரமோசனுடன் சம்பள உயர்வும் தேடி வரும்.. உங்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் சுறுசுறுப்பாக உற்சாகமாக வேலையை செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். செப்டம்பர் 4ஆம் தேதிக்கு மேல் உங்களின் சமயோஜித புத்தி அதிகமாகும். புதிய வேலை கிடைக்கும், மனைவி வழி உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். மனைவி வழியில் சொத்துக்களும் கிடைக்கும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications