குரு பெயர்ச்சி பலன் 2023: இது சும்மா ட்ரெயிலர்தான்..6 ராசிக்காரர்களுக்கு மெயின் பிக்சர் இனிதானாம்!
சென்னை: குரு பகவான் ஒருவருக்கு யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரும் கிரகம். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலம் அதிகம். ஒருவருக்கு நல்ல வேலையும் சம்பள உயர்வும் கிடைக்க குருபகவானின் அனுக்கிரகம் அவசியம். குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு வரும் 22ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிரடியான மாற்றங்கள் ஏற்படப்போகிறது.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களே.. உங்களுடைய வாழ்க்கையில் அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார் குரு பகவான். ஜென்ம ராசியில் குரு வருகிறது ராகு உடன் இணையும் குரு இடமாற்றத்தை தருவார். வேலையில் புரமோசனுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். நல்லதொரு மாற்றத்தை ஏற்றுக்கொள்வது நன்மையை ஏற்படுத்தும். சுபகாரிய தடைகள் நீங்கும். திருமணம் முடிந்து குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர சந்தானம் கொடுக்கும். சண்டை சச்சரவுகள் நீங்கும். மகான்கள் தரிசனம் மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும். கோபப்படாதீர்கள் உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை காட்டவும். திருக்கடையூர் சென்று அபிராமி அன்னையை தரிசனம் செய்து வாருங்கள். வைத்தீஸ்வரன் கோவில் வழிபாடு வெற்றியை தரும்.
கடகம்: கடக ராசிக்காரர்களே.. பத்தாம் இடத்தில் அமரப்போகும் குருவினால் புதிய பதவிகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரும். இடமாற்றங்கள் ஏற்படும். பத்தில் குரு சில நேரங்களில் பதவி பறிபோகலாம். கார்ப்பரேட் கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் கவனம், மேலதிகாரிகளின் உத்தரவுக்கு கட்டுப்படுங்கள். உங்களின் வாழ்க்கையை இந்த குரு பெயர்ச்சி புரட்டி போடவும் வாய்ப்பு உள்ளது. திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட்டு வர பாதிப்புகள் குறைய வாய்ப்பு உள்ளது.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சில கஷ்டங்களை தரலாம் காரணம் அஷ்டம ஸ்தானத்தில் குரு வரப்போகிறார். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். சுப விரைய செலவுகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள். வேலை விசயத்தில் சில பிரச்சினைகள் வரலாம். உங்கள் வாழ்க்கையில் இதுநாள் வரை நடந்தது வெறும் ட்ரெயிலர்தான் மெயின் படமே இனிமேதான் எனவே பேசும் வார்த்தைகளில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. தஞ்சை மாவட்டம் தென் திட்டை சென்று குருபகவானை தரிசனம் செய்யலாம்.
மகரம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே, குரு நான்காம் வீட்டிற்கு சுக ஸ்தான குருவாக அமர்கிறார். நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலையில் புதிய உற்சாகம் பிறகும். சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கும். பெண்களுக்கு இது யோகமான குரு பெயர்ச்சியாக உள்ளது. பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். வெற்றியும் அனுகூலமும் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது. திருவண்ணாமலை சென்று கிரிவலம் வர நன்மைகள் அதிகம் நடைபெறும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு முயற்சி ஸ்தான குரு வெற்றிகரமான குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபம் குறையும். அசையும் அசையாக சொத்துக்கள் வாங்கலாம். இரவு நேரங்களில் தூக்கத்தை கெடுத்துக்கொள்ள வேண்டாம் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்ப பிரச்சினைகளை கவனமாக கையாளுங்கள், விட்டுக்கொடுத்து போங்கள் பிரச்சினைகள் எளிதில் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கவும் கடன் பிரச்சினை நீங்கவும் வீர ஆஞ்சநேயரை வழிபடுங்கள் வெற்றிகள் தேடி வரும்.
மீனம்: குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, உங்க ராசிநாதன் குரு பகவான் உங்களுடைய ராசியில் இருந்து இரண்டாம் வீடான மேஷ ராசிக்கு செல்கிறார். குரு பகவான் ராகு உடன் இணைகிறார் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேரப்போகிறீர்கள். நீண்ட நாட்களாக நோய் பிரச்சினையில் சிக்கித்தவித்தவர்களுக்கு நோய் பிரச்சினை நீங்கும். சிலருக்கு வேலையில் புரமோசன் சம்பள உயர்வு கிடைக்கும். வார்த்தைகளில் கவனமாக இருக்கவும். பேசும் வார்த்தைகள் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் அஷ்டலட்சுமி யோகத்தை தேடி கொடுக்கும். அதே நேரத்தில் வார்த்தைகளில் கோபத்தை காட்டினால் அதுவே உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி விடும் கவனமாக பேசவும். நரசிம்மர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வர நன்மைகள் ஏற்படும்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications