குரு பெயர்ச்சி பலன் 2023: லாப குரு.. கோடீஸ்வர யோகம் வீடு தேடி வரும்..அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுப கிரகமான குரு பகவான் மேஷ ராசியில் ராகு உடன் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். மிதுன ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் பயணிக்கப்போகிறார் குரு பகவான். லாப குருவினால் அதிர்ஷ்டங்களும் யோகங்களும் கிடைக்கப்போகிறது. சுய ஜாதகத்தில் குரு சரியான இடத்தில் அமர்ந்து தசாபுத்திகளும் சிறப்பாக இருந்தால் இந்த குரு பெயர்ச்சி கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறது.

மிதுன ராசிக்காரர்களே.. குரு பகவான் ஓராண்டுகளுக்கு சுப பலனை வழங்க கூடிய ஏதுவான இடமான 11ஆம் இடத்தில் சஞ்சரித்து அதிவேகமாக பயணிக்க உள்ளார். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ள குரு பகவானுடன் ராகு இணைந்து இருப்பது சிறப்பானது.

Guru Peyarchi palan 2023: Kodeeswara yogam For Mithunam Rasi

சுப கிரமான குரு தான் இருக்கும் இடத்தை விட தான் பார்வை செய்யும் இடத்தின் பலனை விருத்தி செய்வார். லாப ஸ்தானத்தில் இருந்து குரு பகவான் தனது பார்வையினால் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடமான சிம்ம ராசி, ஐந்தாம் இடமான துலாம் ராசி, ஏழாம் இடமான தனுசு ராசிகளைப் பார்வையிடப்போகிறார். அற்புதமான யோகம் கிடைக்கப்போகிறது. முயற்சிகளுக்கு வெற்றியும் பிள்ளைகளால் குடும்பத்தில் சந்தோஷமும் அதிகரிக்கும்.

குரு பகவான் தனது 5 ஆம் பார்வையால் மூன்றாம் வீட்டினை பார்ப்பதால் உங்களின் தைரியம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர் சகோதரிக்கு முன்னேற்றம் வரும். திருமணம் போன்ற சுபகாரியம் நிகழும். சிறு தூரப் பயணங்கள் அதிகரிக்கும். சிலருக்கு ஆன்மீக உபதேசம் கிடைக்கும். இளைய சகோதர சகோதரிகளுடன் மனகசப்பு இருந்தாலும் அகலும். சுமூக உறவு ஏற்படும். உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். புதிய கல்வி கலைகளை கற்றுக்கொள்வீர்கள்.

குரு பகவான் தனது ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்வையிடுகிறார். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றமும் வளர்ச்சியும் ஏற்படும். குழந்தைகளுக்கு திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சி ஏற்படும். வாரிசுகளுக்கு படிப்பிலும்,தொழிலும்,ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளை பிறர் பாராட்டுவதால் மன மகிழ்ச்சி உண்டாகும். திருமணமாகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு வாரிசு கிடைக்க வாய்ப்பு உண்டாகும்.

நீண்ட நாட்களாக கிடைக்காமல் இருந்த பூர்வீக சொத்து கிடைக்கும். திட்டமிட்ட செயல்களும்,இதுநாள் வரை நிறைவேறாமல் இருக்கும் திட்டங்களும் மளமளவென நிறைவேறும். தந்தை வழி தாத்தாவின் உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். தாய் மாமனுக்கு முன்னேற்றமான பலன் ஏற்படும். தாய் மாமன் வீட்டில் இருந்த பிரச்சனைகள் தீரும் அவர் வீட்டில் சுப நிகழ்ச்சி அல்லது தாய் மாமனுக்கு திருமணம் நடைபெறும்.சிலருக்கு பங்குச்சந்தை மற்றும் ரேஸ் மூலம் லாபம் கிடைக்கும். இந்த கால கட்டத்தில் குல தெய்வ வழிபாடு செய்வதால் குலதெய்வ அருள் கிடைக்கும் முன்னேற்றம் உண்டாகும்.

குரு பகவான் தனது 9ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தை பார்வையிடுகிறார்.
குரு பலன் வந்துள்ளதால் திருமணம் ஆகாதவருக்கு திருமணம் நடைபெறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிரிந்து இருந்த தம்பதியர் இணைவர். தந்தைக்கு தொழிலில் லாபம் அதிகரிக்கும். கூட்டு தொழிலில் இருக்கும் பிரச்சனை அகலும். சிலர் கூட்டு தொழில் ஆரம்பிப்பார்கள். நண்பருடன் இருந்த மனகசப்பு அகலும் நண்பர்களின் உதவி கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+