மேஷத்தில் 4 கிரக கூட்டணி..குரு பெயர்ச்சியும் சூரிய கிரகணமும்..இந்த 6 ராசிக்காரர்கள் அதி ஜாக்கிரதை!
சென்னை: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்னும் சில நாட்களில் நிகழ உள்ளது. குரு பெயர்ச்சியும் சூரிய கிரகணமும் அடுத்தடுத்து நிகழ உள்ளது. மேஷ ராசியில் 4 கிரகங்கள் இணைகின்றன. சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கும் என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும் பாதிப்பு ஏதேனும் ஏற்படுமா? என்ன மாதிரியான பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சூரிய பகவான் வரும் 22 அம் தேதி தனது சொந்த ராசியான மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். சூரிய கிரகணம் வரும் 20ஆம் தேதி நிகழ்கிறது. மேஷ ராசி அசுவினி நட்சத்திரத்தில் நிகழும் இந்த சூரிய கிரகணம் ராகு கிரஹஸ்த சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரிய வாய்ப்பில்லை.

சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் இந்த குரு பெயர்ச்சி அதிக கவனம் பெற்றுள்ளது. கிரகங்களின் அணிவகுப்பும் நிகழ்கிறது. மேஷ ராசியில் சந்திரன், சூரியன், குரு, ராகு என 4 கிரகங்கள் இணைகின்றன. அமைந்துள்ளன. இந்த கிரகங்களின் கூட்டணியாலும் குரு பெயர்ச்சியாலும் எந்த ராசிக்காரர்களின் வாழ்வில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் குரு பெயர்ச்சி நன்மையாக இருக்கும். ஜென்ம ராசியில் உள்ள குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 5,7,9ஆம் வீடுகளின் சனி லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையில் மாற்றம் ஏற்படும். உங்கள் ராசியில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் முன்னேற்றம் உண்டாகும். மன குழப்பங்கள் நீங்கும். பண வரவு திருப்தியாக இருக்கும். பங்கு வர்த்தகம் லாபம் தரும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். ஞாயிறு அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
ரிஷபம்: ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் குரு பெயர்ச்சி வெற்றியை தரும். விரைய ஸ்தானத்தில் கிரகணம் நிகழ்கிறது. குரு பகவானும் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பத்தாம் வீட்டு சனியால் தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.
மிதுனம்: மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு கிரகணம் லாப ஸ்தானத்தில் நிகழ்கிறது. குரு பகவானும் லாப ஸ்தானத்திற்கு வருவது நிறைய லாபங்களைத் தரப்போகிறது. சனிபகவான் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வது சிறப்பு அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். உங்களுடைய நேர்மைக்கு உரிய மதிப்பீடு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உங்களுடைய திறமைகளை பிறருக்கு காட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
கடகம்: கடக ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. குரு பகவானும் தொழில் ஸ்தானத்தில் ராகு சூரியனுடன் இணைந்து பயணம் செய்யப்போகிறார். சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. வேலை தொழிலில் கவனமும் நிதானமும் அவசியம். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். எந்த ஒரு விசயத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள். ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவு செய்வது நல்லது.
சிம்மம்: சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே. உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. குரு பகவானும் பாக்ய ஸ்தானத்திற்கு வருகிறார். அப்பா வழி சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எந்த விசயத்திலும் தலையிடாமல் அமைதியாக இருப்பது நல்லது. வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. குரு பகவானின் பார்வையால் தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும். களத்திர சனியால் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வந்து போகும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து அமைதி காப்பது நல்லது.
கன்னி: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், குரு, ராகு, புதன், சந்திரன் ஆகிய 4 கிரகங்கள் இணைவதால் வாகன பயணங்களில் கவனம் தேவை. தேவையற்ற பேச்சுக்களை பேசி பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளாதீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். ஒற்றுமை பிறக்கும். கணவன்-மனைவி இடையே புதிய புரிதல் ஏற்படும். ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசிக் கொள்வது நல்லது. புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. மறைந்திருந்து தொல்லை கொடுத்த எதிரிகளின் பிரச்சினை நீங்கும். கூர்மையான பொருட்கள், மின்சாதன பொருட்களை உபயோகப்படுத்தும் போது கவனம் தேவை.
துலாம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாகவே அமைகிறது. சூரிய கிரகணம் ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானத்தில் நிகழ்கிறது. குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். சனிபகவான் ஆறாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். ஏழாம் வீட்டில் நான்கு கிரகங்கள் இணைவதால் துணிச்சலாக எந்த முடிவுகளையும் எடுப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை கூடும். சுப விரைய செலவுகள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
விருச்சிகம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. ஆறாம் வீட்டில் நான்கு கிரகங்கள் இணைகின்றன.சனிபகவான் நான்காம் வீட்டில் அர்த்தாஷ்டம சனியாக பயணம் செய்கிறார். ஆறாம் வீட்டில் அமரும் குருபகவானால் உங்களுக்கு நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். நீங்கள் நீண்ட நாள் நினைத்த காரியம் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் பண வரவு உண்டாகும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை தேவை. மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.

தனுசு: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் குரு பெயர்ச்சி உங்களுக்கு நன்மையை தரப்போகிறது. குரு பகவான் 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. மூன்றாம் வீட்டில் சனி இடப்பெயர்ச்சி பயணம் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்.
மகரம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே, சூரிய கிரகணம் நான்காம் வீட்டில் நிகழ உள்ளது. குரு பகவான் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சூரியன், புதன்,சந்திரன் ராகு உடன் பயணம் செய்வதால் எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும். வீடு, வண்டி வாகனம் வாங்குவது நல்லது. எந்த ஒரு முக்கிய முடிவையும் தள்ளி வைப்பது நல்லது. சுப காரிய முயற்சிகளில் ஏற்பட்ட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் தேடி வரும். திடீர் வருமானமும் அதிகரிக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
கும்பம்: சனிபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, சனிபகவான் உங்கள் ஜென்ம ராசியில் பயணம் செய்கிறார். சூரிய கிரகணம் மூன்றாவது வீட்டில் நிகழ உள்ளது. குரு பகவானும் மூன்றாவது வீட்டிற்கு வருவதால் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய முடிவுகளை எடுக்கும் முன்பாக கொஞ்சம் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பழைய வாகனத்தை மாற்றி விட்டு புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் தடை, தாமதங்கள் ஏற்படலாம். குழந்தைகளில் கல்வி விஷயத்தில் கூடுதல் அக்கறையும் கவனமும் தேவைப்படும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உற்சாகம் அதிகரிக்கும்.

மீனம்: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. குரு பகவான் உங்கள் ராசியில் இருந்து இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். விரைய ஸ்தானத்தில் சனிபகவான் பயணம் செய்கிறார். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உற்சாகத்திற்கு குறைவிருக்காது. கடன் பிரச்சினை நீங்கும். எதிலும் கவனமுடனும் நிதானமுடனும் செயல்படுவது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை. நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications