குரு பெயர்ச்சி பலன் 2023: பரணியில் பயணிக்கும் குரு பகவான்..தரணி ஆளப்போகும் ராசிக்காரர்கள் யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பகவான் மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்கிறார். இதுநாள் வரைக்கும் கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் பயணம் செய்து வந்த குரு பகவான் ஜூன் இறுதியில் தொடங்கி நவம்பர் இறுதி வரைக்கும் சுக்கிரனின் நட்சத்திரமான பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். குருவின் நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும் ஆரோக்கியத்தையும் தரப்போகிறது. சில ராசிக்காரர்களுக்கு சின்னச் சின்ன சிக்கல்களும் வரப்போகிறது. பரணி செல்லும் குருவினால் யாரெல்லாம் தரணி ஆளப்போகின்றனர் என்று பார்க்கலாம்.

மேஷம்: குரு பகவான் உங்கள் ராசியில் அசுவினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்தில் பயணிக்கும் நான்கு மாத காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் பணம் விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குரு பகவான் வக்ரமாக பயணிக்கப்போகும் செப்டம்பர் மாதத்தில் இருந்து உங்களுக்கு வரும் எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். பதவி உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை தேடி வரும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். புதிய வேலை வாய்ப்பு வரும் போது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Guru peyarchi palan 2023 tamil: Guru Transit Bharni Star who will get Kodeeswara yogam

ரிஷபம்: விரைய ஸ்தானத்தில் ராசிநாதன் சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு பகவான் பயணம் செய்வதால் திடீர் பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும். வண்டி வாகனங்களை மாற்றுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சுப காரியங்கள் கைகூடி வரும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். ஆடப்பரமாக செலவு செய்தால் பணப்பற்றாக்குறை வரும் கவனம் தேவை.

மிதுனம்: லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவான் நட்சத்திரம் மாறுவதால் திருமண சுபகாரியம் கைகூடி வரும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும் வழக்கில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். குரு பகவான் வக்ரமடையும் செப்டம்பர் மாதத்தில் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொண்டை புகைச்சல் சளி தொந்தரவுகள் வந்து நீங்கும்.

கடகம்: தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவானால் வேலையில் முன்னேற்ற உண்டாகும். சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவதிலும் உங்களின் பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்வதிலும் கவனம் தேவைப்படும். குரு பகவான் வக்ரகதியில் பயணம் செய்யும் காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் தேவைப்படும். வீண் அலைச்சல் வந்து போகும். அம்மா வழி உறவினர்களிடம் பேசும் போது கவனம் தேவை. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

சிம்மம்: பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவான் பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் குரு பகவானால் சிம்ம ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு, எதிரிகளை வீழ்த்துவீர்கள், எதிலும் வெற்றிகள் தேடி வரும். திருமணம் சுப காரியம் கைகூடிவரும். வேலையில் அலைச்சலும், சிறுசிறு தடைகளும் வந்து நீங்கும். வேலையில் இடமாற்றமும் முன்னேற்றமும் உண்டாகும். குருபகவான் வக்ர கதியில் செல்லும் காலத்தில் தடைபட்ட சுபகாரியங்கள் வெற்றிகரமாக முடிவுக்கு வரும். வேலை செய்யும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மகளுக்கு திருமணம் கூடி வரும். திடீர் பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும்.

கன்னி: அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவான் உங்கள் ராசிக்கு தனபாக்யாதிபதியான சுக்ரனின் பரணி நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் வெற்றிகள் தேடி வரும். வீடு, வாகனம் வாங்கலாம். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குருபகவான் வக்ர கதியில் செல்லும் காலத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தம்பதியர் இடையே சண்டை சச்சரவுகள் வந்துபோகும். வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+