குரு பெயர்ச்சி பலன் 2023: ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு..படு ஸ்மார்ட் ஆகும் ராசிக்காரர் யார்?
சென்னை: குரு பகவான் மேஷ ராசியில் ராகு உடன் இணைந்து பயணம் செய்கிறார். வரும் 2024ஆம் ஆண்டு மே மாதம் வரை மேஷ ராசியில் குரு பயணம் செய்யப்போவதால் பலருக்கும் என்ன பலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சிம்ம ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்யும் குருபகவான் நிறைய பாக்யங்களையும் பதவி யோகத்தையும் தரப்போகிறார். இந்த குரு பெயர்ச்சியால் என்னென்ன நன்மைகள் நடைபெறப்போகிறது என்று பார்க்கலாம்.
குரு பகவானின் பயணமும் பார்வையும் சிம்ம ராசிக்காரர்களுக்கு நிறைய அற்புதங்களை நிகழ்த்தப்போகிறது. பொதுவாகவே ஒன்பதாம் வீட்டில் குரு பகவான் பயணம் செய்தாலே தர்ம காரியங்கள் அதிகம் செய்வீர்கள். ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். உங்களுக்கு கவுரவம், மரியாதை அதிகரிக்கும். மேன்மைகள் நிறைந்த வாழ்க்கை அமையும். பாக்ய குரு ராகு உடன் இணைந்து உங்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறார்.

ராகு உங்களுக்கு யோக காரகன், தனம், புத்திரம் தரக்கூடிய குரு பகவான் இணைவதால் புகழ், செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். திறமையால் உங்களுக்கு புரமோசன் தேடி வரப்போகிறது. திடீர் அதிர்ஷ்டமும் பண வருமானமும் வரப்போகிறது.
சிம்ம ராசிக்காரர்களே.. 9ஆம் வீட்டில் குரு பயணம் செய்கிறார். ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு என்று சொல்வார்கள். குரு பகவான் சிம்ம ராசிக்காரர்களுக்கு நிறைய வருமானத்தை தரப்போகிறார். இளைய சகோதரர்களுடன் உறவு வலுவாகும்.
குரு பார்வையால் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். நல்ல வாய்ப்புகள் கை கூடி வந்துள்ளது. முயற்சி செய்தால் புதிய வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவருக்கு அசுர வளர்ச்சியும் பதவி உயர்வும் உண்டு. உங்களுடைய மந்தமான மன சோம்பலான அணுகுமுறையை முதலில் தூக்கி வீசுங்கள். உற்சாகமாக இருங்கள். மனதளவில் சந்தோஷம் நிறைந்து இருக்கும். இதை சரியான நேரத்தில் சரியான பாதையில் தன் வளர்ச்சிக்காக உபயோகப்படுத்த வேண்டும்.
திருமண யோகம் கைகூடி வரப்போகிறது. காதல் மலரும். காதலிப்பவர்களுக்கு பெற்றோர்களின் ஆசியுடன் வெற்றி கிடைக்கும். இன்னும் ஓராண்டுக்கு நீங்கதான் ராஜா அந்த அளவிற்கு உங்களின் பொருளாதார நிலைமை உயரப்போகிறது. அதிர்ஷ்டங்கள் உங்களின் வீடு தேடி வரப்போகிறது. காரணம் குருபகவானின் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீது விழுவதால் பூர்வீக சொத்துக்கள் மூலம் உங்களுக்கு பண வருமானம் வரும்.
உங்களின் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். இளைய சகோதரர்கள் மூலம் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத வகையில் ஆதாயம் கிடைக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். மன அமைதியும் நிம்மதியும் உண்டாகும். குரு உங்களின் ஆயுள்காரகன் என்பதால் ராகு உடன் இணைந்து 6 மாதம் பயணம் செய்யப்போகிறார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான அஸ்வினியில் பயணம் செய்யும் இந்த கால கட்டத்தில் சின்ன சின்ன உடல் உபாதைகள் வந்து போகும்.
ஜூன் மாதம் முதல் குரு பகவான் பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் கால கட்டத்தில் உங்களுக்கு திடீர் பண வரவு வரும். எதிரிகளையும் வழக்குகளையும் வெல்வீர்கள். குரு பகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் பயணம் செய்யும் கால கட்டமான 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் புதிய பதவிகள் தேடி வரும். கவுரவ பதவிகளும் முன்னேற்றமும் தேடி வரப்போகிறது. சிம்ம ராசிக்காரர்களே இந்த குரு பெயர்ச்சியால் வரப்போகும் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள்.












Click it and Unblock the Notifications