குரு பெயர்ச்சி பலன் 2023: பார்வை ஒன்றே போதுமே..குரு பலனால் யாருக்கு ஜாக்பாட் அடிக்கும்?
சென்னை: குரு பகவான் சுப கிரகம். அவரால் நல்லது மட்டுமே செய்ய முடியும் கெடுதல் செய்ய முடியாது. ஒரு சிலருக்கு தசாபுத்தியின் படியோ அல்லது பகையான கிரகத்தை அதிபதியாக கொண்ட ராசிக்காரர்களுக்கோ சில நேரங்களில் தீயதை கொடுத்தால் கூட அது படிப்பினையாகவே இருக்கும். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள்தான் பலனடையும் என்பதால் இந்த குரு பெயர்ச்சியைப் பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். குரு பலனால் திடீர் அதிர்ஷ்டத்தையும் கோடீஸ்வர யோகத்தையும் பெறப்போவது யார் என்று பார்க்கலாம்.

மிதுனம் லாப குரு: சுப கிரகமான குரு பகவான் லாபஸ்தானத்திற்கு வருவது நல்லது. நீண்ட நாட்களாக நினைத்திருந்த காரியம் கைகூடி வரும். அபரிதமான வருமானம் வரும். செல்வ வளம் அதிகரிக்கும். கல்யாண வைபோகம் கைகூடி வரும். குழந்தை பாக்கியத்தை தருவார் திருச்செந்தூர் முருகன். உங்களின் வருமானம் இரட்டிப்பாகும். பிள்ளைகளின் வருமானமும் உங்களுக்கு கை கொடுக்கும். இந்த குரு பெயர்ச்சியால் உங்களுக்கு ஜாக்பாட் கிடைக்கப்போகிறது.
சிம்மம் பாக்ய குரு: குரு பார்வையால் உங்களுக்கு அதிவேகம், ஆற்றல், உடல் தெம்பு மற்றும் உற்சாகம், மேலும் மேலும் கூடும். மனதளவில் சந்தோஷம் நிறைந்து இருக்கும். இதை சரியான நேரத்தில் சரியான பாதையில் தன் வளர்ச்சிக்காக உபயோகப்படுத்த வேண்டும். உங்களுடைய மந்தமான மன சோம்பலான அணுகுமுறையை முதலில் தூக்கி எறியுங்கள் இளைய சகோதிரம் வலுவாகும். அவர்கள் எழுத்து, பாட்டு, இயல், இசை, நாடகம் போன்ற பல வித கலைத்துறையில் ஈடுபட்டு இருந்தால் அபாரமான வளர்ச்சி உண்டு. வேலையில் இருப்பவருக்கு அசுர வளர்ச்சி உண்டு.
துலாம் களத்திர குரு: பொன்னான பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. புதுப்பொலிவோடு திகழ்வீர்கள். கோடி கோடியாக வருமானம் தேடி வரப்போகிறது. இளமைத்துடிப்போடு மாறுவீர்கள். பல வழிகளில் இருந்தும் பணம் வரும்.
கேட்ட இடத்தில் கடன் கிடைக்கிறதே என்று சக்திக்கு மீறி கடன் வாங்காதீர்கள். பயணங்களால் நன்மை உண்டு. புது வேலையும் வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் கிடைக்கும்.
தனுசு பூர்வ புண்ணிய குரு: இந்த குரு பெயர்ச்சியால் அதீத நன்மைகளை அடையப்போவது தனுசு ராசிக்காரர்கள்தான். காரிய வெற்றி உண்டாகும். மனதும் உடலும் உற்சாகமடையும். வாழ்க்கையை மாற்றியமைக்கக்கூடிய திடீர் திருப்பங்கள் தேடி வரப்போகிறது. திடீர் அதிர்ஷ்டமும் அதன் மூலம் பண வரவும் தேடி வரப்போகிறது. அதிர்ஷ்டத்தினால் வரக்கூடிய வாய்ப்புகளை கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள்.

கும்பம் தைரிய குரு: உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும்.
சகல சௌபாக்கியங்களும் உங்களுக்கு வாசல் தேடி வந்து சேரும். நீண்ட நாட்களாக காத்திருந்த சுப நிகழ்ச்சிகள் தேடி வரப்போகிறது. பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணம் சுப காரியம் கைகூடி வரப்போகிறது.
மீனம் குடும்ப குரு: உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்யப்போகிறார். நன்மைகள் நாடி வரப்போகிறது. வேலையில் புரமோசன், இடமாற்றம் கிடைக்கப்போகிறது. நல்ல காலம் பிறந்து விட்டது என்றாலும் ஏழரை சனி சில தடைகளை ஏற்படுத்துவார். உங்களுக்கு என்னவெல்லாம் வேண்டுமோ அதை திருச்செந்தூர் முருகனுக்கு வேண்டிக்கொள்ளுங்கள். நீங்கள் வேண்டுவது அனைத்தும் தருவான்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications