குரு பெயர்ச்சி பலன் 2023: குரு மங்கல யோகம்..குரு சந்திர யோகம்..கஜ கேசரி யோகம் யாருக்கு கிடைக்கும்

உங்களுடைய சுய ஜாதகத்தில் குரு பகவான் எங்கே எப்படி இருக்கிறார் என்று பார்த்து உங்களுக்கு இந்த யோகங்கள் இருக்கிறதா என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: குருபகவானால் சிலருக்கு சில யோகங்கள் கிடைக்கும் அதில் முக்கியமானது குரு சந்திர யோகம். குரு சந்திர யோகம் தவிர குருபகவானால் சில முக்கியமான யோகங்கள் உள்ளன. கஜகேசரி யோகம் நன்மை தரக்கூடிய யோகமாகும்.

குருபகவான் பொன்னவன். தனது பொன்னான பார்வையினால் ஒருவரை சுபப்படுத்துவார். நிறைய நன்மைகளை செய்வார். திருமணம், குழந்தை பாக்கியம், நல்ல வேலை, கல்வி, வருமானத்தையும் தருவார். ஏப்ரல் மாதம் குரு பகவான் மீன ராசியில் இருந்து இடப்பெயர்ச்சியாகி மேஷ ராசியில் உள்ள ராகு உடன் இணையப்போகிறார். ராகு பாவ கிரகமாக இருந்தாலும் குருவினால் சுபத்துவம் அடைகிறார்.

Guru Peyarchi palan 2023: Who will get Guru Mangala Yoga,Guru Chandra Yoga,Gaja Kesari Yoga

ஜாதகத்தில் குரு, ராகு சேர்க்கை பெற்றிருப்பது அல்லது ராகுவை குரு பார்ப்பதனால் இந்த யோகம் உண்டாகும். இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்வின் திடீர் உயர்வையும் எதிர்பாராத தனவரவையும் உண்டாக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும், நட்பும் உண்டாகி மகிழ்ச்சி அளிக்கும்.

குரு பகவான் சந்திரனில் இருந்து 4, 7,10ல் இருந்தால் கஜகேசரி யோகமாகும். கஜ கேசரி யோகம் அமையப்பெற்றவர்கள் கண்ணியமான மற்றும் நல்ல பண்பான நடத்தை உள்ளவர், நிறைய உறவினர்கள் வாய்க்கும் அவர்களை நன்றாக பேணுவார், கண்ணியமான பதவிகள் பொறுப்புகள் வந்து சேரும்,

ஒருவர் பிறந்த ஜாதகத்தில் குரு பகவான் ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய நான்கு ராசிகளில் ஏதாவது ஒன்றில் இருந்தால் குருபகவான் இருந்தால் அவருக்கு பல யோக அம்சங்கள் கூடிவரும். ஏதாவது ஒரு தலைமைப் பொறுப்பில் இருப்பார். வங்கி, நிதித்துறை, நீதித்துறையில் உயர்ந்த பதவிகளை வகிக்கும் பாக்யம் ஏற்படும். சமூகத்தில் இவரின் சொல்லிற்கு ஒரு மதிப்பு இருக்கும். நாடாளும் யோகத்தையும் குரு பகவான் அருள்வார். இந்த நான்கு ராசிகளும் வியாழ வட்டம் என்றும் குரு வளையமாகும்.

ஜாகத்தில் உள்ள உங்கள் ராசியில் குருபகவான் சந்திரன் உடன் இணைந்து இருந்தால் குரு சந்திர யோகம் ஏற்படும். இந்த யோகம் ஏற்படுகிறது. கல்வி ஞானம், உலக அறிவு அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். லக்னாதிபதி சுமாரான நிலையில் இருந்தாலும் ராசிப்படி நன்மைகள் நடைபெறும். குரு பகவானுக்கும் சந்திரனுக்கும் இடையே பார்வை கிடைத்தாலும் குரு சந்திர யோகம் அமையும்.

குரு உடன் மங்களகாரகன் செவ்வாய் இணைவது குருபகவான் செவ்வாயை பார்வையிடுவது குரு மங்கள யோகமாகும். குருவிற்கு நண்பர் செவ்வாய். இருவரும் கூட்டணி அமைத்து ஒரு ஜாதகத்தில் இருந்தாலோ, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலோ இந்த யோகம் ஏற்படும். சொந்த ஜாதகத்தில் குருவிற்கு 4,7,10 ஆம் இடங்களில் செவ்வாய் அமைவது குரு மங்கள யோகமாகும். இயற்கை பாவ கிரகமான செவ்வாய் சுபத்துவம் அடைந்து நன்மை தருவார். விளையாட்டு, ராணுவம், காவல்துறையில் சிறந்து விளங்குவார்.

கஜம் என்றால் யானை கேசரி என்றால் சிங்கம். பல யானைகளுக்கு மத்தியில் வாழக்கூடிய சிங்கம் போன்ற வலிமை இந்த யோகத்தால் உண்டாகும். ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் சந்திரனுக்கு கேந்திரமாகிய 4,7,10ல் அமைந்திருப்பதால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. நீண்ட ஆயுள் புகழ், செல்வம், செல்வாக்கு, உற்றார், உறவினர்களின் ஆதரவுகள் எடுக்கும் காரியங்களில் வெற்றி, போன்ற உன்னதமான நற்பலன்கள் அமையும். அரசியலில் உயர்ந்த பதவிகளை வகிக்க கூடிய யோகம் உண்டாகும்.

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ குரு பகவான் 3,6,10,11 ஆகிய இடங்களில் சுக்கிர புதன் சேர்க்கை பெற்றிருந்தால் வசுமதி யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் ஜாதகர் தன் சொந்த முயற்சியால் முன்னேறுவார். செல்வம், செல்வாக்கு யாவும் சிறப்பாக அமையும்.

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் குரு ஒன்று, நான்கு, ஏழு, பத்து எனப்படும் கேந்திர ஸ்தானங்களில் இருந்து ராகு ஆறாமிடத்தில் இருந்தால் அஷ்ட லட்சுமி யோகம் ஏற்படுகிறது. ஒருவருக்கு ஆறாம் வீட்டில் அசுப கிரகம் அமைவது சிறப்பு அதுவும் ராகு அமைவது அந்த வீட்டின் கடன், நோய், எதிரியை ஒழிக்கும்.

பிறந்த ஜாதகத்தில் குருவும், கேதுவும் இணைந்து ஒரு பாவத்தில் அமர்ந்திருப்பது கேள யோகம் எனப்படும் இது கோடீஸ்வர யோகத்தை தருகிறது. கேதுவிற்கு வலிமையான இடங்களாகச் சொல்லப்படும் விருச்சிகம், கன்னி, கும்ப வீடுகளிலும், மேஷம், கடகம் ஆகியவற்றிலும் இந்த அமைப்பு குரு மற்றும் கேது தசைகளில் ஜாதகருக்கு நல்ல யோகத்தை தரும். குறிப்பாக மேஷம், கடகம் ஆகிய சர ராசிகளில் இந்த இணைப்பு இருக்கும் நிலையில் அந்த ஜாதகர் வெளிநாடு சென்று கோடி கோடியாக சம்பாதிப்பார்.
குருவினால் ஒருவருக்கு சகடயோகமும் ஏற்படும். சந்திரனுக்கு 2,6,8,12ஆம் இடங்களில் சந்திரன் இருந்தால் அது சகடயோகம். ஒருவருக்கு சகடயோகம் வந்தால் ஏற்றம் இறக்கம் நிறைந்த வாழ்க்கை அமையும். ஒருவருக்கு தொழில் முன்னேற்றம் மேலும் கீழும் ஆக இருக்கும். பிறந்த ஜாதகத்தில் சகட யோகம் ஏற்பட்டிருந்து குரு வக்ரம் அடைந்திருந்தாலும் சகட யோகம் வேலை செய்யாது எனவே கவலைப்படத் தேவையில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+