குரு பெயர்ச்சி பலன் 2023: புரமோசன்..சம்பள உயர்வு.. 4 ராசிக்காரர்களுக்கு அள்ளித்தரப்போகும் குரு
சென்னை: நல்ல வேலையும் சம்பள உயர்வும் கிடைக்க குருபகவானின் அனுக்கிரகம் அவசியம். குரு பகவான் ஒருவருக்கு யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரும் கிரகம். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலம் அதிகம் என்பதால் குரு பார்க்க கோடி நன்மை என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர். குருவின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ராசிகளின் மீது விழுகிறது. இந்த குரு பெயர்ச்சியால் யாருக்கு நல்ல வேலை கிடைக்கும் என்று பார்க்கலாம்.
கொரோனா முடிவுக்கு வந்த பிறகு கடந்த ஓராண்டு காலமாகவே பொருளாதார மந்த நிலையால் நிறைய பேருக்கு வேலை போய் விட்டது. பல கம்பெனிகளில் சம்பள குறைப்பு செய்துள்ளதால் மன அழுத்தம் கஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த குரு பெயர்ச்சியால் யாருக்கு புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும் என பார்க்கலாம்.

கடகம்: கடகம் ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு அற்புதமான குரு பெயர்ச்சியாக உள்ளது. தொழில் ஸ்தான குருவினால் புதிய பதவிகள் தேடி வரும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். இடமாற்றங்கள் ஏற்படும். பத்தில் குரு பதவியை தேடித்தருவார் என்றாலும் மேலதிகாரிகளின் உத்தரவுக்கு கட்டுப்படுங்கள். வீண் தர்க்கம் வேண்டாம்.
சிம்மம்: பாக்ய ஸ்தான குரு பகவான் கோடி நன்மைகளை தரப்போகிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. சகலவிதமான நன்மைகளை தரப்போகிறது. படிப்பில் இருந்த தடை, வேலையில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தவர்கள் ஒன்றிணைவார்கள். வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலையும் லாபமும் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். அடுத்தவர்கள் பிரச்சினையில் தலையிட வேண்டாம். கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி குருபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.

துலாம்: குரு பகவானின் நேரடி பார்வையில் அமர்ந்துள்ளீர்கள். குரு பெயர்ச்சியால் தொட்டது துலங்கும். நன்மைகள் அதிகம் நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் இடமாற்றம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
விருச்சிகம்: வேலை இல்லையே என்று கவலைப்பட்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புரமோசனுடன் கூடிய நல்ல சம்பளம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சொந்த தொழில் தொடங்குவீர்கள். சுப காரியங்கள் கை கூடி வரும். பணவருமானம் அபரிமிதமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். அரசியல்வாதிகளுக்கு வெற்றி மீது வெற்றி வந்து சேரும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். இந்த குரு பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக அமையும்.

தனுசு: உங்கள் ராசிநாதன் பூர்வ புண்ணிய குருவாக ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் நிறைய நன்மைகள் நடைபெறும். குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும். குரு பகவானின் பார்வை கிடைப்பதால் ஏற்றங்களும் மாற்றங்களும் நிறைந்த குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. வேலையில் இட மாற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
திடீர் அதிர்ஷ்டமும் யோகமும் வரும்.












Click it and Unblock the Notifications